கூண்டோடு நீக்கப்பட்ட ஓபிஎஸ், வைத்தி அண்ட் டீம்! எடப்பாடி அதிரடி.. அடுத்து நடக்க போகும் 3 விஷயங்கள்!
சென்னை: அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு உள்ளார். இதனால் ஓ பன்னீர்செல்வம் அடுத்து என்ன செய்ய போகிறார்.. அவரின் மூவ் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
அதிமுக பொதுக்குழு, செயற்குழு விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டு உள்ளார்.
அதோடு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு, பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு தீர்மானம்
இந்த நிலையில் இன்று அதிமுக பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதாவது அதிமுகவின் பொருளாளர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு இருக்கிறார். அவர் மட்டுமின்றி அவரோடு நட்பாக இருந்த ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் மொத்தமாக நீக்கப்பட்டு உள்ளனர்.

மொத்தமாக நீக்கம்
மொத்தமாக நீக்கம் என்றால் வைத்தியலிங்கம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அதேபோல் , மனோஜ் பாண்டியன், பிரபாகர் ஆகியோரும் நீக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் அதிமுக நிர்வாகிகள் யாரும் பேச கூடாது. அதிமுக நிர்வாகிகள் யாரும் இவர்களுடன் தொடர்பில் இருக்க கூடாது என்று தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது. இவர்கள் இனி அடிப்படை உறுப்பினர்கள் கிடையாது.

பதிலடி
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஓ பன்னீர்செல்வம், எடப்பாடியை கட்சியை நீக்கி உள்ளார். என்னை கட்சியில் இருந்து நீக்க முடியாது. நான் தொண்டர்கள் மூலம் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டேன். என்னை நீக்க கட்சி விதி அனுமதிக்காது. அதனால் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவில் இருந்து நீக்குகிறேன். எடப்பாடி மற்றும் கேபி முனுசாமியை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குகிறேன் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்
ஆனால் பொதுக்குழு மூலம் நீக்கப்பட்ட காரணத்தால் ஓ பன்னீர்செல்வத்திற்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் 3 முக்கியமான முயற்சிகளை எடுக்க முடியும்.
முதல் வாய்ப்பு - பொதுக்குழு செல்லாது. பொதுக்குழு கூட்டப்பட்டது சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றம் செல்வது. உச்ச நீதிமன்றம்தான் பொதுக்குழுவை நடத்த அனுமதி கொடுத்தது என்பதால் அங்குதான் இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் முறையிட வேண்டும். அப்போதுதான் தான் நீக்கப்பட்டது செல்லாது என்று முடிவை கொண்டு வர முடியும்.

என்னென்ன வாய்ப்பு
இரண்டாவது வாய்ப்பு - பொதுக்குழுவிற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் முறையிடுவது. நான் ஒருங்கிணைப்பாளர். தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டவர். அதனால் என்னை நீக்குவதும், என்னுடைய பதவியை நீக்குவதும் செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம் முறையிட வாய்ப்பு உள்ளது.
மூன்றாவது வாய்ப்பு - இரண்டு வாய்ப்பும் பயன் அளிக்காத நிலையில், ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழு முடிவை ஏற்றுக்கொண்டு கட்சியில் இணைய முயற்சிக்காமல் சசிகலா - டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற முடியும்.

என்ன நடக்கும்?
இந்த மூன்று விஷயங்களில் ஏதாவது ஒன்றுதான் நடக்க வாய்ப்பு உள்ளது. இந்த பொதுக்குழு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் சொல்ல வாய்ப்பு குறைவு. ஆனால் தேர்தல் ஆணையம் இதில் முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் தேர்தல் ஆணையமும் பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்காத பட்சத்தில், அது ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக திரும்பும் வாய்ப்புகள் உள்ளனர். ஓ பன்னீர்செல்வம் அடுத்து என்ன செய்ய போகிறார்.. அவரின் மூவ் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications