அடமழை வெளுக்கப் போகுது.. இரவு முதல் நாளை காலை வரை.. சென்னை மக்களே தயாராக இருங்கள்.. பிரதீப் ஜான்!
சென்னை: இன்று இரவு முதல் காலை வரை சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக பிரபல தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடகடலோர மாவட்டங்களை நோக்கி நகர்வதால், இன்று இரவு மற்றும் நாளை காலை மயிலாடுதுறை முதல் சென்னை வரை பரவலான மழையை எதிர்பார்க்கலாம் என்றும் கணித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 16ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதன்பின் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தீபாவளி தினமான நேற்று மாலை சில பகுதிகளில் மழை பெய்த நிலையில், இன்று காலை முதலே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி இருப்பதால், தமிழ்நாட்டில் கனமழை கொட்டி வருகிறது. அதுமட்டுமல்லாமல் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. மாலையில் சற்று மழை குறைந்த நிலையில், தற்போது தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் புதிய கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் பிரதீப் ஜான், சென்னை மக்களே அடுத்தக் கட்ட மழைக்கு தயாராகுங்கள்.. இன்று இரவு முதல் நாளை காலை வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வட கடலோர மாவட்டங்களை நோக்கி நகர்வதால், இன்று இரவு முதல் நாளை காலை வரை மயிலாடுதுறை முதல் சென்னை வரை பரவலான மழையை எதிர்பார்க்கலாம். இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் நாளை காலை 100 மிமி வரை மழை பெய்திருக்கும் என்று கூறி இருக்கிறார். அதேபோல் நாகை மற்றும் திருவாரூர் பகுதிகளில் இரவு முதல் மழை கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்று தெரிவித்துள்ளார்.
-
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications