இந்த டீமை வச்சு ஜெயிச்சது எப்படி? சிஎஸ்கே அணியின் வெற்றி.. கற்றுக்கொடுத்த 5 பாடங்கள்.. தோனி மேஜிக்
சென்னை: குஜராத் அணிக்கு எதிராக ஐபிஎல் பைனலில் நேற்று சிஎஸ்கே அணி பெற்ற வெற்றி கார்ப்பரேட் உலகிற்கும், மக்களுக்கும் முக்கியமான பல பாடங்களை எடுத்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் 5வது முறையாக சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி உள்ளது. நேற்று சிஎஸ்கே டாஸ் வெல்ல குஜராத் முதலில் பேட்டிங் செய்தது. 39 பந்துகள் பிடித்த சாகா 54 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் கில் 20 பந்தில் 39 ரன்கள் எடுத்தார், ஆனால் அதிரடி குறையாமல் ஆடிய தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் 96 ரன்களை 47 பந்துகளில் எடுத்தார். 8 சிக்ஸ், 6 பவுண்டரி என்று சிஎஸ்கே அணியை இவர் புரட்டி எடுத்தார்.

கடைசியில் ஹர்திக் பாண்டியாவும் 12 பந்தில் 21 ரன்கள் எடுக்க குஜராத் அணி 20 ஓவரில் 214-4 ரன்கள் எடுத்தது. இதையடுத்து மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. அடுத்து 15 ஓவரில் 170 ரன்கள் எடுக்க வேண்டும் என்று டிஎல்எஸ் முறையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்து திரில் வெற்றிபெற்றது.
சிஎஸ்கே அணியில் கான்வே 47, ரஹானே 27 எடுக்க கடைசியில் டேஜா - துபே இருவரின் ஆட்டமும் நேற்று சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இருப்பினும், ஜடேஜா ( 6 பந்தில் 15 ) மற்றும் சிவம் துபே ( 21 பந்தில் 32* ) எடுத்தனர்.இருவரின் ஆட்டம் சிஎஸ்கேவின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

சிஎஸ்கே எடுத்த பாடம்: சிஎஸ்கே அணியின் இந்த வெற்றி கார்ப்பரேட் உலகிற்கும், மக்களுக்கு முக்கியமான பல பாடங்களை எடுத்துள்ளது. முக்கியமாக வாழ்க்கையில் ஊக்கம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முக்கியமான பாடத்தை இந்த வெற்றி கொடுத்துள்ளது. சிஎஸ்கே வெற்றி கற்றுக்கொடுத்த 5 விஷயங்கள் பின்வருமாறு,
இருக்கிற சோர்ஸை சிறப்பாக பயன்படுத்துவது: சிஎஸ்கே இந்த தொடரில் செய்த முக்கிய விஷயம் இருக்கின்ற சோர்ஸை சிறப்பாக பயன்படுத்தியது. பெரிதாக நல்ல பவுலர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இல்லை. பினிஷர்கள் பார்மில் இல்லை என்றாலும் சிஎஸ்கே இருக்கிற வீரர்களை நன்றாக பயன்படுத்தியது.
சிஎஸ்கே அணியை விட பேப்பரில் ராஜஸ்தான், பெங்களூர், குஜராத் அணிகள் வலிமையாக இருந்தும் கூட தோனி இருக்கிற வீரர்களை மிக நன்றாக பயன்படுத்திக்கொண்டார்.
பிளான் பி : தோனியிடம் இந்த சீசன் முழுக்கவே நல்ல பிளான் பி இருந்தது. உதாரணமாக பென் ஸ்டோக்ஸ் இல்லாத போது தோனி கவலைப்படவில்லை. சாகர் காயம் அடைந்த போது ஆகாஷ் சிங்கை கொண்டு வந்தார். இப்படி இந்த தொடர் முழுக்கவே தோனி பக்கா பிளானோடு ஆடினார்.

கண்டிப்பு - கசப்பான முடிவு: சமயங்களில் அணியில் சில கசப்பான முடிவுகளையும் எடுத்தார். பென் ஸ்டோக்ஸ் காயம் சரியாகியும் கூட.. அவரை அணியில் எடுத்தால் சிக்கல் என்று எடுக்கவில்லை. களத்தில் பீல்டர்களிடம் அவ்வப்போது கண்டிப்பும் காட்டினார்.
தோனி கூல்: தோனி இந்த முறை முகத்தில் உணர்ச்சிகளை காட்டவில்லை. ஜடேஜாவை நேற்று கட்டிபிடித்தது தவிர அவர் உணர்ச்சிகளை வெளிக்காட்டவில்லை. நேற்று மேட்சில் வென்ற போதும் கூட
குழு மனப்பான்மை - நம்பிக்கை வைப்பது: தோனி அணியில் இருக்கும் வீரர்கள் எல்லோர் மீதும் தீவிர நம்பிக்கை வைத்தார். அணியில் பார்மில் இல்லாதவர்களை கூட தொடர்ந்து ஆதரித்தார். மொயின், அம்பதி ராயுடு போன்றவர்களை கூட ஆதரித்தார். ராயுடு போன்றவர்களுக்கு தோனி கொடுத்த சப்போர்ட்தான் நேற்று சிஎஸ்கேவிற்காக அவர் காட்டு அடி அடிக்கவும் காரணமாக இருந்தது.












Click it and Unblock the Notifications