"என்னால் முடியல! சீமானை எதுவும் செய்ய முடியாது!" நள்ளிரவில் புகாரை வாபஸ் பெற்ற பின் விஜயலட்சுமி பரபர
சென்னை: சீமான் மீதான புகாரை நள்ளிரவில் நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்ற நிலையில், அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துவிட்டு ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது குறித்து அவர் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார்.

இந்த வழக்கு குறித்த விசாரணைக்குச் சீமானை நேரில் ஆஜராக போலீஸ் சம்மன் அனுப்பிய போதிலும் அவர் ஆஜராகவில்லை. இதற்கிடையே நேற்றிரவு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு வந்த விஜயலட்சுமி சீமான் மீதான அனைத்து புகார்களையும் வாபஸ் பெற்றார்.
விஜயலட்சுமி: அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "போலீசாரின் உரியப் பாதுகாப்புடன் தான் இருந்தேன். வீரலட்சுமிக்கு தெரிந்த இடத்தில் தான் தங்கி இருந்தேன். இருப்பினும், கடந்த சில நாட்களாக வீரலட்சுமி ஒரு ரூட்டில் செல்கிறார். என்னையும் வேறு ஒரு ரூட்டில் தள்ளப் பார்க்கிறார். எதுவாக இருந்தாலும் என்னைக் கேட்டுவிட்டுப் பேசும்படி கூறியிருந்தேன். நான் தங்கி இருந்த இடத்தில் இருந்து நேற்றிரவே என்னை வெளியே செல்லும்படி சொன்னார்கள்.
இரவு நேரம் என்பதால் போலீஸ் தான் அங்கே பேசி தங்க வைத்தனர். அங்கே எனக்குக் காலையில் உணவு கூட கிடைக்கவில்லை. போலீஸ் தான் வாங்கிக் கொடுத்தார்கள். இப்படி வெளியே சொல்ல முடியாத துன்புறுத்தல்களை நான் எதிர்கொண்டேன். இதன் காரணமாகவே நான் புகாரை வாபஸ் வாங்க முடிவு செய்தேன். நான் இப்போது பெங்களூர் கிளம்புகிறேன். யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. சீமானிடமும் கூட இது குறித்துப் பேசினேன்.

கொச்சைப்படுத்தினார்கள்: புகார் அளித்த என்னையே கொச்சைப்படுத்தினார்கள். இது எனக்கே டார்ச்சாக இருந்தது. இதை மேலும் தொடர எந்தவொரு எண்ணமும் இல்லை. போலீஸ் நடவடிக்கை சற்று மெதுவாக இருந்தது. எனக்கு 20 சம்மன் அனுப்பினாலும் எதுவும் செய்ய முடியாது எனச் சீமான் கூறிய பிறகும், சம்மன் அனுப்பி வந்தனர்.
இதில் பல கொடுமைகளை எதிர்கொண்டேன். வீரலட்சுமி சொன்னதும் என்னை அதிகம் கொடுமைப்படுத்தினார்கள். சீமான் பேசுவதும் எனக்கு நிறையக் கஷ்டமாக இருக்கிறது. என்னால் இவ்வளவு தான் முடிந்தது. இந்த விவகாரத்தில் என்னால் இனியும் முடியாது.. இன்றைக்குச் சாப்பாட்டிற்குக் கூட வழியில்லாமல் போனது. இரண்டு வாரம் வீட்டுச் சிறை போலவே இருந்தேன்.. மொபைல் கூட இல்லாமல் தான் இருந்தேன். வரும் காலத்தில் இதைத் தொடர விரும்பவில்லை.

சீமானுக்கு அதிக பவர்: நாங்கள் இந்த விவகாரத்தில் முழு முயற்சி எடுத்தோம். இருப்பினும், உரிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. விசாரணை நடந்த விதத்தில் திருப்தி இல்லை. தமிழ்நாட்டில் சீமானுக்கு அதிக பவர் இருக்கிறது போல.. அவரை தாண்டி எதுவும் செய்ய முடியாது போல.. நான் எனது தோல்வியை ஒப்புக் கொள்கிறேன். இப்போது சீமான் தான் இங்கே பவர்புல்லாக இருக்கிறார் போல..
எதிரி என்றால் தான் மனவேதனையாக இருந்திருக்கும். நான் வாழ்ந்த நபர் தானே.. பல விஷயங்கள் சொன்னார். இதற்கு மேல் என்னால் சண்டை போட முடியாது. சீமான் மகிழ்ச்சியாக இருக்கட்டும். அவர் வெற்றிகரமாக இருக்கட்டும். இதுவே போதும்.
எதுவும் செய்ய முடியாது: சீமானுடன் நான் பேசினேன்.. எல்லாம் விஜயலட்சுமியை வைத்துப் பயன்படுத்தவே பார்க்கிறார்கள். யாரும் எனக்கு ஆதரவாக நிற்கவில்லை.. நான் மட்டும் தனியாகக் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். அவரை இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது போல.. நான் இதை மேலும் மோசமாக்காமல் விலகிக் கொள்கிறேன்.

இந்த விஷயத்தில் நான் பணம் எதையும் வாங்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். நாங்கள் இந்த விவகாரத்தைப் பேசி சரி செய்து கொண்டோம். எனக்கு போதிய ஒத்துழைப்பு இல்லாததே காரணம். சமூக வலைத்தளங்களில் என்னை ரொம்பவே அசிங்கப்படுத்தினார்கள். இதனால் போதும் என்ற முடிவுக்கு வந்து கொண்டேன். சாதாரண நபருக்கு எதிரான வழக்கு என்றால் நடவடிக்கை வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால், அதிகாரத்தில் உள்ள ஒருவருக்கு எதிராக என்பதால் எதையும் செய்ய முடியவில்லை.
திமுகவால் சீமானை கைது செய்ய முடியாது: மீண்டும் இந்த விவகாரத்தைத் தொடர வேண்டாம் என்பதாலேயே பேசி சமரசமாக முடித்துக் கொண்டோம். இங்கே நியாயம் யார் பக்கம் இருந்தது என்பதில் விஷயம் இருக்கவில்லை. யாரிடம் பவர் இருந்தது என்பதே இதை முடிவு செய்தது. திமுக அரசால் சீமானை கைது செய்ய முடியுமா என எனக்குத் தெரியவில்லை. அவரை விசாரணைக்குக் கூடக் கொண்டு வர முடியில்லை. இதனால் இனியும் போராடுவதில் அர்த்தம் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications