கோடை காலம் ஓவர்! இன்று தமிழகத்தில் வானிலை எப்படி இருக்கும்! எங்கெல்லாம் மழை இருக்கு
சென்னை: தமிழ்நாட்டில் கோடைக் காலம் முடிந்துள்ள நிலையில், இன்று வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது.
இந்த ஆண்டு மே மாதம் முந்தைய ஆண்டுகளைப் போல கடும் வெயில் இல்லை. அசானி புயல் மற்றும் கோடை மழை காரணமாக வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது.
இப்போது தென் மேற்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வரும் காலத்தில் மழை பரவலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழை
அதன்படி இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல அடுத்த 3 நாட்களிலும் வானிலை இதேபோலத் தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

நேற்று
நேற்றைய தினம் தஞ்சை வல்லம், அதிராம்பட்டினம் பகுதிகளில் கணிசமாக மழை பெய்துள்ளது. வெப்பத்தை பொறுத்த வரை மதுரை நகர் பகுதியில் 101.48 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. அதேபோல சென்னையில் 37.3 திருச்சியில் 97.7 பாரன்ஹீட் வெப்பமும், கடலூரில் 98.6 பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகி உள்ளது.

மீனவர்கள்
வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications