10 நிமிடம் தாங்க.. ஓபிஎஸ், எடப்பாடி நேரம் கேட்டது உண்மையா? அமித் ஷா "நோ" சொன்னது ஏன்? ஷாக் பின்னணி
சென்னை: ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டது உண்மையா என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.
9 ஆண்டு பாஜக ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கலந்து கொள்ள இருக்கிறார்.

இதற்காக அமித் ஷா நேற்று தமிழ்நாடு வந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதன்பின் அமைச்சர் அமித் ஷா சென்னையில் உள்ள கிண்டி ஐ.டி.சி ஹோட்டலுக்கு சென்று தங்கினார். அங்கு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் தனியாக ஆலோசனை நடத்தினார்.
அதன்பின் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோருடனும் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு அரசு சார்பாக தமிழக உள்துறை செயலாளர் அமுதா இவருக்கு வரவேற்பு கொடுத்தார்.
கூட்டங்கள்: மத்திய மோடி அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் வகையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடத்துகிறது தமிழ்நாடு பாஜக. அதில் முதலாவது பொதுக்கூட்டம் மதுரையில் நடந்தது.
அதில் அண்ணாமலை கலந்து கொண்டார். அடுத்து வேலூரில் இன்று நடக்கிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்காக, நேற்று இரவு சென்னை வந்தவர், கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார்.
நேரம் கேட்ட அதிமுக: சென்னை வந்த அமித் ஷாவை சந்திக்க, அதிமுகவின் எடப்பாடியும், பன்னீரும் நேரம் கேட்டிருந்தனர். மிக ரகசியமாக தங்களின் சோர்ஸ்கள் மூலமாக தனித்தனியாக இவர்கள் முயற்சித்தனர். அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.
அதீத முயற்சிகள் எடுத்தும் அவர்களுக்கு நேரம் கொடுக்கவில்லை. ஆனால், எடப்பாடியும் பன்னீரும் அமித் ஷாவை சந்திக்க நேரமே கேட்கவில்லை என தகவல் பரவியிருக்கிறது. உண்மையில், அவர்கள் நேரம் கேட்டிருந்தனர். நேரம் ஒதுக்க இயலாத சூழலை அமித் ஷா தெரிவித்திருக்கிறார்.
ஆனால், இவர்கள்தான், ஹோட்டலில் தங்கும் நேரத்தில் ஒரு 10 நிமிடம் தந்தால் கூட போதும் ; பொக்கே கொடுத்துவிட்டு வந்து விடுவோம் என கேட்டுக் கொண்டனர். அப்போது, சென்னைக்கு 9:15-க்கு வரும் அமித் ஷா, 9:30-க்கு ஹோட்டலுக்கு வந்து விடுவார். அங்கு பாஜக தலைவர்கள் மற்றும் சிலரை சந்தித்து விவாதிக்க அமித் ஷா முடிவு செய்திருப்பதால், அந்த சந்திப்பு முடியவே நள்ளிரவு ஆகிவிடும்.
அதனால், இந்த பயணத்தில் உங்களை சந்திக்க வாய்ப்பில்லை என்பதையும், ஒருவேளை ப்ரோக்கிராம் சேன்ஞ் ஆனால் நேரம் ஒதுக்குவது குறித்து சொல்லப்படும் என்று தெளிவு படுத்தி விட்டனர். இதுதான் நடந்திருக்கிறது. நேரம் கேட்கப்பட்ட தகவல் வெளியாகிய நிலையில் அமித் ஷாவுடன் சந்திப்பு நடக்கவில்லை எனில், எடப்பாடியையும் பன்னீரையும் சந்திக்க அமித் ஷா விரும்பவில்லை என்ற இமேஜ் உருவாகும்.
முக்கியமாக பல்வேறு எதிர்மறை விமர்சனங்களையும் தங்களுக்கு தோன்றியதையெல்லாம் பத்திரிகைகளும் ஊடகங்களும் எழுதும். இதனை உணர்ந்தே, நாங்கள் அமித் ஷா நேரமே கேட்கவில்லை என்று இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் சொன்ன யோசனையின் படி அவரது ஆதரவாளர்கள் பரப்பினர். அதுதான் நேரம் கேட்கவில்லை என்பதாக பதிவாகியுள்ளது. நிஜத்தில் அவர்கள் நேரம் கேட்டதும் உண்மை ; அமித் ஷா நேரம் கொடுக்காததும் உண்மை என்று தெளிவுபடுத்துகிறார்கள் தமிழ்நாடு பாஜகவினர்.
-
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications