தாம்பரம் டூ திருநெல்வேலி.. ரயில்வேயின் சர்ப்ரைஸ்.. அதுவும் 3 ரயில்கள்.. பயணிகள் குஷி: ஹேப்பி பொங்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டதால், பயணிகளின் வசதிக்காக ரயில்வே முக்கிய ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்பதால், பயணிகளின் எதிர்பார்ப்பு கூடிவருகிறது.

பண்டிகை காலம் என்பதால், பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணமாகி வருகிறார்கள்.. அந்தவகையில், பொங்கல் பண்டிகையை கொண்டாடவும் தயாராகி வருகிறார்கள். இதனால், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய நேரிட்டுள்ளது..

What are the Happy Arrangement from Tambaram to Tirunelveli and 3 special trains announced on occasion of Pongal festival

நன்மைகள்: வழக்கமாக பண்டிகை நேரத்தில், பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும், தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்யும். அந்தவகையில், ஜனவரி 15ம் தேதி தைப்பொங்கல், ஜனவரி 16 செவ்வாய்க்கிழமை மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 புதன்கிழமை உழவர் திருநாள் என வரிசையாக விடுமுறை நாட்கள் வருகின்றன.

எனவே, இந்த முறை, சனிக்கிழமையன்றே விடுமுறை ஆரம்பமாகிவிடுவதால், 13 முதல் 17ம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால், ஜனவரி 12ம்தேதியே வெளியூருக்கு பயணமாக பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். எனவே, பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவாகி உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வரஉள்ள நிலையில், சிறப்பு ரயில்கள் பற்றின தகவல் வெளியாகி உள்ளது.

டிக்கெட் முன்பதிவு: ஏற்கனவே, சொந்த ஊர்களுக்குச் செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த செப்டம்பரில் தொடங்கி, விரைவாக முடிந்துவிட்டது.. அதேபோல, வரும் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பெரும்பாலான ரயில்களில் டிக்கெட் முன்பதிவுகளும் முடிந்துவிட்டன..

எனினும், ரயில்களில் முன்பதிவு செய்யமுடியாத பொதுமக்கள், சிறப்பு ரயில்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், முன்பதிவில்லாத ரயில் உள்ளிட்ட 3 சிறப்பு ரயில்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. சென்னை எழும்பூரிலிருந்து நெல்லைக்கு ஜனவரி 14, 16-ம் தேதியும், மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து ஜனவரி 15,17-ம் தேதி ஜன் சதர்ன் விரைவு ரயில் (24 பெட்டிகளைக் கொண்ட முன்பதிவில்லாத ரயில்) இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

விரைவில் அறிவிப்பு: இதுதவிர, தாம்பரம் - திருநெல்வேலி இடையே வரும் 11, 13, 16-ம் தேதிகளிலும், நெல்லையிலிருந்து ஜனவரி 12, 14, 17-ம் தேதிகளிலும் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.. அதுமட்டுமல்ல, கோவை-சென்னை எழும்பூர் இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாம்.. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதால், பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+