சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொன்னான வாய்ப்பு போச்சே! எடப்பாடி கேம்ப் செய்த 6 தவறுகள்! கெட்டியாக பிடித்த ஓபிஎஸ்! யாருக்கு சாதகம்?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிந்தோ.. தெரியாமலோ செய்த 6 தவறுகள் தற்போது அவருக்கே எதிராக திரும்பி உள்ளதாக அதிமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாலை போடும்போதே கோபம்.. கண் பார்வையிலேயே நிர்வாகிகளை கட்டிப்போடுவது.. பல மூத்த நிர்வாகிகளும் அடங்கி செல்வது என்று அதிமுகவில் அறிவிக்கப்படாத பொதுச்செயலாளர் போலவே செயல்பட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. பதவி அதிகாரபூர்வமாக மட்டுமே வரவில்லை.

மற்றபடி பொதுச்செயலாளருக்கு உண்டான அனைத்து அதிகாரங்களுடன்.. வலிமையான தலைவராகவே எடப்பாடி அதிமுகவில் வலம் வருகிறார்.

 அந்த 4 பேர்.. எடப்பாடி கோட்டையில் இருந்து சீட்டுகளை உருவ திட்டம்.. இறங்கிய 3 புள்ளிகள்- நடக்குமா? அந்த 4 பேர்.. எடப்பாடி கோட்டையில் இருந்து சீட்டுகளை உருவ திட்டம்.. இறங்கிய 3 புள்ளிகள்- நடக்குமா?

காற்றில் கோலம்

காற்றில் கோலம்

ஆதரவாளர்கள் யாரும் இல்லாமல்.. வெறும் கொங்கு சப்போர்ட்டை வைத்துக்கொண்டு எடப்பாடி ஒன்றும் காற்றில் கோலம் போடவில்லை.மாறாக இவருக்கு பெருவாரியாக ஆதரவு கட்சிக்குள் இருக்கிறது. கொங்கு மண்டலம் மட்டுமின்றி வடக்கு மண்டலமும், டெல்டாவும், ஏன் தென் மண்டலமும் கூட இப்போது எடப்பாடி கேம்ப்தான்! சாதி ரீதியாக.. ரத்த ரீதியாக.. தூரத்து உறவாக ஓபிஎஸ் கேம்பில் இருந்தவர்கள் கூட அப்படியே எடப்பாடி பக்கம் தாவி சென்றுவிட்டனர். நேற்று கூட 9 நிர்வாகிகள் எடப்பாடி கேம்பிற்கு லோக்கல் பிளைட் பிடித்து லேண்ட் ஆனார்கள்!

ஆதரவு

ஆதரவு

அதிகாரபூர்வமாகவே 2100 பொதுக்குழு உறுப்பினர்கள் வரை எடப்பாடி பக்கம்தான் நிற்கிறார்கள். மாவட்ட செயலாளர்கள் 95% சதவிகிதம் பேர் எடப்பாடி அணிதான். அதிமுகவில் 6 சதவிகித ஆதரவு கூட இல்லாமல் ஓபிஎஸ் திக்கி திணறிக்கொண்டு இருக்கிறார். ஆனால் இப்படி இருந்தும் கூட ஓபிஎஸ்சை எடப்பாடியால் வீழ்த்த முடியவில்லை. ஓபிஎஸ் பக்கம் பெரிதாக ஆதரவு இல்லாத போதிலும்.. அவரை எடப்பாடி வீழ்த்த முடியாமல் போனதற்கு காரணம்.. ஓபிஎஸ் பக்கம் இருக்கும் சட்ட ரீதியான, அதிமுக விதி ரீதியான ப்ளஸ் பாயிண்டுகள்தான்!

எடப்பாடி

எடப்பாடி

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிந்தோ.. தெரியாமலோ செய்த 6 தவறுகள் தற்போது அவருக்கே எதிராக திரும்பி உள்ளதாக அதிமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அது என்னென்ன?

தவறு 1 - முதல் தவறு.. அதிமுக விதிப்படி ஒருங்கிணைப்பாளர்தான் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் தனிதீர்மானம் மூலம் பொதுச்செயலாளர் ஆகலாம் என்று எடப்பாடி நினைத்தார். ஆனால் உயர் நீதிமன்றமோ தனி தீர்மானமாக இருந்தாலும் அதை வரைவை ஒருங்கிணைப்பாளரிடம் கொடுக்க வேண்டும் என்று குட்டு வைத்தது.

