சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் கனமழை கொட்டப்போகுது
தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை: உள் தமிழகத்தில் நிலவக்கூடிய மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானதுவரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், தருமபுரி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, தென்காசி ஆகிய 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்தில் மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இன்றைய தினம் வெப்பச்சலனம் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பெரம்பலூர், அரியலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
புதுச்சேரி காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த 2 மணிநேரத்தில் சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
நாளைய தினம் சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஜூலை 8 ஆம் தேதி வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
9 மற்றும் 10ஆம் தேதி வரைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கிருஷ்ணகிரி, ஆரணியில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. பேளூர் 8 செமீ, தாளவாடி, பந்தலூரில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது. உசிலம்பட்டியில் 4 செமீ மழையும், காரைக்குடியில் 3 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
நாளை முதல் வங்கக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 9 மற்றும் 10ஆம் தேதிகளில் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் ஆந்திரா கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.
இன்று முதல் 10ஆம் தேதி வரைக்கும் கேரளா, கர்நாடகா லட்சத்தீவு கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். தென்மேற்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த கடலோர பகுதிகளில் 10ஆம் தேதி வரைக்கும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications