சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கிட்டக் கூட விடலை! போஸ்டர் அடிக்க நாங்க.. புகைப்படம் எடுக்க அவங்களா? புலம்பும் தளபதியின் தம்பிகள்!

Google Oneindia Tamil News

சென்னை : நடிகர் விஜய் கடந்த சில நாட்களில் இருமுறை ரசிகர்கள் சந்திப்பை நடத்தி இருக்கும் நிலையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு போஸ்டர் அடித்து புகழாரம் பாடுபவர்களுக்கே விஜயை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், 20 ஆண்டுகளாக ரசிகர் மன்றத்தில் இருக்கும் மற்றவர்களை மருந்துக்கு கூட சென்னைக்கு அழைத்துச் செல்லவில்லை என தளபதியின் தம்பிகள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறகு அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் இளைய தளபதியாக இருந்து தற்போது தளபதியாக உயர்ந்திருக்கும் நடிகர் விஜய்.

நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான விஜய் தற்போது தமிழக மட்டுமல்லாது கேரளா ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட மாவட்டங்களிலும் குறிப்பிடத் தகுந்த அளவு மார்க்கெட் உள்ள நடிகராக இருக்கிறார்.

பாய் அஸ்ஸலாமு அலைக்கும்! பிரியாணி சூப்பரா இருந்துச்சு! மாஸ்டரை அழைத்து பாராட்டிய நடிகர் விஜய்! பாய் அஸ்ஸலாமு அலைக்கும்! பிரியாணி சூப்பரா இருந்துச்சு! மாஸ்டரை அழைத்து பாராட்டிய நடிகர் விஜய்!

 நடிகர் விஜய்

நடிகர் விஜய்

ஆரம்பத்தில் நிறம், உருவ கேலி உள்ளிட்டவற்றுக்கு ஆளானவர் அதையே தனது பிளஸ் பாயிண்டாக எடுத்துக்கொண்டு காதல், நடிப்பு, நடனம், சண்டை காட்சிகள் என கலந்து கட்டி மாஸ் காமித்து தற்போது தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது படங்கள் ஏ,பி,சி என அனைத்து சென்டர்களிலும் பட்டையை கிளப்பி வருகிறது. தோல்வி படங்கள் என்றால் கூட 100 கோடி 200 கோடி என அசால்டாக கலெக்ஷன் செய்யும் அளவுக்கு நடிகர் விஜயின் ரசிகர் பட்டாளம் மிக வலுவாக இருக்கிறது. ஆரம்பத்தில் ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி அதனை அரசியல் ஈடுபாடு கொண்ட இயக்கமாக மாற்றுவதற்கு எஸ் ஏ சந்திரசேகர் தீவிர முயற்சி மேற்கொண்டார்.

எஸ்.ஏ.சந்திரசேகர்

எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜயை விட அதிக இடங்களில் சுற்றுப்பயணம் செய்து ஆலோசனைக் கூட்டங்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏவாக இருந்த புஸ்ஸி ஆனந்த் வருகைக்குப் பிறகு எஸ்.ஏ சந்திரசேகரே ஓரம் கட்டப்பட்டார். நிர்வாகிகள் நியமனம் தொடங்கி உறுப்பினர் சேர்க்கை வரை விஜய் மக்கள் இயக்கத்தை பொறுத்தவரை ஆனந்த் எடுப்பது தான் முடிவு அவர் வைத்தது தான் சட்டம் என்ற அளவுக்கு மாறிப்போனது. விஜய் நடிக்க தொடங்கியதில் இருந்து அவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்த பலர் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ரசிகர்கள் சந்திப்பு

ரசிகர்கள் சந்திப்பு

இடையில் வந்த பலர் மாநில பொறுப்புகளிலும் மாவட்ட தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளிலும் ஆக்கிரமித்து இருக்கிறார்கள். அதற்கெல்லாம் புஸ்ஸி ஆனந்தின் தலையீடு தான் காரணம் என சந்திரசேகரே பல நேரங்களில் சொல்லி இருக்கிறார். தற்போது வாரிசு திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ரசிகர்களை சென்னை பனையூரில் இருக்கும் தனது விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு வரவழைத்து பிரியாணி விருந்து வைத்து அசத்தியதோடு அவர்களோடு தனித்தனியே புகைப்படமும் எடுத்துக் கொண்டார் விஜய்.

