நடிகர் போண்டா மணிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை.. நாளை முதல் டயாலிசிஸ்.. என்ன நடக்கிறது?
சென்னை: மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், முதல் கட்டமாக நாளை முதல், அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில், சிறுநீரகம் செயலிழப்பால் நகைச்சுவை நடிகர் போண்டா மணி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணியை, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து, மருத்துவர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

டயாலிசிஸ் சிகிச்சை
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது: நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாளை முதல் அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை முறை தொடங்க இருக்கிறது. அவரது உறவினர்கள் மூலமாகவோ, அல்லது உறுப்பு தான ஆணையத்தின் மூலமாகவோ சிறுநீரகம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு அளிக்கப்படக்கூடிய சிகிச்சைகள் அனைத்தும் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது.

சித்த மருத்துவ பல்கலைக்கழகம்
தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கக் கோரி சட்டம் இயற்றப்பட்ட நிலையில், இதற்கு ஒப்புதல் அளிப்பதற்காக ஆளுநருக்கு அனுப்பப் பட்டுள்ளது. அதில், தமிழக ஆளுநர் சில கேள்விகளை எழுப்பி இருந்தார். தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவில் மாணவர் சேர்க்கை தொடர்பான விளக்கம் கோரி கடிதம் எழுதினார்கள். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து விரிவான பதில் அனுப்பப்பட்டுள்ளது. சட்ட மசோதாவின் பிரிவுகளுக்கு முரண்பாடு இல்லை என விரிவான விளக்கத்தோடு பதில் அனுப்பப்பட்டுள்ளது. ஆளுநர் விரைந்து அனுமதி அளிப்பார் என எதிர்பார்க்கிறோம்.

உறுப்பு தானம் - தமிழகம் முதலிடம்
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தொடர்ந்து உறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ளது. எலும்பு, தோல், கண், இருதயம் உள்ளிட்ட பல்வேறு உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு மாதவரத்தில் 25 ஏக்கர் இடம் பார்த்துள்ளோம். பல்கலைக்கழக அலுவலகம் திறக்கப்பட்ட உடன் அடுத்தக்கட்டப் பணிகள் நடைபெறும்.

காய்ச்சல் முகாம்கள்
ஒரே தெருவில் 3-க்கும் அதிகமான மாணவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், அங்கு காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். வடகிழக்கு பருவமழை முழுவதுமாக முடியும் வரை தமிழகத்தில் காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications