சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"என்ன நடக்குது அங்கே?.. இதை செய்யுங்க முதல்ல".. ஸ்டாலினிடம் இருந்து அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு..!

அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை:''அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் மக்கள் தான் எஜமானர்கள். எனவே, 1 ரூபாய் செலவு செய்தால், அந்த 1 ரூபாய் சிந்தாமல், சிதறாமல் கடைக்கோடி மக்களை சென்றடைய வேண்டும்,'' என, கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். இதன் வாயிலாக, மக்களை கவர அவர் 'புது ரூட்' போடுவது தெரிய வந்துள்ளது.

மாவட்ட கலெக்டர்கள், எஸ்பிக்கள், வனத்துறை அலுவலர்கள் மாநாடு, தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் துவங்கியது...

இந்த 2 நாள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் மாநாட்டிற்கு தலைமை வகித்து பேசி வருகிறார். நேற்று முன்தினம், காவல்துறையினரிடம் நிறைய விஷயங்களை பேசிய ஸ்டாலின், புது உத்தரவுகளையும் பிறப்பித்திருந்தார்.

அதிமுகவை அழிக்க பொய் வழக்கு... ஹிட்லரின் மறு உருவம் ஸ்டாலின் - ஜெயக்குமார் குற்றச்சாட்டு அதிமுகவை அழிக்க பொய் வழக்கு... ஹிட்லரின் மறு உருவம் ஸ்டாலின் - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

காவல்துறை

காவல்துறை

சட்டம் - ஒழுங்கு விஷயத்தில் மட்டும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்... பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் குற்றங்கள், பொருளாதார குற்றங்கள் போன்றவற்றை, அரசு ஒருபோதும் அனுமதிக்காது... மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி, உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.. நாசகார சக்திகள் எந்த வடிவிலும் தலைதூக்க அனுமதித்து விடக்கூடாது. கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, மோசடி, நில அபகரிப்பு போன்ற மக்களை பாதிக்கக் கூடிய செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும்சரி, உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.

கைது

கைது

"தமிழகம் நம்பர் 1" என்ற நிலையை அடைய வேண்டும் என்ற என்னுடைய கனவு திட்டத்தை, உங்களை நம்பி ஒப்படைக்கிறேன்... மக்கள் நலன் சார்ந்த திட்டங்களின் வெற்றி என்பது, மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகளின் செயல்பாடுகளைப் பொறுத்தே அமையும். அதனால், அனைவரும் நேர்மையாக, முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.. இந்நிலையில், நேற்றையதினம் 2-ம் நாள் மாநாடு நடந்தது.. இதில், அமைச்சர்கள், தலைமை செயலர் இறையன்பு, துறை செயலர்கள், கலெக்டர்கள் பங்கேற்றனர்.

அமைச்சர்கள்

அமைச்சர்கள்

முதல்வர் ஸ்டாலின் இங்கு பேசியபோது, "கலெக்டர்கள் அவரவர் மாவட்டங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்த, கள நிலவரத்தை விரிவாக எடுத்துரைக்கலாம்... அரசு திட்டங்களின் பயன் மக்களை சென்றடைகிறதா என்பதை உறுதி செய்வது குறித்து உடனடியாக தெரிவிக்க வேண்டும்... எங்களை போன்ற அரசியல்வாதிகளுக்கும், உங்களை போன்ற அதிகாரிகளுக்கும் மக்கள் தான் எஜமானர்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.. 1 ரூபாய் செலவு செய்தால்கூட, அந்த 1 ரூபாய் சிந்தாமல், சிதறாமல் கடைக்கோடி மக்களும் சென்றடைய வேண்டும்... அது தான் சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டு..

எஜமானர்கள்

எஜமானர்கள்

ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறைவேற்றப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து சொல்லுங்கள்.. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு விதமான பொருட்கள் கிடைக்கின்றன... அவற்றை எப்படி மார்க்கெட் செய்வது, அதிலிருந்து எப்படி அரசுக்கு வருமானத்தை பெருக்குவது குறித்த ஆலோசனைகளையும் சொல்லுங்கள். விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுதொழில், பெருந்தொழில் இப்படி அனைத்து தரப்புக்குமே பயனளிக்கக் கூடிய திட்டங்களை சுதந்திரமாக நீங்கள் தெரிவிக்கலாம்" என்றார்.

 புது ரூட்

புது ரூட்

பொங்கல் நல தொகுப்பு விவகாரத்தை எதிர்க்கட்சிகள் ஊதி பெரிதாக்கியதில் இருந்தே, முதல்வர் ஸ்டாலின் விழிப்புடன் இருப்பதாக சொல்கிறார்கள்.. அரசு தரப்பில், அரசு அதிகாரிகள் தரப்பில், ஒரு சின்ன தவறு நடந்தாலும், அது எதிர்க்கட்சிகளைவிட, பொதுமக்களையே நேரடியாக பாதித்துவிடுவதால், சமீப காலமாகவே மக்கள் நலனில் கூடுதல் அக்கறை எடுத்து வருகிறாராம் முதல்வர் ஸ்டாலின். 'மக்கள் தான் எஜமானர்கள்' என்று பேசியிருப்பதன் வாயிலாக, மக்களை கவரும் வகையில் புது ரூட்டை கையில் எடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

English summary
What are the instructions given by the Chief Minister mk stalin to the government officials
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X