Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரெண்டுல 1-ஐ தொடுங்க.. மநீம-விடம் கறார் காட்டும் திமுக.. கமல் நடத்திய அவசர ஆலோசனை.. முக்கிய முடிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக - மக்கள் நீதி மய்யம் இடையே மறைமுகமாக நடந்து வரும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவி வருவதாக கூறப்படுகிறது. மநீமவுக்கு திமுக 2 ஆப்ஷன்களை கொடுத்திருக்கிறதாம்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளும் கட்சியான திமுகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தங்கள் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக தரப்பில் இதுவரை எந்தக் கட்சியுடனும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. புரட்சி பாரதம், எஸ்டிபிஐ உள்ளிட்ட சிறிய கட்சிகள் அதிமுக கூட்டணியை உறுதி செய்துள்ளன.

What are the conditions DMK put on Kamal haasan MNM for alliance

அதிமுக கூட்டணி: தேமுதிக மற்றும் பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை இப்போது தான் தீவிரப்படுத்தியுள்ளது அதிமுக. நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பிரேமலதா விஜயகாந்த் வீட்டுக்கே சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதேபோல, அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் 2 முறை சந்தித்துப் பேசியுள்ளார். இக்கட்சிகளுடன் விரைவில் அதிமுக தொகுதி உடன்பாட்டை எட்டும் எனத் தெரிகிறது.

பாஜகவை பொறுத்தவரை, தமாகா தலைவர் ஜிகே வாசன், ஏசி சண்முகம், தேவநாதன், ஜான் பாண்டியன், பாரிவேந்தர் ஆகியோர் கூட்டணியில் உள்ளனர். இவர்கள் அனைவரையுமே தாமரை சின்னத்தில் நிறுத்த பிளான் போட்டுள்ளது பாஜக. மேலும், பாமக, தேமுதிகவை தங்கள் பக்கம் கொண்டு வர பாஜகவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

திமுக அணி: திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. திமுக இதுவரை 4 கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கிவிட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியை ஒதுக்கியுள்ளது திமுக. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 சீட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 சீட் என்றும் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இன்னும் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும், ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சியும் ஆளுக்கொரு சீட் கேட்டு வருகின்றனர். இவர்கள் போக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட ஆர்வமாக உள்ளது.

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்: கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட கமல்ஹாசன், இந்த முறை திமுக கூட்டணியில் இணைய முடிவெடுத்துள்ளார். ஏற்கனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளித்தார் கமல். அதோடு, ராகுல் காந்தியின் யாத்திரையிலும் பங்கேற்றிருந்தார். எனவே, வரும் லோக்சபா தேர்தலில் கமல்ஹாசன் திமுக - காங்கிரஸ் அணியில் இணைவது உறுதி எனத் தெரிகிறது.

திமுக கறார் - மநீம பிடிவாதம்: மக்கள் நீதி மய்யத்தை திமுக தரப்பு இன்னும் நேரடியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றாலும், மறைமுகமாக சீட் குறித்து பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 1 சீட் தர திமுக தயாராக உள்ளது. ஆனால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என நிபந்தனை வைக்கப்பட்டுள்ளதாம். இதனை மநீம தரப்பு ஏற்கவில்லையாம்.

கமல்ஹாசன் போட்டியிட உள்ள நிலையில், அவர் மற்றொரு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது என கறாராக சொல்லிவிட்டதாம் மநீம தரப்பு. மேலும், குறைந்தபட்சம் 2 சீட் வேண்டும் என்பதிலும் மநீம உறுதியாக இருக்கிறதாம். உதயசூரியன் சின்னத்தில் நின்றால் 2 சீட் தரலாம், இல்லையென்றால் 2 சீட் பேச்சுக்கே இடமில்லை என்று திமுக தரப்பு பிடிவாதமாக இருக்கிறதாம்.

மறுக்கும் கமல்: ஆனால், உதயசூரியன் சின்னத்தில் நிற்க கமல்ஹாசனுக்கு விருப்பமில்லை. தனிக்கட்சியை தொடங்கி, திமுக அதிமுகவை சரமாரியாக விமர்சித்துவிட்டு மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் தானே நின்று ஓட்டு கேட்பதா என யோசிக்கிறாராம். ஆனால், உதயசூரியன் சின்னத்தில் நின்றால் கமல்ஹாசன் இப்போதே எம்.பி என எழுதி வைத்துக்கொள்ளலாம் என தூபம் போட்டுப் பார்க்கிறதாம் திமுக தரப்பு.

இப்படியாக, சீட் பஞ்சாயத்து முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே செல்கிறது. கமல்ஹாசனுக்கான சீட்டை காங்கிரஸிடம் பிரித்துக் கொள்ளச் சொல்லிவிடலாம் என திமுக தரப்பு நினைத்தால், காங்கிரஸோ, 10+2 என கமலுக்கும் சேர்த்துக் கேட்கிறதாம். ஏற்கனவே காங்கிரஸுக்கு வழங்கும் சீட்டை முடிந்தவரை குறைக்க திமுக முயன்று வரும் நிலையில், காங்கிரஸ் பிடித்த பிடியை விடாமல் இருப்பது திமுகவை அப்செட்டில் ஆழ்த்தியுள்ளதாம்.

2 சாய்ஸ் தான்: இப்போதைக்கு திமுக மக்கள் நீதி மய்யத்துக்கு தருவது இரண்டே சாய்ஸ்தான். மநீமவுக்கு திமுக கூட்டணியில் 1 சீட். அல்லது 2 சீட் வேண்டுமென்றால் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும், இதுதான் நிபந்தனையாம். கூட்டணி கட்சிகளுக்கு அதிகமாக சீட்டை பகிர்ந்து கொடுப்பதால், தேசிய அளவில் 3வது பெரிய கட்சி என்ற அங்கீகாரம் பறிபோகும், அதனை தவிர்க்கவே, கூட்டணி கட்சிகளுக்கு உதயசூரியன் சின்னத்தில் நிற்கும்படி நெருக்குகிறதாம் திமுக.

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். அதில், விரைவில் திமுக உடனான தொகுதி பங்கீட்டை முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல இருப்பதால், விரைவாக கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதி செய்ய, முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+