"டீல் ஓகே?".. மெசேஜ் போயாச்சு போல.. ரெடியான "கூல்" பிரபலம்.. எடப்பாடிக்கு உதவிய "புள்ளி" இவர்தானாமே
சென்னை: பொதுச்செயலாளராகி உள்ள எடப்பாடி பழனிசாமி அடுத்தக்கட்ட வியூகத்தை கையில் எடுத்துள்ளாராம்.. பாஜக - அதிமுக கூட்டணி தொடரும் என்று கிட்டத்தட்ட முடிவாகி உள்ள நிலையில், ஓபிஎஸ் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.
அதிமுக - பாஜக கூட்டணி இடையே சலசலப்புகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.. அதிலும், இரு கட்சி தலைமைகளிடம் அதிருப்திகள் நிலவுவதாக தெரிகிறது.
அதனால்தான், அதிமுகவுடனான கூட்டணி தேவையற்றது... தமிழகத்தில் நாம் வளர வேண்டுமெனில் பாஜக தனித்து நிற்க வேண்டுமென சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வந்தார்..

அண்ணாமலை
அத்துடன், நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி என்றால் நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக பணியாற்றுவேன் என்றும் கூறியிருந்தார்.. இதையடுத்து, டெல்லி சென்று மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார் அண்ணாமலை.. ஆனால், அவரது கருத்தை டெல்லி மேலிடம் ஏற்றுக்கொள்ளாமல் அண்ணாமலையைச் சமாதானப்படுத்தி அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின.. இப்படிப்பட்ட சூழலில்தான், டெல்லியில் ஒரு தனியார் டிவிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி தந்துள்ளார்.

கட்டமைப்பு
அதில், "தமிழகத்தில் பாஜகவின் கட்டமைப்புகள் வலுவின்றி உள்ளது அதனைச் சரிசெய்வதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறோம். எங்கெல்லாம் பாஜக வலுக்குறைவாக உள்ளதோ அங்கெல்லாம் எங்கள் கூட்டணி கைகொடுக்கும் என்பதால் அதிமுகவுடனான கூட்டணியில் தொடர்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.. இதையடுத்து, அதிமுக - பாஜக இடையே கூட்டணி தொடர்பாக நிலவி வந்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக தெரிகிறது.. ஆனால், வெறும் கூட்டணியை மட்டும் மையப்படுத்தி பேசவில்லை, அதன் கணக்கே வேறு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதாவது, விரைவில் கர்நாடக தேர்தல் நடக்க உள்ளநிலையில், அதிமுகவின் தயவும் பாஜகவுக்கு தேவை என்பதே இதன் அர்த்தம் என்கிறார்கள்.

கூண்டுக்கிளி
மேலிட பாஜக இவ்வாறு சொல்லிவிட்டாலும், தமிழக பாஜக தலைமையின் முடிவு வெளிப்படையாக தெரியவில்லை.. 4 நாட்களுக்கு முன்பு, செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, "பாஜக மூத்த தலைவர்கள் இடம் பெற்றுள்ள பார்லிமெண்டரி குழு அதுகுறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அந்த குழுவே கூட்டணி தொடர்பான விஷயங்கள் குறித்து முடிவெடுக்கும்" என்று சொல்லி ஒதுங்கிவிட்டார்.. அதேசமயம் கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் தீயாய் இறங்கி உள்ளதாக தெரிகிறது.. "கூண்டுக்கிளியாய் இனி இருந்தது போதும், கூண்டை உடைத்துக் கொண்டு பறக்க தயாராகுங்கள்" என்று நிர்வாகிகளுக்கு எழுச்சியூட்டும் பேச்சால், அண்ணாமலையின் அடுத்த அதிரடி ஆரம்பமாகி உள்ளது..

கூடாரம் தெம்பு
அதுமட்டுமல்ல, "எடப்பாடியின் கூடாரத்தை கலைக்க ஓபிஎஸ்ஸால் முடியவில்லை... அதனால், நீங்கள் முழுவீச்சில் இறங்குங்கள்; நாங்கள் துணையாக இருக்கிறோம்" என்று தினகரனிடம் மாநில பாஜக தரப்பு பேசியதாம்.. இதைக்கேட்டு தெம்பான டிடிவியுடம், ஏப்ரல் 11-ம் தேதி தென் மாவட்டங்களுக்கு விசிட் அடிக்க போவதாகவும, அப்போது நடத்தப்படும் மிகப்பெரிய கூட்டத்தில், எடப்பாடி டீமை சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் அதிமுகவினரை ஆயிரக்கணக்கில் அமமுகவில் இணைத்து ஷாக் தரப்போவதாகவும் செய்திகள் வட்டமடிக்கின்றன.

தியாகிகள்
ஆனால், எடப்பாடியோ, எதையும் கண்டுகொள்ளாமல் அடுத்தக்கட்ட நகர்வுக்குள் நுழைந்துள்ளாராம்.. பொதுச்செயலாளராகி உள்ள நிலையில், முதல் விஷயமாக, தென்மண்டலத்தை குறி வைத்துள்ளாராம்.. எடப்பாடி பழனிசாமி இனி அதிக அளவில் சுற்றுப்பயணம் தெற்கில் மேற்கொள்ள போகிறாராம்.. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தென்மண்டலத்தை சேர்ந்த தியாகிகள், தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தி, அந்த தலைவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளிலும் இனி பங்கேற்க போவதாக தகவல்கள் கூறுகின்றன.. இதனால், அச்சமூக மக்களின் வாக்குகளை பெற முடியும் என்று எடப்பாடி நம்புகிறாராம்..

சீனியர்கள்
அதுமட்டுமல்ல, தென்மண்டலங்களில் டிடிவி தினகரனுக்கு உள்ள வாக்கு வங்கியை உடைப்பற்காக, அமமுக அதிருப்தியாளர்களுக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. மேலும், ஓபிஎஸ் தரப்பு தற்போது அடுத்தடுத்த அப்செட்களில் உள்ளதால், இந்த சந்தர்ப்பத்தையும் தனக்காக பயன்படுத்தி கொள்ள எடப்பாடி நினைக்கிறாராம்.. இந்த நேரத்தில் இன்னொன்றும் சொல்லப்படுகிறது.. சமீபகாலமாகவே, தென்மண்டல அதிமுகவின் சில சீனியர்கள், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த நிலையில், அந்த விரிசலும் தற்போது நொறுங்கி விழுந்துள்ளதாம்..

மாஜி ப்ளஸ்
இன்னும் சொல்லப்போனால், எடப்பாடியின் இந்த வெற்றி கிடைக்க, அந்த சீனியர் கொங்கு மாஜியின் பங்கு அதிகம் என்கிறார்கள்.. காரணம், ஆரம்பத்தில் இருந்தே, டெல்லி செல்வாக்கு இருக்கும் ஒரே நம்பிக்கையில்தான் ஓபிஎஸ் வலம்வந்து கொண்டிருந்தார்.. இதனால் டெல்லியை ஓபிஎஸ் அளவுக்கு எடப்பாடியால் நெருங்க முடியாத நிலைமையே நீடித்தது.. அதனால்தான், டெல்லியில் தனக்கிருக்கும் செல்வாக்கின் மூலம், எடப்பாடி பழனிசாமியின் முக்கியத்துவத்தை மேலிட தலைவர்களிடம் அந்த மாஜி எடுத்து வைத்தாராம்.. அது ஒர்க் அவுட் ஆனதால்தான், எடப்பாடிக்கு சாதகமான சூழல் நிலவி வருவதாக சொல்கிறார்கள்.

வியூகம்
எடப்பாடியின் வியூகம் ஒருபக்கம் இருந்தாலும், பலம்வாய்ந்த சட்டவல்லுநர்கள் டீம் இன்னொரு பக்கம் இருந்தாலும், டெல்லியில் லாபி செய்த அந்த சீனியரும் ஒரு காரணம் என்கிறார்கள்.. இனி ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்? என்பதுதான் தெரியவில்லை. இப்போதைக்கு ஓபிஎஸ் கையில் ஒரே அஸ்திரம் சட்டப் போராட்டம் மட்டுமே என்கிறார்கள்.. அதுவும் தனி நீதிபதி சுட்டிக்காட்டிய கட்சி விதி மீறல் என்ற விஷயம் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. அதிமுக சட்ட விதிகளின்படி கட்சியிலிருந்து நீக்க 7 நாட்களுக்குமுன்பே நோட்டீஸ் வழங்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் அதிரடியாக ஓபிஎஸ் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

