வேலையை காட்டிய மாண்டஸ்.. புயல் வேணும்னா கரையை கடந்திருக்கலாம்.. ஆனால்.. தமிழ்நாடு வெதர்மேன் வார்னிங்
சென்னை: வலிமை குறைந்த மாண்டஸ் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உள்ளது. இந்த மாண்டஸ் குறித்து முக்கியமான எச்சரிக்கை ஒன்றை தமிழ்நாடு பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த 'மாண்டஸ்' புயல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கரையை கடந்தது. மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்து வலிமை இழந்தது. அதி தீவிர புயலாக இருந்த இந்த மாண்டஸ் புயலாக வலிமை குறைந்தது.
கரையை கடந்த பின் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து வட தமிழக பகுதிகளில் நிலவி வந்தது. இதன் பின் மேலும் நகர்ந்த புயல் தற்போது அரபிக்கடலை நோக்கி சென்றுள்ளது.

வானிலை மையம்
இந்த புயல் விட்டு சென்ற காற்று காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை நிலவரம்
நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் மற்றும் 14ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று லேசான சாரல் மழை ஆங்காங்கே பெய்யும்.

வெதர்மேன்
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள கணிப்பில், வலிமை குறைந்த மாண்டஸ் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உள்ளது. தமிழ்நாட்டில் மேலும் இரண்டு நாட்களுக்கு இது மழை கொடுக்க போகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் நல்ல மழை பெய்ய போகிறது. மாண்டஸ் புயல் காரணமாக ஏற்பட்ட காற்று இழுவை மூலம் இந்த மழை பெய்ய போகிறது. கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் கிழக்கு காற்று மூலம் கனமழை பெய்ய போகிறது. முக்கியமாக கேரளாவில் கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் கனமழை பெய்ய போகிறது. நாமக்கல், திருச்சி, ஈரோடு, சேலம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் அருகிலுள்ள வடக்கு உள்மாவட்டங்களில் இன்று முதல் நாளை வரை நல்ல மழை பெய்யும்.
மேற்குக் காற்று இருப்பதால் தூத்துக்குடியில் வறண்ட வானிலையைக் காணப்படும்.

மழையை கொடுக்கும்
இந்த படத்தை பார்த்தே மழைக்கான காரணத்தை எளிதாக கண்டுபிடிக்க முடியும். இந்த புயல் பெரிய பாதிப்புகள் ஏதுமின்றி கரையைக் கடந்தது மற்றும் சிட்டியில் காற்றின் வேகம் மணிக்கு 70-75 கி.மீ அளவில் இருந்தது. மகாபலிபுரம்,கேளம்பாக்கம் பகுதிகளில் காற்றின் வேகம் மிக அதிகமாகவும், மணிக்கு 90 கி.மீ என்ற அளவிலும் இருந்தது. புயலின் மைய பகுதி காஞ்சிபுரம்-பனப்பாக்கம்-வெம்பாக்கம் பகுதியில் விழுந்தது. வெம்பாக்கம் பகுதியில் 250 mm மழை பெய்தது. பனப்பாக்கத்தில் 198 மி.மீ., காஞ்சிபுரத்தில் 185 மி.மீ. திருவள்ளூரில் ஆவடியில் 170 மி.மீ., சென்னையில் அயனாவரத்தில் 150 மி.மீ மழை பெய்தது. அரேபியன் கடலுக்கு சென்ற பிறகும் இந்த புயல், கிழக்குப் காற்றை அனுப்பி, நல்ல மழையை கொடுக்க போகிறது, என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications