மத்திய அரசுடன் மட்டுமே டீலிங்.. மாநில அரசுளுக்கு வேக்சின் தர முடியாது.. மாடர்னா, பைசர் அறிவிப்பு!
சென்னை: இந்தியாவில் உள்ள மாநில அரசுகளுடன் வேக்சின் வியாபாரத்தில் ஈடுபட முடியாது, மத்திய அரசுக்கு மட்டுமே வேக்சின்களை நாங்கள் விற்பனை செய்வோம் என்று மாடர்னா மற்றும் பைசர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது தமிழக அரசின் சர்வதேச டெண்டரை பாதிக்க வாய்ப்புள்ளது.
இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க அதிகரிக்க, வேக்சின் தட்டுப்பாடும் உயர்ந்து வருகிறது. இந்தியா மூலம் சர்வதேச சந்தையில் வேக்சின் முறையாக ஆர்டர் செய்யப்படவில்லை. பல்வேறு நாடுகளுக்கு தங்களுக்கு தேவையானதை விட கூடுதலாக வேக்சின்களை ஆர்டர் செய்துவிட்டது.
ஆனால் இந்தியாவில் மத்திய அரசு மக்களுக்கு தேவையான வேக்சின்களை ஆர்டர் செய்யவில்லை. இந்த நிலையில் வேக்சின் தட்டுப்பாடு காரணமாக தற்போது மாநில அரசுகளே வெளிநாட்டு நிறுவனங்களில் வேக்சினை ஆர்டர் செய்துள்ளது.

வேக்சின்
அதன்படி தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், உத்தர பிரதேசம், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்கள் வெளிநாடுகளில் சர்வதேச வேக்சின் டெண்டர்களை விட்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவின் மாநில அரசுகளுடன் வேக்சின் வியாபாரத்தில் ஈடுபட முடியாது, என்று மாடர்னா மற்றும் பைசர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மத்திய அரசுக்கு மட்டுமே வேக்சின்களை நாங்கள் விற்பனை செய்வோம் என்று அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.

ஏன்
எங்கள் விதிப்படி நாங்கள் மத்திய அரசுடன் மட்டுமே ஒப்பந்தம் மேற்கொள்ள முடியும், மாநில அரசுகளுடன் ஒப்பந்தம் செய்ய முடியாது என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. பஞ்சாப் மாநிலம் கொடுத்த ஆர்டருக்கு மாடர்னா நிறுவனம் இந்த பதிலை அளித்துள்ளது. அதோடு எங்களிடம் வேக்சின் கையிருப்பு இப்போது இல்லை.

வேக்சின் இல்லை
இந்த வருட இறுதி வரை எங்களிடம் வேக்சின் கையிருப்பு கிடையாது என்று மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் வேக்சின் இன்றி பஞ்சாப் அரசு மக்களுக்கு வேக்சின் கொடுப்பதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. இன்னொரு பக்கம் டெல்லி அரசு கொடுத்த வேக்சின் ஆர்டருக்கும் இதேபோல் மாடர்னா மற்றும் பைசர் நிறுவனங்கள் பதில் சொல்லி இருக்கின்றன.

தமிழகம்
இதன் மூலம் மாநில அரசுகளுடன் இரண்டு முக்கிய வேக்சின் நிறுவனங்கள் வியாபாரம் மேற்கொள்ள விரும்பவில்லை என்று தெளிவாகிறது. இதை மற்ற நிறுவனங்களும் பின்பற்ற கூடாது. இதனால் தமிழகத்தின் சர்வதேச டெண்டரும் பாதிக்கப்பட உள்ளது.

பாதிக்கம்
தமிழகத்திற்கும் மாடர்னா, பைசர் நிறுவனங்களின் வேக்சின் கிடைக்காமல் போகலாம். ஸ்புட்னிக் வி, ஜான்சனன் ஜான்சன், சினோவேக்ஸ் போன்ற நிறுவனங்களிடம் வேக்சின் வாங்கும் முயற்சியில் தமிழகம் இதனால் ஈடுபட வேண்டும். மாநில அரசுகளுடன் வியாபாரம் செய்ய தயாராக இருக்கும் நிறுவனங்களை தமிழக அரசு அணுக வேண்டும்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications