சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆளுநர் உரையில் என்னென்ன அறிவிப்புகள்... முழு விவரங்களின் பட்டியல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் ஆளுநர் உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை தர மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

What are the announcements in the Governors speech, List of full details

இதனிடையே அந்த அறிவிப்புகளின் முழு விவரங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன;

ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள்;

* இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை தர மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்

*மாற்றுத்திறனாளிகளுக்கு 4 % இட ஒதுக்கீட்டில் பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன

* நாகை மாவட்டம் வெள்ளக்குப்பத்தில் ரூ.100 கோடியில் மீன் பிடித்துறைமுகம் அமைக்கப்படும்

* எரிசக்தி உற்பத்தி திறனில் உலகளவில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக பாராட்டு

*நதிகள் இணைப்பு திட்டத்தின் முதற்கட்டமாக காவிரி-தெற்கு வெள்ளாறு இந்த ஆண்டு இறுதிக்குள் இணைக்கப்படும்

*110 விதியின் கீழ் 453 அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்ட நிலையில் அதில் 114 அறிவிப்புகள் நிறைவேற்றம்

* 12,000 கிராமங்களில் ''தமிழ் நெட்'' திட்டம் செயல்படுத்தப்படும்

* அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.1 கோடி தமிழக அரசு நிதி

*தாம்பரம் -வேளச்சேரி இடையே 15 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்படும்

*வறுமையை கணக்கிடுவதற்கு அசையாச் சொத்தின் மதிப்பு ரூ.1 லட்சமாக அளவுகோல் உயர்த்தப்பட்டுள்ளது

*மேகதாதுவில் கர்நாடக அணைகட்ட தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது

* எந்த மதத்தை பின்பற்றினாலும் அவர்களின் நலனை தமிழக அரசு பேணும்

*காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றும்

* டெங்கு, மலேரியாவை தடுக்க மக்களுக்கு விலையில்லா கொசுவலைகள் வழங்கப்படும்

* கல்லூரி இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி

*பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 6.94 லட்சம் வீடுகள் கட்டப்படும்

* மெட்ரோ ரயில் தடத்தை விமானநிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க ஆய்வு செய்யப்படும்

English summary
What are the announcements in the Governor's speech, List of full details
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X