"ஹீரோ" ஸ்டாலின்.. அந்த 2 மெசேஜ்கள்.. யாருக்குன்னு தெரியுதா?.. டெல்லியில் தூவிய முதல் விதை
2 மெசேஜ்களை டெல்லியில் இருந்து சொல்லி உள்ளார் ஸ்டாலின்
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசிய அரசியலில் வியந்து பார்க்கப்பட்டு வருகிறார்.. அந்த வகையில், 2 மெசேஜ்களையும் டெல்லியில் இருந்து வெளிப்படுத்தி உள்ளது, அரசியல் கட்சிகளை கவனிக்க வைத்து வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றுள்ள நிலையில், முக்கிய தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.. திமுக அலுவலக திறப்பு விழாவுக்கான பயணமாக இது இருந்தாலும், அரசியல் நகர்வுகளின் அதிர்வுகள் அதிகமாகவே கேட்டு வருகின்றன.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் ஒரு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியானது பலவித தாக்கங்களை டெல்லியில் ஏற்படுத்தி உள்ளது..

3வது பெரிய கட்சி
அந்த பேட்டியில் "திமுக இந்திய நாடாளுமன்றத்தில் தற்போதைய நிலையில் 3வது பெரிய கட்சி.. நாட்டின் பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளை தீர்மானிப்பதில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.. தேர்தல் நேரத்தில் மட்டும் கூட்டணி அமைத்து, தொகுதிகளை பங்கிட்டு கொள்ளாமல், கொள்கை அளவில் நட்புறவு கொண்டுள்ளோம். இதுதான், தமிழகத்தில் எங்கள் கூட்டணியின் வெற்றிக்கு காரணம்.

சென்னை
காங்கிரஸ் கட்சியும், தேசிய அளவில் இதுபோல் கொள்கை அளவில் மற்ற கட்சிகளுடன் நட்புறவை ஏற்படுத்த வேண்டும். சென்னையில், காங்கிரஸ் எம்பி ராகுல் முன்னிலையிலேயே இதை நான் தெரிவித்தேன். தமிழகத்தில் திமுகவுடன் இருப்பது போல் அகில இந்திய அளவில் கட்சிகளுடன் கொள்கை ரீதியான நட்புறவை காங்கிரஸ் வளர்க்க வேண்டும்.. தேசிய அரசியலில் திமுக மிக முக்கியமானது.. பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும்.

வேறுபாடுகள்
இதில் காங்கிரஸ், இடதுசாரிகள், சிறிய கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும், அரசியல் வேறுபாடுகளை மறந்து இணைய வேண்டும். ஒற்றுமைதான் பலம் என்பதை அனைவரும் உணர வேண்டும்... நாட்டின் ஜனநாயகம், கூட்டாட்சி ஆகியவற்றை பாதுகாக்க இந்த கூட்டணி அவசியம் ஏற்பட வேண்டும்... பாஜகவை எதிர்ப்பது என்பது, தனிப்பட்ட கட்சி மீதான வெறுப்பாக கருத கூடாது... பாஜகவின் கொள்கைகளை விமர்சிக்கிறோம்.

பாஜக
ஆனால், அக்கட்சியின் தலைவர்களை நாங்கள் தனிப்பட்ட முறையில் விமர்சித்தது இல்லை... தமிழகத்தில் மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தையும் ஒன்றிணைத்து பாஜகவை ஓரங்கட்டிஉள்ளோம்.. மாநிலத்துக்கு கவர்னர் தேவையில்லை என்ற எங்கள் நிலையில், எந்த மாற்றமும் இல்லை... ஆளுநர் ஆர்என் ரவி உடனான உறவு நன்றாக இருக்கிறது என்றாலும், நீட் விவகாரத்தில் அவர் முடிவெடுப்பதில் அதிக தாமதம் உள்ளது, அது சரியல்ல" என்றார்.

பகிரங்க கோரிக்கை
ஸ்டாலினின் இந்த டெல்லி பயணமும் சரி, அவர் அளித்துள்ள பேட்டியும் சரி, 2 விதமான செய்திகளை டெல்லியில் இருந்து பகிரங்கப்படுத்தி உள்ளார்.. முதலாவதாக காங்கிரஸ் பக்கம் தன் கவனத்தை திருப்பி உள்ளார்.. இதற்கு பின்னணி காரணமும் உள்ளது.. வரப்போகும் எம்பி தேர்தலில் பாஜகவுக்கு எதிரான ஒரு அணியை உருவாக்கும் முயற்சியில் மம்தா இறங்கி வருகிறார்.. தேசிய தலைவர்கள் ஒவ்வொருவராக சந்தித்து பேசி ஆதரவு கேட்டும் வருகிறார். ஆனால், காங்கிரஸ் மட்டும் மம்தாவுடன் இணைய விரும்பவில்லை.. இதற்கு காரணம் மம்தாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே யார் பிரதமர் வேட்பாளர் என்ற பிரச்சனை தலைதூக்கிவிட்டது.