தவறு 2 - பொதுக்குழுவில் அவசரப்பட்டு எடப்பாடி தரப்பு 23 தீர்மானங்களையும் நிராகரித்தது. இதனால் பொதுக்குழு உறுப்பினர்கள் நியமன தீர்மானமும் நிராகரிக்கப்பட்டது. இதன் அர்த்தம் பொதுக்குழு காலாவதி ஆகிவிட்டது. அதாவது சட்டப்படி பொதுக்குழு உறுப்பினர்கள் இல்லை.. அதனால் பொதுக்குழுவும் இல்லை. கோர்டில் ஓபிஎஸ் மட்டும் இந்த பாயிண்டை வைத்தால்.. ஜூலை 11 பொதுக்குழுவே கூட முடியாத நிலை ஏற்படும்.

தவறு மேல் தவறு

தவறு மேல் தவறு

தவறு 3 - அவசரப்பட்டு அவைத்தலைவர் தேர்வு செய்தது. இந்த தீர்மானம் 23 தீர்மானங்களில் ஒன்றாக இல்லாத நேரத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். ஓபிஎஸ்ஸும் இந்த பாயிண்டை பிடித்து வழக்கும் தொடுத்துள்ளார்.

தவறு 4 - எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உயர் நீதிமன்ற விதிகளை மதிக்காமல் இப்படி செயல்பட்டதாக ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது. இந்த சின்ன தவறு எடப்பாடிக்கு எதிராக வேறு விதமாகவும் திரும்பி உள்ளது. எடப்பாடி, சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரின் பொதுக்குழு பதவிகளை பறிக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் அவமதிப்பு வழக்கில் குறிப்பிட்டுள்ளது. இதுவும் எடப்பாடி தரப்பிற்கு எதிராகி உள்ளது.

எடப்பாடி பின்னடைவு

எடப்பாடி பின்னடைவு

தவறு 4 - எடப்பாடி பழனிசாமி தரப்பு உயர் நீதிமன்ற விதிகளை மதிக்காமல் இப்படி செயல்பட்டதாக ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது. இந்த சின்ன தவறு எடப்பாடிக்கு எதிராக வேறு விதமாகவும் திரும்பி உள்ளது. எடப்பாடி, சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரின் பொதுக்குழு பதவிகளை பறிக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் அவமதிப்பு வழக்கில் குறிப்பிட்டுள்ளது. இதுவும் எடப்பாடி தரப்பிற்கு எதிராகி உள்ளது.

கடைசி தவறு

கடைசி தவறு

தவறு 6 - ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் போது.. எப்படி அவைத்தலைவர் பொதுக்குழுவை கூட்ட முடியும். என்ன அதிகாரம் உள்ளது. ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாகிவிட்டால்.. கூடவே பொதுக்குழு பதவியும் காலியாகிறது என்று தானே அர்த்தம் (எல்லாம் ஒரே தீர்மானம் என்பதால்) . எனவே ஜூலை 11 பொதுக்குழு நடக்கும் என்ற அறிவிப்பே சட்ட ரீதியாக செல்லுபடியாகாத ஒன்றாகிறது.

ஓபிஎஸ் கேம்ப்

ஓபிஎஸ் கேம்ப்

எடப்பாடி தரப்பு சட்ட ரீதியாக செய்த இந்த தவறுகள் அவருக்கே எதிராக திரும்பி உள்ளது. ஓபிஎஸ் தரப்பு இதைத்தான் கெட்டியாக பிடித்துக்கொண்டு உள்ளது. இதனால் அதிமுக பொதுக்குழு தொடர்பாக மிக நீண்ட சட்ட போராட்டம் வரும் நாட்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடிக்கு கண்டிப்பாக தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது. ஆனால் சட்டம்.. விதிகள் என்னவோ ஓபிஎஸ் பக்கம் இருக்கிறது! இதை எப்படி எடப்பாடி கடந்து வருவார் என்பதிலேயே.. அவரின் "ஆளுமை" இருக்கிறது!

English summary
What are the 6 mistakes that may cause hugely for the Edappadi Palanisamy side in AIADMK? அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிந்தோ.. தெரியாமலோ செய்த 6 தவறுகள் தற்போது அவருக்கே எதிராக திரும்பி உள்ளதாக அதிமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X