வருமான வரி மாற்றம் டூ வங்கி கணக்கில் வரும் ரூ. 5 லட்சம் வரை.. பட்ஜெட்டில் 10 அம்சமான அறிவிப்புகள்
சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் பின்வரும் 10 முக்கியமான அறிவிப்புகள் வெளியாகின.
1. நாடு முழுக்க இவி பேட்டரிகள் தயாரிக்க சலுகைகள் வழங்கப்படும், லித்தியம் பேட்டரிக்கான இறக்குமதி சுங்கவரி ரத்து செய்யப்படும், மின்சார வாகன மற்றும் மொபைல் போன்களுக்காக தயாரிக்கப்படும் பேட்டரிகளுக்கு உற்பத்தி வரி சலுகை வழங்கப்படும்.

2. காப்பீட்டுத்துறையில் 100% அந்நிய முதலீடுக்கு அனுமதி அளிக்கப்படும்.
3. Swiggy, Zomato உள்ளிட்ட ஆன்லைன் செயலி ஊழியர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்படும். வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகள் வாழ்வை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
4. அசாமில் யூரியா உற்பத்தி செய்ய ஆலை அமைக்கப்படும். இந்திய அஞ்சல்துறை, மிகப்பெரிய அளவிலான லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும். விவசாயிகளுக்கான 'கிசான் கிரெடிட் கார்டு' உச்சவரம்பு ₹3 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்த்தப்படும். . தன் தன்யா கிருஷி என்கிற திட்டம் அறிவிக்கப்படுகிறது
5. குறைந்த உற்பத்தி திறன் கொண்ட 100 மாவட்டங்கள் இந்த திட்டத்தின் முக்கிய இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. 2047க்குள் 10 ஜிகாவாட் அணுசக்தி உலைகளை உருவாக்குவோம்,. அணுசக்தி சட்டத்தில் இதற்கு தேவையான திருத்தங்கள் செய்யப்படும், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 5 சிறிய அணுஉலைகள் 2033க்குள் செயல்படத் தொடங்கும்.
6. பொம்மைகள் தயாரிப்பில் இந்தியாவை, சர்வதேச கேந்திரமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ₹1.5 லட்சம் கோடி, மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும். சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில் AI மையம் அமைக்கப்படும்.
7. ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் என்ற திட்டத்தில் 100% இலக்கை அடைய, ஜல் ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிப்பு செய்யப்படும். பீகாரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும், பாட்னா விமான நிலையம் விரிவு செய்யப்படும்.
8. இளைஞர்கள் முன்னேற்றம், விவசாயம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட 10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிப்பு; வரி விதிப்பு, நகர்ப்புற மேம்பாடு, கனிம வளம், நிதி மேலாண்மை, மின்சாரம், ஒழுங்குமுறை ஆகிய 6 துறைகளில் சீரமைப்பு செய்யப்படும். பட்டியலின, பழங்குடியின பெண் தொழில்முனைவோர் 5 லட்சம் பேருக்கு தலா ₹2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.
9. அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும். இந்த திட்டத்தில் உற்பத்தி குறைவாக உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயத்து அரசு செயல்படுகிறது
10. புதிய வருமான வரி பிரிவின் கீழ் உள்ளவர்களுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதை பின்வரும் வகையில் புரிந்து கொள்ளலாம். இந்த சலுகை முதலில் எல்லோருக்கும் கிடையாது. புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கே அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications