6 மணி நேரமாக நிற்கவில்லை.. சென்னையை புரட்டி எடுத்த மழை.. பல மாவட்டங்களில் வெளுத்த தீவிர கனமழை
சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் இரவு முழுக்க கனமழை வெளுத்து வாங்கியது. அதேபோல் பல்வேறு வட மாவட்டங்களிலும் மழை விடாமல் பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சனிக்கிழமை வடகிழக்கு பருவமழை தொடங்கியது. சனி மற்றும் ஞாயிறு லேசான மழை பெய்தாலும்.. திங்கள் கிழமையில் இருந்து வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்தது.
பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

சென்னை நிலவரம்
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் இரவு முழுக்க கனமழை வெளுத்து வாங்கியது. 6 மணி நேரத்திற்கும் மேலாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முதல்நாள் மாலை சென்னையில் மழை பெய்ய தொடங்கியது. நள்ளிரவு வரை சென்னையில் விடாமல் மழை பெய்தது. பின்னர் அதிகாலையில் இருந்து பிற்பகல் வரை சென்னையில் மழை இல்லை. பின்னர் மீண்டும் பிற்பகல் மழை தொடங்கியது.

மழை நிலவரம்
அதன்பின் மாலைக்கு பின் மீண்டும் இரவு வரை மழை பெய்தது. அதன்பின் நள்ளிரவில் மீண்டும் தொடங்கிய மழை அதிகாலை வரை 6 மணி நேரமாக விடாமல் பெய்து வருகிறது. தற்போது ஒரு சில இடங்களில் மட்டும் மழை விட்டுள்ளது. மற்ற பெரும்பாலான இடங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது

முடக்கம்
வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது விடாமல் பெய்யும் மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

மற்ற மாவட்டங்கள்
இது போக நேற்று இரவு முழுக்க திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இங்கு இரவில் தொடங்கிய மழை தற்போது வரை விடாமல் பெய்து கொண்டு இருக்கிறது. செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டு இருக்கிறது. கடந்த 4 மணி நேரமாக இங்கு மழை பெய்து கொண்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications