சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெளுக்கப்போகுது வெயில்.. அடிச்சு ஊத்த போகுது அடமழை.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தூத்துக்குடி, தேனி, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 10 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் வெயில் கடுமையாக இருக்கும் என்றும் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. கொளுத்தும் வெயிலுக்கு நடுவே அவ்வப்போது குளிர்காற்றுடன் மழை பெய்வது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி தென்காசியில் அதிகபட்சமாக 4 செமீ மழை பெய்திருந்தது. திருநெல்வேலி மாவட்டம் அய்யக்குடியில் 3 செமீ மழையும், சிவகிரியில் 2 செமீ மழையும் பெய்திருந்தது. இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் சித்தாரிலும், சிவலோகம் மற்றும் சுரளகோட்டில் தலா 2 செமீ மழை பெய்திருந்தது.

ஹேப்பி நியூஸ்.. தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு.. வெயிலும் வாட்டி வதைக்குமாம்!ஹேப்பி நியூஸ்.. தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு.. வெயிலும் வாட்டி வதைக்குமாம்!

நெல்லையில் மழை

நெல்லையில் மழை

அத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணை, புதன் அணை உள்ளிட்ட பகுதியில் தலா ஒரு செமீ மழை பெய்திருந்தது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில்,. நீலகிரி மாவட்டம் குன்னூர், செங்கோட்டை, விருதுநகர் மாவட்டம் பிளவக்கல், கோவை சின்கோனா உள்ளிட்ட இடங்களில் தலா ஒரு செமீ மழையும் பெய்தது.

குமரி, நெல்லையில் மழை

குமரி, நெல்லையில் மழை

இந்நிலையில் தமிழகத்திற்கு அடுத்த 48 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, சேலம், கரூர், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

வறண்ட வானிலை

வறண்ட வானிலை

தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலையே காணப்படும் என்று வானிலைமையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், சேலம், தர்மபுரி மாவட்டங்க்ளில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகக்கூடும் என்பதால் அடுத்து வரும் மூன்றுதினங்களுக்கு விவசாயிகள், பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3,30 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Recommended Video

    Amphan cyclone: வங்க கடலில் உருவான மோசமான புயல் எது தெரியுமா?
    எங்கு எவ்வளவு வெயில்

    எங்கு எவ்வளவு வெயில்

    சென்னையை பொறுத்தவரை முற்பகலில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் பிற்பகலில் தெளிவாகவும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று வெயில் சதம் அடித்துள்ளது. வேலூரில் 102, திருச்சி 102, மதுரை 99, சேலம் 99, காஞ்சிபுரம் 99, நெல்லை 94, சென்னை 93 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது.

    English summary
    Maximum temperature is likely to be close pockets over Madurai, Dindigul, Karur, Tiruchirapalli, Salem and Dharmapuri districts of Tamilnadu. Farmers and general public are advised not to expose themselves to direct sunlight from 1100 hours IST to 1530 hours IST during the above period.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X