சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக முதல்வர் ஸ்டாலினுடன்- மம்தா பானர்ஜி சந்திப்பு.. தேசிய அளவில் கவனம் பெற்ற நிகழ்வு

Google Oneindia Tamil News

சென்னை: 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த சந்திப்பின்போது இருவரும் அரசியல் உள்பட பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதித்து வருவதாக கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக மம்தா பானர்ஜி உள்ளார். மேற்கு வங்க மாநில ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த இல கணேசன் உள்ளார். இவரது சகோதரின் 80வது பிறந்தாள் விழாவில் பங்கேற்க வரும்படி மம்தா பானர்ஜிக்கு, இல கணசேன் அழைப்பு விடுத்தார். அதன்படி 2 நாள் சுற்றுப்பயணமாக மம்தா பானர்ஜி தமிழகம் வந்தார்.

West Bengal CM Mamata Banerjee Meets with Tamil Nadu CM Stalin and discussed

இந்த சுற்றுப்பயணத்தின்போது சென்னையில் வைத்து முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இடையே சந்திப்பு நடக்கும் என்ற அறிவிப்பு வெளியானது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளதால் இந்த சந்திப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்தததாக கருதப்பட்டது.

அதன்படி இன்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்திக்க மம்தா பானர்ஜி சென்றார். மம்தா பானர்ஜியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். இதையடுத்து இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த வேளையில் தற்போதைய தேசிய அரசியல், 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இருவரும் விவாதிக்கலாம் என கூறப்படுகிறது.

English summary
West Bengal Chief Minister Mamata Banerjee, who has arrived in Tamil Nadu on a 2-day tour, is holding talks with Chief Minister Stalin at his residence in Alwarpet, Chennai. It is reported that during this meeting, the two are consulting on various matters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X