கடைசி சான்ஸ்
இருந்தாலும், கட்சியின் செயல்பாடுகள் முடங்கி விடக்கூடாது, இழப்பு எதுவும் ஏற்படக்கூடாது போன்ற காரணங்களுக்காகவே பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும். பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடையில்லை என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.. இந்த விஷயத்தை சுட்டிக்காட்டியே, அடுத்தகட்ட சட்டப்போராட்டங்களை ஓபிஎஸ் முன்னெடுத்து வருகிறார். இந்த விவகாரத்தில் இன்று விடை கிடைத்துவிடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3ம் தேதிக்கு மேல்முறையீடு விசாரணை தள்ளி போயுள்ளது.. ஆக, சட்டரீதியான விடை கிடைக்கும் என்றே ஓபிஎஸ் நம்புகிறார் என்றாலும், அரசியல் ரீதியாகவும் இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டும் என்றும், அற்காக மக்கள் மன்றத்தையே நாட வேண்டும் என்றும் எடுத்துரைக்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

ஸ்பெஷல்ஸ்
இதனிடையே, ஓபிஎஸ் பாஜகவுக்கு சென்றுவிடக்கூடும் என்றும் சிலர் கிளப்பிவிட துவங்கி விட்டனர்.. ஆனால், 2 நாட்களுக்கு முன்பு இதுகுறித்து, நம்முடைய "ஒன் இந்தியா" தமிழில் ஒரு ஸ்பெஷல் செய்தியை வெளியிட்டிருந்தோம்.. அதாவது, குஜராத் மாநிலத்திலுள்ள பாஜகவின் சீனியர் ஒருவர் தான் ஓபிஎஸ்ஸூக்கும் பாஜகவின் தேசிய தலைமைக்கும் பாலமாக இருந்து வருகிறாராம்.. மோடி அல்லது அமித்ஷாவிடம் ஓபிஎஸ் பேசுவதாக இருந்தாலோ அல்லது அவர்களுக்கு மெசேஜ் சொல்வதாக இருந்தாலோ அந்த சீனியர் மூலமாகத்தான் எல்லாம் நடக்குமாம்.. இந்த நிலையில், அந்த சீனியரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் ஓபிஎஸ். "பாஜக தன்னை கைவிட்டுவிட்டது" என்று புலம்பித் தள்ளியுள்ளார்...

ம்ஹூம் மாட்டேன்
அதற்கு அந்த சீனியர், "இப்பவும் உங்கள் மீது பாஜக தலைமைக்கு நல்ல மரியாதை இருக்கிறது... அதிமுகவில் உங்களால் சர்வைவல் பண்ண முடியாது என்று நீங்கள் நினைத்தால், பேசாமல் பாஜகவில் இணைந்து விடுங்கள்... பாஜகவின் மாநில தலைவர் நீங்கள் தான்.. அதனால் எம்எல்ஏ பதவி பறிபோனால் போகட்டுமே.. கவலையேப்பட வேண்டாம்.. அதற்கு மாற்று யோசனை பாஜகவில் இருக்கிறது" என்று சொன்னாராம். இதற்கு ஓபிஎஸ், "நான் பாஜகவில் இணைந்தால் அதைவிட பெரிய தவறு வேறு எதுவும் இருக்காது... ஏன்னா, அந்த முடிவை நான் எடுத்தால், இன்றைக்கு என்னை நம்பியிருக்கும் தொண்டர்கள் யாரும் என்னுடன் வரமாட்டார்கள்... அவர்கள் அடிப்படையில் எம்ஜிஆர், ஜெயலலிதா உணர்வாளர்கள்... யாருமே என்னுடன் வராதபோது பாஜகவில் எனக்கு என்ன மரியாதை கிடைக்கும்னு நான் எதிர்பார்க்க முடியும்?

லாஸ்ட் சான்ஸ்
இதைத்தாண்டி, அந்த முடிவை நான் எடுத்தால் நானே பழனிச்சாமியின் கீழ் தொண்டர்களை ஒன்று சேர்த்துவிடுவதாக அமைந்து விடும்... போகாத ஊருக்கு வழிச் சொல்லாதீங்க.. எனக்கு நம்பிக்கை கொடுத்தமாதிரி பாஜக நடந்து கொள்ளும் என்றால், அதிமுகவில் எனக்கான மரியாதையையும் முக்கியத்துவத்தையும் கிடைக்கச் செய்கிற மாதிரி வழக்கு விவகாரங்களில் எனக்கு உதவி செய்ய மேலிடத்தில் சொல்லுங்கள் என்று தெளிவாக சொல்லிவிட்டாராம் ஓபிஎஸ்.. ஆக, பாஜக பக்கம் ஓபிஎஸ் செல்லப்போவதில்லை என்று தெளிவாகிவிட்ட நிலையில், ஒருவேளை தனிக்கட்சி துவங்குவாரோ? அல்லது சட்டப்போராட்டத்தையே விடாமல் நடத்துவாரா? என்றெல்லாம் யூகங்கள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications