வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம்... தமிழகத்தில் மிக மிக கனமழை - நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்
தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர பகுதிகளில் உருவாகும் தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் ஜூலை 11ஆம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. குறைந்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கடையநல்லூரில் 14 செ.மீ. மழை பதிவானது. கள்ளக்குறிச்சி, எறையூரில் தலா 13, ஆரணி, மரக்காணத்தில் தலா 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
https://mausam.imd.gov.in/imd_latest/contents/all_india_forcast_bulletin.php
இந்த நிலையில் வங்கக்கடலில் ஜூலை 11ஆம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. மத்திய மேற்கு - வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு உருவாகும் எனவும் தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர பகுதிகளில் உருவாகும் தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழையின் தீவிரத்தினால் வரும் 14, 15ஆம் தேதிகளில் மத்திய, வட மேற்கு இந்தியாவில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications