Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நமது நாட்டில் ஒவ்வொரு நாளும் பல கோடி பேர் பயணிக்கும் ரயில் பெட்டிகள் பல்வேறு கலர்களில் கிடைக்கிறது. இதுபோல உள்ள ரயில்களில் பல்வேறு சுவாரசியங்கள் மறைந்து உள்ளன. அப்படி இருக்கும் ரயில் பெட்டிகளில் ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம்.. அதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

இந்தியாவில் ரயில் பயணம் செய்பவர்கள் ரயில் நிலையங்களில் ஒரு விஷயத்தைக் கவனிப்பார்கள். அதாவது நமது நாட்டில் அனைத்து ரயில்களும் எப்போதும் ஒரே நிறத்தில் இருப்பது இல்லை. நீல நிறம், சிவப்பு நிறம், வெள்ளை நிறம் எனப் பல வகை ரயில்கள் உள்ளன. இதற்குப் பின்னால் ஒரு அர்த்தம் இருக்கவே செய்கிறதாம். இந்திய ரயில்களின் வண்ணங்கள் தற்செயலானவை அல்ல. அதேநேரம் அதிகாரப்பூர்வ பிரிவுகளும் கிடையாது. இருப்பினும், காலப்போக்கில் இந்த கலர் ரயிலுக்கு இதுதான் அர்த்தம் என்று வகைப்படுத்தும் ஒரு வழியாக இது மாறியுள்ளது.

train India offbeat

நீல நிற ரயில்கள்

நீல கலர் பெட்டிகளைக் கொண்ட ரயில்கள் இந்தியாவில் பரவலாகக் காணப்படுகின்றன. இவை பழைய தலைமுறையைச் சேர்ந்தவை. பல ஆண்டுகளாக, நீண்ட தூரப் பயணத்திற்கு நீல கலர் ரயில் பெட்டிகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்போதும் நாடெங்கிலும் தினமும் பல லட்சம் இவை பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.

ஒரு நீல நிற ரயில் பெட்டியில் நீங்கள் பயணம் செய்தால், அது பெரும்பாலும் மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயிலாகவே இருக்கும். இத்தகைய ரயில்கள் நம்பகமானவை.. நாடு முழுவதும் விரிவான அளவில் சேவையை வழங்கும். மேலும், இதன் டிக்கெட்களும் பெரியளவுக்குச் செலவு வைக்காது. இந்த நீல கலர் பெட்டிகள் பல ஆண்டுகளாகச் சிறப்பாகச் சேவை செய்துள்ளன. ஆனால் இப்போது அவை புதிய பெட்டிகளுக்கு வழிவிட்டு படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன.

சிவப்பு நிற ரயில்கள்

கடந்த சில ஆண்டுகளில், சிவப்பு அல்லது மெரூன் கலர் பெட்டிகளை நம்மால் அதிகம் பார்க்க முடிகிறது. குறிப்பாக முக்கிய வழித்தடங்களில் இந்த கலர் பெட்டிகள் அதிகம் வரத் தொடங்கியுள்ளன. இவை LHB பெட்டிகள் என அறியப்படுகின்றன. ரயில்களின் பாதுகாப்பு, வேகம் மற்றும் வசதி ஆகியவற்றை இது உறுதி செய்கிறது. நீலத்திற்குப் பிறகு அடுத்த தலைமுறை ரயில் பெட்டிகளாக இவை அறியப்படுகிறது.

இதில் இரு விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. முதலில் அதிவேகத்தில் பயணிக்கும் திறன்.. அடுத்து மோதல் ஏற்பட்டாலும் குறைந்த சேதம் ஏற்படுத்துவது ஆகிய இரண்டிற்கும் தான் இந்த மெரூன் கலர் ரயில்களில் முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்த மேம்பட்ட பெட்டிகள் பிரீமியம் மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் பயணத்தை உறுதி செய்கிறது. இது பயணிகளுக்கு ஒரு மேம்பட்ட அனுபவத்தைத் தருகிறது.

வெள்ளை நிற ரயில்கள்

இப்போது டிரெண்டில் இருப்பது இந்த வெள்ளை நிற பெட்டிகள் தான். இது இந்திய ரயில்வேயின் புதுமையைக் காட்டுவதாக இருக்கிறது. அழகிய வடிவமைப்பைக் கொண்ட வெள்ளை கலர் ரயில்கள் இப்போது பிரதானமாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயன்படுத்தப்படுகிறது. அம்ரித் பாரத் உள்ளிட்ட ரயில்களிலும் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த வகை ரயில்களில் இன்ஜினுக்கு தேவையில்லை. இன்ஜின் மற்றும் பெட்டிகள் ஒன்றாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. வெள்ளை கலர் ரயில்கள் வேகம், நவீனத்துவம் மற்றும் ஒரு பிரீமியம் அனுபவத்தைக் கொடுக்கிறது.

கவனிக்க வேண்டியது

அதேநேரம் நாம் இன்னொரு விஷயத்தையும் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது ஒரு ரயிலின் கலரை வைத்தே அவை சூப்பர் ஃபாஸ்ட், எக்ஸ்பிரஸ் அல்லது பிரீமியம் ரயிலா என்று சொல்ல முடியாது. உதாரணமாக, சிவப்பு கலர் ரயில் நீல கலர் ரயிலை விட வேகமாக இருக்கும் என்று அர்த்தமல்ல. ரயிலின் வேகம் அல்லது அதன் வகைக்கும் நேரடி தொடர்பு இல்லை. ரயில் என்ன வகை என்பதை அதன் பெயர்களில் தான் நீங்கள் பார்க்க வேண்டும். ரயிலின் கலர் நமக்கு ஒருவித ஐடியாவை கொடுத்தாலும் அவை துல்லியமான தகவல்களைக் கொடுக்காது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+