வெளுத்து எடுத்த கனமழை.. தமிழ்நாட்டில் எந்ததெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. அதேபோல் தஞ்சை, மயிலாடுதுறை இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. நாகை, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த சனிக்கிழமை பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த இரண்டு நாட்களாக லேசான மழை பெய்து வந்தது.

கடந்த இரண்டு நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது.

மழை

மழை

நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. நேற்று தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்தது. திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. வேலூர், திருப்பத்தூர்,தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பிற்பகலுக்கு பின் மழை பெய்தது.

கனமழை

கனமழை

சென்னை, செங்கல்பட்டு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகாலையில் இருந்து கனமழை பெய்தது. முக்கியமாக சென்னையில் நேற்று அதிகாலையில் இருந்து மழை பெய்து வருகிறது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது. வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது. மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது.

விடுமுறை

விடுமுறை

எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது. அதிகாலையிலேயே பெய்யும் மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த தொடர் மழை காரணமாய் சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் விடாமல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை இந்த மாவட்டங்களில் மழை தொடங்கி இப்போது வரை விடாமல் பெய்து கொண்டு இருக்கிறது.

வேறு எங்கு விடுமுறை

வேறு எங்கு விடுமுறை

அதேபோல் தஞ்சை, திருவாரூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது;
இதனால் இங்கே சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. சென்னையை போலவே செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. ஆனால் கல்லூரிகளுக்கு இதுவரை விடுமுறை அறிவிக்கப்படவில்லை. காலையில் வானிலை நிலவரத்தை பொறுத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .அதேபோல் தஞ்சை, திருவாரூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது;

வேறு எங்கு விடுமுறை

வேறு எங்கு விடுமுறை

அதேபோல் தஞ்சை, திருவாரூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது; இதனால் இங்கே சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. சென்னையை போலவே செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. ஆனால் கல்லூரிகளுக்கு இதுவரை விடுமுறை அறிவிக்கப்படவில்லை. காலையில் வானிலை நிலவரத்தை பொறுத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . அதேபோல் தஞ்சை, மயிலாடுதுறை இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. நாகை, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+