சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

6 கிளைமேக்ஸ்கள்.. ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.. இது மட்டும் நடந்தால் அதிமுக மொத்தமாக மாறும்! பரபர கணிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: ஒற்றை தலைமை விவகாரம் இன்னும் முடிவிற்கு வராத நிலையில் 6 சம்பவங்கள் அதிமுகவில் நடக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில், பொதுக்குழு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. முதல் கட்ட விசாரணை முடிந்துவிட்ட நிலையில் இரண்டாம் கட்ட விசாரணை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கட்சியில் வரும் நாட்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் இந்த பிரச்சனை 2024 வரை நீளும் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உச்ச நீதிமன்ற வழக்கில் தீர்ப்பு வந்தாலும் பிரச்சனை இப்போதைக்கு தீராது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவில் வரும் நாட்களில் நடக்க உள்ள 6 சம்பவங்கள் பின்வருமாறு!

சசிகலாவுடன் சமாதானமான அந்த 3 அதிமுக மாஜிக்கள்? விரைவில் சரண்டராகும் 5 முக்கிய தலைகள்? யார் அவர்கள்? சசிகலாவுடன் சமாதானமான அந்த 3 அதிமுக மாஜிக்கள்? விரைவில் சரண்டராகும் 5 முக்கிய தலைகள்? யார் அவர்கள்?

சம்பவம் 1

சம்பவம் 1

அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் பட்சத்தில் கட்சி அவரின் கட்டுப்பாட்டிற்கு கீழ் செல்லும். அதாவது எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்பது செல்லும். இதன் மூலம் அதிமுகவில் அவர் எடுத்த முடிவுகளும் செல்லுபடியாகும். அதாவது அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வத்தை நீக்கியது, அவரின் ஆதரவாளர்களை நீக்கியது போன்ற அனைத்து நடவடிக்கைகளும் செல்லுபடியாகும்.

சம்பவம் 2

சம்பவம் 2

அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் உடனே பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதாவது நவம்பர் இறுதியில் இந்த தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடக்கும் பட்சத்தில் எடப்பாடி ஒற்றை ஆளாக தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் உள்ளன. அதாவது போட்டியின்றி இவர் தேர்தலில் வெற்றிபெற்று பொதுச்செயலாளர் ஆகும் வாய்ப்புகள் உள்ளன.

 சம்பவம் 3

சம்பவம் 3

பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும் பிரச்சனை முடியாது. ஓ பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களை திரட்டி கட்சிக்கு எதிராக செயல்பாடுகளை மேற்கொள்வார். அதிமுகவிற்கு எதிராக பி டீம் போல செயல்படுவார். இந்த பிரச்சனை ஜாதி ரீதியாகவும் வெடிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடக்கும் பட்சத்தில் அது கண்டிப்பாக 2024 லோக்சபா தேர்தல் அல்லது 2026 சட்டசபை தேர்தல் வரை கூட செல்லும் வாய்ப்புகள் உள்ளன.

சம்பவம் 4

சம்பவம் 4

பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தீர்ப்பு வரலாம். அதாவது ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று கூறப்பட வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடந்தால் எடப்பாடி எடுத்த முடிவுகள் எதுவும் செல்லாது. அவர் இடைக்கால பொதுச்செயலாளர் என்று அறிவிக்கப்பட்டதும் செல்லாது. அவர் அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை நீக்கியதும் செல்லாது என்று அறிவிக்கப்படும். அதிமுகவில் ஜூலை 11ம் தேதிக்கு முன்பு இருந்த நிலை தொடரும் என்று அறிவிக்கப்படும்.

சம்பவம் 5

சம்பவம் 5

அப்படி நடக்கும் பட்சத்தில் அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் பவர் அதிகரிக்கும். நிர்வாகிகள் மீண்டும் அவர் பக்கம் செல்ல வாய்ப்புகள் உள்ளன. அவருக்கு ஆதரவாக எம்எல்ஏக்கள் சிலர் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் மேலும் பெரிதாக வெடிக்கும். தற்போது எடப்பாடிக்கு இருக்கும் பலம் வெகுவாக குறையும் வாய்ப்புகளும் உள்ளன. முக்கியமாக தென் மண்டலத்தில் எடப்பாடி பலம் மேலும் சரியும் வாய்ப்புகள் உள்ளன.

சம்பவம் 6

சம்பவம் 6

வழக்கில் ஓ பன்னீர்செல்வம் வெற்றிபெறும் பட்சத்தில் அது சசிகலாவின் எழுச்சியாகவும் பார்க்கப்படுகிறது. அதிமுகவில் மீண்டும் சசிகலா இணைவதற்கான வழியை இது ஏற்படுத்தும். ஏற்கனவே சசிகலா தான் ஓ பன்னீர்செல்வமுடம் பேசிக்கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். பல மாஜிக்களுடன் பேசிக்கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். அப்படி இருக்கும் போது ஓ பன்னீர்செல்வம் வெற்றிபெறுவது சசிகலாவிற்கு ஆதரவான நிலையை கட்சியில் ஏற்படுத்தும்.

English summary
What are the 6 possible outcomes and climaxes that can happen in the AIADMK party?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X