பாஜக
இதற்கு பிறகு சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜகவின் வெற்றியானது, அனைத்து எதிர்க்கட்சிகளையும் யோசிக்க வைத்து விட்டது.. அதனால்தான், மம்தா ஒருபடி கீழேயிறங்கி வந்து, காங்கிரஸுக்கு அறைகூவலும் விடுத்தார்.. ஆனாலும் காங்கிரஸ் இதற்கு இணங்கவில்லை.. இவர்கள் பிரதமர் ஈகோ பிரச்சனையால், வலுவான எதிர்க்கட்சி உருவாகாமல் போய்விடுமோ என்ற கலக்கமும் பல ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சி தலைவர்களை சூழ்ந்து கொண்டுள்ளது..

பிடிவாதம்
அதனால்தான், பாஜகவுக்கு எதிரான கூட்டணியை அமைப்பதில் தொடர்ந்து முரண்டு பிடித்து வருவது காங்கிரஸ்தான் என்பதை உணர்ந்து, நேரடியாகவே அக்கட்சிக்கு வேண்டுகோளை விடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்... காங்கிரஸ்தான் முட்டுக்கட்டை என்பதை ஓபனாகவே சொல்லி இருக்கிறார்.. சுருக்கமாக சொல்லப்போனால் எங்கே பிரச்சினை உள்ளதோ அதை சரியாக அடையாளப்படுத்தி பேசியுள்ளார்.

நல்லுறவு
இதற்கு அடுத்தபடியாக, பாஜகவுடனான திமுக அரசின் நல்லுறவை சொன்னதுடன், அக்கட்சியின் கொள்கைகள் மீதான அதிருப்தியையும் நாசூக்காக வெளிப்படுத்தி விட்டார்.. தமிழகத்தில் மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தையும் ஒன்றிணைத்து பாஜகவை ஓரங்கட்டிஉள்ளோம் என்று சொன்னதுடன், ஆளுநரின் செயல்பாடுகளை இந்த தேசமே கேட்கும் வகையில் டெல்லியில் இருந்து துணிந்து சொல்லி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

முதல் விதை
ஒட்டுமொத்தமாக, பாஜகவிற்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்க ஒரு தூதுவரை போல முதல்வர் செயல்பட்டுள்ளார் என்றே தெரிகிறது.. 2024ம் ஆண்டு தேர்தலுக்காக இப்போதே முதல் விதையை தூவிவிட்டார் ஸ்டாலின்... இதன் மூலம் தேசிய அளவில் முக்கிய தலைவராக தன்னை முன்னிறுத்தியுள்ளார் என்பதைவிட, மம்தாவையும் ஓவர்டேக் செய்துவிட்டதாகவே தெரிகிறது..

பகிரங்க கோரிக்கை
ஸ்டாலினின் இந்த டெல்லி பயணமும் சரி, அவர் அளித்துள்ள பேட்டியும் சரி, 2 விதமான செய்திகளை டெல்லியில் இருந்து பகிரங்கப்படுத்தி உள்ளார்.. முதலாவதாக காங்கிரஸ் பக்கம் தன் கவனத்தை திருப்பி உள்ளார்.. இதற்கு பின்னணி காரணமும் உள்ளது.. வரப்போகும் எம்பி தேர்தலில் பாஜகவுக்கு எதிரான ஒரு அணியை உருவாக்கும் முயற்சியில் மம்தா இறங்கி வருகிறார்.. தேசிய தலைவர்கள் ஒவ்வொருவராக சந்தித்து பேசி ஆதரவு கேட்டும் வருகிறார். ஆனால், காங்கிரஸ் மட்டும் மம்தாவுடன் இணைய விரும்பவில்லை.. இதற்கு காரணம் மம்தாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே யார் பிரதமர் வேட்பாளர் என்ற பிரச்சனை தலைதூக்கிவிட்டது.

முதல் விதை
தற்போது கூட்டணியிலும் உள்ளது.. தமிழ்நாட்டில் எதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பம் ராகுலுக்கும் உள்ளது.. இவ்வளவு பிளஸ் பாயிண்ட்கள் உள்ளதால்தான், காங்கிரஸை சரிக்கட்டும் முயற்சியில் முதல்வர் முதன்மையாகவும், துரிதமாகவும் இறங்கி உள்ளார்.. பாஜகவுக்கு மாற்றாக நாளை ஒரு வலுவான அணி இந்த தேசத்தில் உருவானால், அதற்கு முதல் விதை போட்டதே கருணாநிதியின் மகன் முக ஸ்டாலின் என்பதை வரலாறு மறுக்க முடியாது..!
-
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
இந்த 7 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் இவர்கள் தானா? ஒரே ஒருவர் பெயரில் மட்டும் வந்த விருப்பமனுக்கள்! -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications