எவ்வளவு சொத்து இருந்தாலும் ஓவர் நைட்டில் காலியாகும்.! இதை செய்யுங்க முதல்ல! ஆனந்த் சீனிவாசன் பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இங்கே பொதுமக்களிடம் எவ்வளவு சொத்து இருந்தாலும் கூட ஒரு விஷயம் முக்கியம்.. அது செய்யவில்லை என்றால் ஒரே நாளில் எல்லாம் காலியாகலாம் என எச்சரித்துள்ளார்.

தமிழ்நாட்டின் முக்கியமான பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் ஆனந்த் சீனிவாசன்.. பொருளாதாரம் என்றாலே பொதுமக்கள் அலறி ஓடும் நிலையில், அதை அனைவருக்கும் புரியும் வகையில் விளக்குபவர் ஆனந்த் சீனிவாசன்.

 What Anand Srinivasan said about raise of medical inflation in the nation

சேமிப்பு, முதலீடு குறித்து அவரது பல வீடியோக்கள் கடந்த காலங்களில் டிரெண்டாகி இருக்கிறது. குறிப்பாக ஒரு குடும்பத்திற்கு நிச்சயம் 400 கிராம் தங்கம் வேண்டும்.. கல்யாணம் செய்ய குடும்பத்திற்கு 40 ஆயிரம் சம்பாதிக்க வேண்டும் என அவர் சொன்ன வீடியோக்கள் எவர் கிரீன். நம்மில் பலருக்கும் ஆனந்த் சீனிவாசனை இதன் மூலமே தெரிந்திருக்கும்.

ஆனந்த் சீனிவாசன்: இதற்கிடையே பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் தனது சமீபத்திய வீடியோவில், "சமீபத்தில் ஆங்கில செய்தித்தாள் ஒன்றில் அதிகரித்துள்ள மருத்துவச் செலவுகள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியிருந்தது. அதில் மருத்துவச் செலவுகள் கண்ணா பின்னானு எகிறி இருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது. குறிப்பாக சில குறிப்பிட்ட சிகிச்சைகளான செலவு 3 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது.

கோரப்பட்ட இன்சூரன்ஸ் தொகையை வைத்து இதைக் கணக்கிட்டுள்ளனர். பொதுவாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முடிந்தவரைக் கட்டணத்தைக் குறைத்தே கேட்பார்கள். அப்படியிருந்தும் இந்தளவுக்கு அதிகரித்துள்ளது என்றால் நிலைமை அந்தளவுக்கு மோசம் என அர்த்தம்.

போதாது: காப்ரேட் இன்சூரன்ஸ் எப்போதும் ஒருவருக்கு பத்தவே பத்தாது. சராசரியாக காப்ரேட் இன்சூரன்ஸில் 3 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது. இது பத்தாது. குறைந்தது ஒரு குடும்பத்திற்கு 5 லட்சமாவது வேண்டும். பெற்றோருக்கு 5 லட்சம் எடுக்க வேண்டும். அதுதான் சரியாக இருக்கும்.

காப்ரேட் இன்சூரன்ஸ் இருந்தாலும் 40, 45 வயதுக்குள் வெளியே ஒரு மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்ள வேண்டும். காப்ரேட் இன்சூரன்ஸில் தரப்படும் தரும் தொகையைச் சுத்தமாக பத்தாது. காப்ரேட் இன்சூரன்ஸ் என்பது நாம் ஓய்வு பெற்றவுடன் கிடைக்காது. அதன் பிறகு என்ன செய்ய முடியும்.. இந்தியாவில் 50, 55 வயதைத் தாண்டிவிட்டால் இன்சூரன்ஸ் கிடைப்பது ரொம்பவே கடினம்.

இந்தியாவில் பலரும் நோய் வந்த பிறகு ஓடிச் சென்று இன்சூரன்ஸ் எடுக்க முயல்வார்கள். அதெல்லாம் நடக்காது. முன்பே இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும். இதை நாம் ஒரு தேவையற்ற செலவாகப் பார்க்கக் கூடாது. இன்சூரன்ஸ் என்பது பல பேர் இணைந்து நோய்வாய்ப்பட்ட ஒருவரைக் காப்பாற்றுவது போல.. அதில் எனக்கு என்ன லாபம் என ஒவ்வொரு முறையும் பார்க்கக் கூடாது.

 What Anand Srinivasan said about raise of medical inflation in the nation

ஒரு நாள் அத்தனையும் காலியாகும்: என்னைக்காவது ஒரு நாள் நாம் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்குச் செல்லும் போது இன்சூரன்ஸ் தேவை.. இல்லையென்றால் ஒரே தீட்டாகத் தீட்டிவிடுவார்கள். எனவே, இன்சூரன்ஸை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். இன்சூரன்ஸ் என்பதை ஒரு முதலீடாகப் பார்க்காமல்.. ஆபத்தைக் குறைக்கும் ஒரு தேவையான செலவாகவே பார்க்க வேண்டும். குறைந்தது 5 லட்சம் கவர் கொண்ட மருத்துவ காப்பீடும், ஒரு நல்ல டெர்ம் இன்சூரன்ஸும் நிச்சயம் அனைவருக்கும் தேவை" என்று அவர் கூறினார்.

அதாவது முறையான இன்சூரன்ஸ் இல்லை என்றால் எதாவது நோய்வாய்ப்பட்டால் ஒரே நாளில் மருத்துவச் செலவுக்கு மொத்த காசும் காலியாகும் என்று அவர் எச்சரித்துள்ளார். இது பொதுவான செய்தி மட்டுமே.. இதை யாரும் பொருளாதார ஆலோசனையாகக் கருதக் கூடாது. பொருளாதார ரீதியாக முதலீடு செய்வதற்கு முன்பு நிதி ஆலோசகரிடம் உரிய ஆலோசனை பெற வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+