3 பேர் அவுட்.. உள்ளே வரப்போகும் 2 புது அமைச்சர்கள்? ஸ்டாலின் கையில் உள்ள ரிப்போர்ட்! இன்றே முடிவு?
சென்னை: இன்று தலைமைச்செயலகத்தில் நடக்க உள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு பின் தமிழ்நாடு அமைச்சரவையில் முக்கிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. முதல்வர் ஸ்டாலினின் ஒரு இலாக்காவையும் சேர்த்து மொத்தமாக 11 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டன. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை வழங்கப்பட்டது. அதேபோல் சிறப்பு திட்ட செயலாக்கம் துறை வழங்கப்பட்டு உள்ளது.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனது மட்டுமின்றி பல சீனியர் அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டன. ஐ பெரியசாமி, ராஜகண்ணப்பன், முத்துசாமி, பெரியகருப்பன், சேகர் பாபு, ராமசந்திரன், காந்தி, பிடிஆர், மெய்யநாதன், மதிவேந்தன் ஆகியோரின் இலாக்காக்கள் மாற்றப்பட்டன.
விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யனாதன், சுற்றுசூழல் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சிறப்பு அமலாக்கத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதே சமயம் டாப் இலாக்கா எதிலும் மாற்றம் செய்யப்படவில்லை. அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு, அன்பில் மகேஷ், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, ஏவ வேலு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், ரகுபதி, செந்தில் பாலாஜி, மா சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகிய 11 அமைச்சர்களின் பதவிகளில் எந்த மாற்றமும் இல்லை.
அவர்களின் துறைகள் மாற்றப்படவில்லை. இது போன்ற டாப் இலாக்காக்களை மாற்றுவது பொதுவாக பெரிய அளவில் சர்ச்சையாகும். அந்த அமைச்சர் சரியாக செயல்படவில்லையா என்ற பெயர் ஏற்படும். இந்த நிலையில்தான் டாப் இலாக்கா எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை.
மீண்டும் மாற்றம்: இந்த நிலையில்தான் தற்போது தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இன்று தலைமைச்செயலகத்தில் நடக்க உள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு பின் தமிழ்நாடு அமைச்சரவையில் முக்கிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த வாரம் வெளிநாடு செல்லும் முதல்வர் அதற்கு முன் அமைச்சரவை கூட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இதற்கு முன்பாக தமிழ்நாடு அமைச்சர்கள் எல்லோரும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பின் அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிப்போர்ட்: முதல்வர் ஸ்டாலின் கையில் அமைச்சர்கள் குறித்த பர்பார்மன்ஸ் ரிப்போர்ட் உள்ளது. பொதுவாக அமைச்சர்களின் செயல்பாடுகள், குறைகள் பற்றி ரிப்போர்ட் முதல்வர் கைக்கு குறிப்பிட்ட மாத இடைவெளியில் செல்வது வழக்கம். எல்லா மாநிலங்களிலும் இது வழக்கத்தில் உள்ளது.
அந்த வகையில் தமிழ்நாடு அமைச்சர்கள் பற்றிய ரிப்போர்ட்டை வைத்து அமைச்சர்களின் நிறை, குறைகளை முதல்வர் ஸ்டாலின் பேச உள்ளார் என்று கூறப்படுகிறது. சில அமைச்சர்களுக்கு டோஸ் விடப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சரவை மாற்றம் பற்றிய பேச்சுக்கள் மீண்டும் எழுந்துள்ளன. அமைச்சர்களின் செயல்பாடு, அவர்கள் மீது உள்ள புகார், 2024 லோக்சபா தேர்தல் என்று பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்பட்டது.
இது போக இலாக்கா மாற்றம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் பரவின. அதாவது சில அமைச்சர்களிடம் இருக்கும் இலாக்கா குறைக்கப்பட்டு அதில் புதிய அமைச்சர்கள் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராக திமுக தீவிரம் காட்டி வருகிறது. தேர்தலை கருத்தில் கொண்டு நிர்வாகிகள் மாற்றப்பட்டு உள்ளனர். இதையடுத்து தற்போது அமைச்சர்களின் பர்பார்மன்ஸ் அடிப்படையில், அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது அமைச்சர்களின் செயல்பாடு, அவர்கள் மீது உள்ள புகார், 2024 லோக்சபா தேர்தல் என்று பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்பட்டது.
இது தொடர்பான ரிப்போர்ட் ஒன்று முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டு உள்ளதாம். உளவுத்துறை மூலமாக வழங்கப்பட்ட பர்பார்மன்ஸ் ரிப்போர்ட் மூலம் இந்த அமைச்சரவை மாற்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு, அன்பில் மகேஷ், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, ஏவ வேலு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், ரகுபதி, செந்தில் பாலாஜி, மா சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகிய 11 அமைச்சர்களின் பதவிகளில் எந்த மாற்றமும் இருக்காது. அவர்களின் துறைகள் மாற்றப்பட வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது.
மாற்றமா உள்ள துறைகள்: பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகிய இருவர் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு பதிலாக மன்னார்குடி எம்எல்ஏ டி ஆர் பி ராஜா மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த இருவருக்கு எம்எல்ஏ பதவி அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications