ஆன்லைன் ரம்மி தடை சட்டம்.. திருப்பி அனுப்ப ஆளுநர் சொல்லியுள்ள காரணம் என்ன! விளக்கிய அமைச்சர் ரகுபதி
ஆன்லைன் ரம்மி தடை விவகாரம் குறித்து அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
சென்னை: முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்து விளக்கினார்.
இந்தியாவில் சூதாட்ட விளையாட்டிற்கு ஏற்கனவே தடை உள்ளது. அதேநேரம் ஆன்லைனில் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு இதுவரை எந்தவொரு தடையும் இல்லை.. இதனால் பலரும் அதற்கு அடிமையாகி வருகின்றனர்.
குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் அனைவரும் வீடுகளிலேயே முடங்கிய நிலையில், அப்போது பலரும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையானார்கள். பலரும் பல லட்சம் பணத்தை இழந்தார்கள்.

ஆன்லைன் ரம்மி
இதனால் தற்கொலை சம்பவங்களும் அதிகரித்த நிலையில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட அனைத்து விதமான சூதாட்ட விளையாட்டுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்ற பலரும் வலியுறுத்தினர். அதன்படி கடந்த 2020 நவம்பர் 21இல் அப்போதைய இருந்த அதிமுக அரசு, ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து சட்டம் நிறைவேற்றியது. இருப்பினும், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் இந்த சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்தது.

தமிழக அரசு
மேலும், தமிழ்நாடு அரசே இது தொடர்பாக அவசரச் சட்டத்தை நிறைவேற்றலாம் எனவும் சென்னை நீதிமன்றம் பரிந்துரைத்தது. இதையடுத்து திமுக ஆட்சிக்கு வந்த பிறகும், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தது. அந்த குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் கடந்தாண்டு மாதம் சட்டத்தை இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதா அனுப்பப்பட்டு 140க்கும் மேற்பட்ட நாட்கள் ஆகிவிட்ட நிலையில், ஆளுநர் ஒப்புதல் தரவில்லை.

ஆளுநர் ரவி
ஆன்லைன் சூதாட்டத்தால் பல லட்சம் பணத்தை இழந்து, குடும்பத்தை நிர்க்கதியில் நிற்க வைத்துவிட்டு இதுவரை 47 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் ஆளுநர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியனர். இந்தச் சூழலில் அவசரச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திரும்பி அனுப்பினார். மேலும், இது தொடர்பாக சில கேள்விகளையும் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

அமைச்சரவை கூட்டம்
இந்தச் சூழலில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். குறிப்பாக, ஆளுநர் ரவி எதற்காக இந்த மசோதாவைத் திருப்பி அனுப்பினார் என்பதை விளக்கிய அமைச்சர் ரகுபதி அதற்கான விளக்கங்களையும் அளித்துள்ளார்

காரணம்
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதாகத் தெரிவித்துள்ள ஆளுநர், மாநில அரசுக்கு ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் அதிகாரம் இல்லை என்றும் கேட்டுள்ளார். இதைக் குறிப்பிட்ட அமைச்சர் ரகுபதி, "முந்தைய அரசு கொண்டு வந்த சட்டத்தில் திருத்தங்களைச் செய்து மீண்டும் இயற்றலாம் என்றே நீதிமன்றம் கூறியிருந்தது. அவர்கள் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று எதுவும் கூறவில்லை. இதன் மூலம் ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் சட்டம் இயற்ற நீதிமன்றமே அதிகாரம் அளித்துள்ளது.

விளக்கம்
உயர்நீதிமன்ற வழிகாட்டுதல் படியே ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து பரிந்துரைகள் பெறப்பட்டன. நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளின் படியே மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும், வரும் சட்டசபை கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசுக்கு இந்த விவகாரத்தில் அதிகாரம் இருக்கிறது என்று கூறி, மீண்டும் சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றி அனுப்பப்படும்" என்றார். மேலும், ஆளுநர் கேட்டுள்ள சில கேள்விகளுக்கும் ஏற்கனவே விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மீண்டும் தடை சட்டம்
மத்திய அரசின் அதிகாரங்கள் பட்டியலில் 34ஆவது பிரிவின் கீழ் தான் மசோதா நிறைவேற்றப்பட்டது என்ற அவர், ஆளுநர் குறிப்பிட்டது போல் 33வது பிரிவின் கீழ் மசோதா நிறைவேற்றப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், மக்களைப் பாதுகாக்கவே ஆன்லைன் ரம்மி தடை சட்டம் கொண்டு வரப்படுவதாகத் தெரிவித்த அவர், மீண்டும் மசோதா நிறைவேற்றி அனுப்பினால், ஆளுநர் நிராகரிக்க முடியாது என்றார். ஏற்கனவே, தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
நகராட்சி டெண்டர் நடவடிக்கைகள் அனைத்தும் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும்: தமிழ்நாடு அரசு அதிரடி! -
ஹாஸ்டலாக மாறும் வீடுகள்.. கேள்விக்குறியாகும் பெண்கள் பாதுகாப்பு! தமிழக அரசு கொடுத்த சூப்பர் சான்ஸ் -
மூக்கில் ஆபரேஷன் செய்ய போய் உயிரிழந்த சீதாலட்சுமி! அரசு தந்த இலவச வீட்டு மனை பட்டா! நெகிழ்ந்த சகோதரி -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications