இதுதான் "சூட்சமம்".. இந்திய அணிக்கு வந்த குட் நியூஸ்.. நேற்று வெற்றியால் நடந்த 4 மிகப்பெரிய ட்விஸ்ட்
சென்னை: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி வென்றுள்ளது. இந்திய அணியின் இந்த வெற்றி மூலம் பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளது.
நேற்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 4 வீரர்கள் டக் அவுட் ஆன நிலையில் 108 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது.
அதன்பின் இறங்கிய இந்திய அணி சூர்யா குமார் அதிரடியால் சிறப்பாக ஆடியது. 2 விக்கெட்டுகளை இழந்து 16.4 ஓவரில் இந்திய அணி வென்றது.
இந்த போட்டி மூலம் சில முக்கியமான ட்விஸ்ட் வரும் நாட்களில் இந்திய அணியில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விஸ்ட் 1
இந்திய அணியின் பவுலிங் பிரச்சனைக்கு கிட்டத்தட்ட நேற்று தீர்வு கிடைத்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். புவனேஷ்வர் குமார் ஸ்விங் பவுலிங் போடுகிறார் என்பதற்காகவே அணியில் எடுக்கப்பட்டார். அவர் பவர் பிளேவில் நன்றாக பவுலிங் செய்வார் என்பதற்காக இதுவரை அணியில் எடுக்கப்பட்டார். ஆனால் நேற்று அவர் இல்லாமலே சாகர் அவரின் இடத்தை நிரப்பி அவரை விட சிறப்பாக பவுலிங் செய்தார். தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை எடுத்த அவர் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் எடுத்தார்.

ட்விஸ்ட் 2
இந்திய அணியில் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இவரை உலகக் கோப்பை தொடரிலும் பிளேயிங் லெவனில் தாராளமாக பயன்படுத்தலாம். இந்திய அணியில் கண்டிப்பாக பும்ரா உலகக் கோப்பை தொடரில் ஆடுவார். அப்படி இருக்க இன்னொரு பாஸ்ட் பவுலர் கண்டிப்பாக அர்ஷிதீப் சிங்தான். இவருக்கும் ஹர்ஷல் பட்டேலுக்கும் இடையில் கடுமையான போட்டி இருந்து வருகிறது. ஆனால் நேற்றைய போட்டியில் அர்ஷிதீப் சிங் சிறப்பாக ஸ்விங் செய்தார். அதேபோல் துல்லியமாக பவுன்சர்களை வீசினார்.

ட்விஸ்ட் 3
இவர் நன்றாக யார்க்கர்களையும் போட கூடியவர். அதனால் இவரை அணியில் மூன்றாவது பாஸ்ட் பவுலராக எடுக்கலாம். இந்திய அணியில் நிலவும் பவுலிங் பிரச்சனைக்கு இது பெரிய தீர்வு கொடுக்கும். இங்கேயே நன்றாக போடும் இவர் ஸ்விங், பவுன்சருக்கு உதவும் உலகக் கோப்பை நடக்கும் ஜோஹன்னஸ்பர்க்கில் இன்னும் நன்றாக வீசுவார். ஹர்ஷல் பட்டேலை விட இவர் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். இது போக அஸ்வின் நேற்று 4 ஓவர் வீசி 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

ட்விஸ்ட் 4
விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் இவரின் பவுலிங்கை தென்னாப்பிரிக்க வீரர்கள் இவரின் பவுலிங்கை தொடவே முடியாமல் திணறினார்கள். சாஹல் கடந்த சில காலமாக பார்மில் இல்லை. அவர் விக்கெட்டும் எடுப்பது இல்லை. ரன்களையும் கொடுக்கிறார். இதனால் அஸ்வின் இரண்டாவது ஸ்பின் ஆப்ஷனாக இருப்பார். ஜடேஜா இல்லாத நிலையில் இவர் பேட்டிங்கிலும் பங்களிப்பு அளிக்க வாய்ப்புகள் உள்ளன. இதுதான் இந்திய அணியின் பவுலிங் வெற்றிக்கான சூட்சமமாக மாறியுள்ளது. இது போக இந்திய அணியின் ஓப்பனிங் எவ்வளவு மோசம் என்று நேற்று மீண்டும் தெரிந்தது.

ராகுல்
கே.எல் ராகுல் நேற்று 50 ரன்கள் எடுத்தாலும் மிக மிக மோசமாக ஆடினார். 80 ஸ்டிரைக் ரேட்டில் ஆடினார். தொடக்கத்தில் வேகம் காட்டாமல், கடைசியில் 2-3 சிக்ஸர்களை அடித்தால் வென்றுவிடலாம் என்று இவர் ஆடும் விதம் கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. நேற்று போட்டியில் இவரின் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆட்டம் கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. ஆசிய கோப்பை தொடரிலும் இவர் சரியாக ஆடவில்லை. இவருக்கு பதிலாக பண்டை ஓப்பனிங் வீரராக களமிறக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications