Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சக்கரம் சுழலுதா.. மழை முடிஞ்சதா.. இரட்டிப்பு சந்தோஷ அறிவிப்பு.. நாளை முதல் 4 நாட்கள்.. அலர்ட் மக்களே

வெதர்மேன் அழகான வானிலையை ரசியுங்கள் என்று போஸ்ட் பதிவிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "மழை தணிந்தது, அழகான வானிலையை ரசியுங்கள்" என தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்... அத்துடன், எங்கெங்கு மழைக்கு வாய்ப்புள்ளது? என்பது குறித்தும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது... இந்த மழையின் அளவு சில நாட்கள் அதிகமாகவும், சில நாட்கள் குறைந்தும் காணப்படுகிறது.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை இன்றைய தினம் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

சூழ்ந்த வெள்ளம்

சூழ்ந்த வெள்ளம்

அதுபோலவே, இன்றும் நாளையும், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் மழை பெய்து வந்தாலும், தமிழகத்தில் மாண்டஸ் புயல் தாக்கத்தால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்... தொடர்ந்து பெய்த மழையால் ஆங்காங்கே வெள்ள நீர் சூழ்ந்தும் காணப்படுகிறது.

மண்டு புல்லு

மண்டு புல்லு


மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், அதுவும், மழை ஓரளவு தணிந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவரது பேஸ்புக் பக்கத்தில் சில பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.. ஒருபதிவில், "மழை தணிந்தது, அழகான வானிலையை ரசியுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.. பிரதீப்ஜான் இப்படி சொன்னதுமே, இதனை கண்ட பொதுமக்கள், அப்பாடா இப்போதான் நிம்மதியாக இருக்கு என்று அவருக்கு கமெண்டகளை பதிவிட்டு வருகிறார்கள்..

1000 மிமீ

1000 மிமீ

அதேபோல இன்னொரு பதிவு போட்டுள்ளார் வெதர்மேன்.. அதில், "சென்னை மாநகர வரலாற்றில் 1813 முதல் 2021 வரை), அக்டோபர் - டிசம்பர் காலத்தில் (வடகிழக்கு பருவமழை) 1000 மிமீ மழை பெய்தது இல்லை.. 2020ம் ஆண்டு, 1034 மிமீ, 2021-ம் ஆண்டு 1485 மிமீ, 2022 -ம் ஆண்டு 905 மிமீ (12.12 2022 வரை.) பெய்துள்ளது.. இன்னும் 76 மிமீ பெய்துவிட்டால் இந்த வருடமும் ஆயிரம் மிமீ தொட்டுவிடும் என்று பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்ல, நாளைக்கு ஸ்கூல் லீவா அங்கிள்? என்று சிலர் பள்ளிமாணவர்கள் கேள்வி கேட்டும் வருகிறார்கள். அதற்கு வெதர்மேன், பசங்களா, சென்னையில் நாளைக்கு லீவெல்லாம் வரும்னு அரையாண்டு தேர்வுக்கு படிக்காம இருக்காதீங்க.. நல்லா படிங்க என்று அட்வைஸ் ஒன்றையும் தந்துள்ளார்.

மழைப்பொழிவு

மழைப்பொழிவு

இதனிடையே சென்னை வானிலை மைய பாலச்சந்தர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளைய தினம் அதாவது டிசம்பர் 13ம் தேதி தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. டிசம்பர் 14 முதல் 16 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சூறாவளிக்காற்று

சூறாவளிக்காற்று

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில்: லட்சத்தீவு பகுதிகள், கேரளா- கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். டிசம்பர் 14ம் தேதி லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மிச்சப்பகுதி

மிச்சப்பகுதி

டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளை செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.. மேலும், "மாண்டஸ் புயலின் மிச்சப் பகுதி வடதமிழகத்தின் கடற்பகுதிகளில் இருந்து மேற்கு திசையை நோக்கி, நாளை மத்தியகிழக்கு அரபிக்கடலுக்கு செல்லும். அங்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லும்" என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+