புலம்பும் தம்பிகள்

புலம்பும் தம்பிகள்

தனது ஆஸ்தான நடிகரை ஒரு முறையாவது நேரில் பார்த்து விடமாட்டோமா என ஏங்கிக் கிடந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சி கடலாகவே தெரிந்தது. தொடர்ந்து அரியலூர் செங்கல்பட்டு திண்டுக்கல் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விஜய் ரசிகர்கள் சென்னைக்கு படையெடுத்தனர். இருமுறை அவர்களை சந்தித்து விஜய் நேரில் பேசியதோடு பிரியாணி விருந்தும் வைத்தார். தற்போது இது தொடர்பான பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளங்களில் இருந்திருக்கிறது. ஒருபுறம் வாரிசு படத்திற்கு சிக்கல் இருந்திருக்கும் நிலையில் அதனை பெரிய வெற்றி படமாக மாற்ற வேண்டிய கடமை விஜய்க்கு இருக்கிறது. இதற்காக தனது ரசிகர்களை அவர் பயன்படுத்திக் கொள்கிறார் என ஒரு தரப்பும், எவ்வளவு பிசியான நடிகராக இருந்தாலும் தனது ரசிகர்களை மதித்து விருந்து வைக்கிறாரே என மற்றொரு தரப்பும் விவாதித்து வருகின்றனர்.

வெடித்தது மோதல்

வெடித்தது மோதல்

இது ஒரு புறம் இருக்க தற்போது விஜய் ரசிகர்களுக்கு உள்ளாகவே மோதல் வெடித்திருக்கிறது. அதாவது புஸ்ஸி ஆனந்த் வருகைக்குப் பிறகு 30 ஆண்டுகளாக நடிகர் விஜய்யின் ரசிகர்களாக இருந்தவர்கள் ஓரம் கட்டப்பட்டு தற்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாமல் போய்விட்டது. மாவட்ட தலைவர்கள் தொடங்கி பல கிளை நிர்வாகிகள் வரை காணாமல் போய்விட்டனர். ஆனந்துக்கு நெருக்கமாகவோ அல்லது அவருக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மட்டுமே மாநில பொறுப்புகள் முதல் மாவட்ட தலைவர் பொறுப்பு வரை ஆக்கிரமித்திருக்கின்றனர். மாவட்ட தலைவர்களுக்கு யாரெல்லாம் போஸ்டர் அடிக்கிறார்களோ சமூக வலைதளங்களில் வாழ்த்துப் பா பாடுகிறார்களோ அவர்களுக்கு விஜய் மக்கள் இயக்க உறுப்பினர் அட்டை கூட வழங்கப்படும் என குமுறி வருகின்றனர்.

தலைமைக்கு நெருக்கம்

தலைமைக்கு நெருக்கம்

தற்போது சென்னை பனையூரில் நடிகர் விஜய் சந்திப்பு போதும் கூட மாவட்ட தலைமைக்கு நெருக்கமாக இருந்தவர்கள் போஸ்டர் அடித்தவர்கள் பணம் செலவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதாகவும் உண்மையான ரசிகர்களின் ஒருவர் கூட அங்கு இல்லை எனக்கு கூறுகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் விஜய் குடும்பம் தளபதியின் தம்பிகள் என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளால் புறக்கணிக்கப்பட்ட ரசிகர்கள் பலரும் போஸ்டர்கள் மூலமும் சமூக வலைதள பதிவுகள் மூலம் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இது போன்ற உண்மையான ரசிகர்களை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஓரம் கட்டி விட்டு முகஸ்துதி பாடுபவர்களை மட்டுமே அருகில் வைத்துக் கொள்வதாக நம்மிடம் பேசிய சில தம்பிகள் கூறினர்.

விஜய் மீது தவறில்லை

விஜய் மீது தவறில்லை

தந்தை எஸ் ஏ சந்திரசேகரையே ஓரம் கட்டிய விஜய் இயக்க நிர்வாகிகளுக்கு, சாதாரண ரசிகர்கள் எல்லாம் ஒரு பொருட்டாக என பேசி வருகின்றனர். அதே நேரத்தில் இது போன்ற நிகழ்வுகள் எதுவும் விஜய்க்கு தெரியாமல் சில முக்கிய நிர்வாகிகள் பார்த்துக் கொள்கிறார்கள். விஜய்க்கு தெரிந்தால் நிச்சயம் அவர் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார். பல்வேறு காலங்களில் தனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களை என்றுமே விஜய் விட்டு தர மாட்டார் என கூறும் அவர்கள் என்றாவது ஒருநாள் இது விஜய்க்கு தெரிய வரும் அப்போது உண்மையான ரசிகர்களுக்கு மதிப்பு கிடைக்கும் எனக் கூறி வருகின்றனர்.

English summary
While actor Vijay has held two fan meetings in the last few days, Thalapathy's brothers have been lamenting on social media that only those who put up posters and sing his praises were given an opportunity to meet Vijay's fans and did not take others who have been in the fan club for 20 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X