தமிழ்நாட்டில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்கள் எவை எவை? பட்டா யாருக்கெல்லாம் வரும்?
சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல ஆண்டுகளாக சிக்கலில் உள்ள நிலப்பிரச்சனைகளுக்கு தீர்வுகாண அரசு முடிவெடுத்துள்ளது.இந்த மாவட்டங்களில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு இடங்களில் குடியிருப்போருக்கு 6 மாதத்தில் பட்டா வழங்குவது என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் அரசு பட்டா தரப்போகும் ஆட்சேபனையற்ற மற்ற அரசு புறம்போக்கு நிலங்கள் என்னவாக இருக்க வாய்ப்பு உள்ளது என்பது பற்றி பார்ப்போம்.
தமிழக சட்டசபை வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ள நிலையில், அப்போது தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதன் முன்னோட்டமாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இரண்டு நாள் முன்பு நடந்தது.இந்த கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், நேரு உள்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றார்கள்.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. அமைச்சரவை கூட்டம் முடிந்ததைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசும் போது, "ஏழை மக்களுக்கான நிவாரணத்தில் மிகப்பெரிய புரட்சியை முதல்வர் செய்திருக்கிறார். சென்னையை சுற்றியிருக்கக்கூடிய 4 மாவட்டங்களில், 'பெல்ட்' ஏரியா என்று சொல்லக்கூடிய பகுதிகளில் இருக்கக்கூடிய 32 கி.மீ. பரப்பளவில் குடியிருப்பவர்கள், ஆக்கிரமிப்பு செய்து நீண்ட நெடுங்காலமாக வசித்து வருகிறார்கள் அவர்கள் பட்டா பெற முடியாமல் சிரமப்படுவதும், அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்ய முடியாமல் இருப்பதும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதன்படி, சென்னையை சுற்றியிருக்கக்கூடிய 4 மாவட்டங்களில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதியில் இருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னையில் மட்டும் 29 ஆயிரத்து 187 பேர் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதியில் குடியிருந்து வருகிறார்கள் அவர்களுக்கெல்லாம் பட்டா வழங்குவதற்கான பணிகளை 6 மாத காலத்திற்குள் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அமலில் உள்ள இந்த 'பெல்ட்' ஏரியா சட்டம் 1962-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. 1962-ம் ஆண்டில் இருந்து இந்த ஆண்டுவரை அதன் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இன்றைக்குத்தான் பெல்ட் ஏரியா பகுதி தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், மிகத் தெளிவாக ஒரு முடிவெடுத்து, 6 மாதத்திற்குள் பட்டா வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், மாவட்ட அளவில் ஒரு குழுவும், சென்னையில் மாநில அளவில் ஒரு குழுவும் அமைக்கப்பட உள்ளது. உடனடியாக அந்தப் பணிகளை தொடங்கி 6 மாத காலத்திற்குள்ளாக முடிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்கள். சென்னையை சுற்றியிருக்கக்கூடிய 4 மாவட்ட மக்களுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்றார்.
சென்னை மட்டுமின்றி மதுரை, நெல்லை போன்ற மாநகராட்சிகளில் அதுபோன்ற பிரச்சினை உள்ளது. அங்கே இருப்பவர்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட தலைநகரில் இருக்கக்கூடிய பகுதிகளுக்கெல்லாம் சேர்த்து, மொத்தம் 57 ஆயிரத்து 84 பேர் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதிகளில் குடியிருந்து வருபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் பட்டா வழங்கப்பட வேண்டியிருக்கிறது..
அந்த வகையில், 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்குகிற தீர்மானம், இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
அதேநேரம் சென்னை, செங்கல்பட்டு,திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட சென்னை மற்றும் சென்னையின்புறநகர் பகுகிளில்
ஆட்சேபனைக்குரிய நீர் நிலை பகுதிகள் தவிர, ஆட்சேபனையற்ற மற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே பட்டா வழங்கப்படும் என்றுஅரசு தெளிவாக கூறியுள்ளது. அதன்படி நீர்நிலைகளை ஆக்கிரமிதுது குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கவாய்ப்பே இல்லை..
அதேநேரம் சென்னை புறநகர் பகுதிகளில் ஆட்சேபனையற்ற நிலங்கள், அதில் குடியிருக்கும் கால அளவு உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அரசுவெளியிடப்போகும் அரசாணையில் மட்டுமே தெரியவரும். அதேநேரம் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்கள் என்றால், களம் புறம்போக்கு, நத்தம் புறம்போக்கு, பாதை புறம்போக்கு, அனாதீனம் ஆகியவை ஆட்சேபனை அற்ற அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகியவை உள்ளார்.பொதுவாக ஆட்சேபனை அற்ற அரசு புறம்போக்கு நிலங்களுக்கு தனி நபர் பெயரில் பட்டா நினைத்தால் வழங்கலாம்.
அதேநேரம் ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டியிருப்பவர்களுக்கு சென்னையை பொறுத்தவரை குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி வீடுகள் ஒதுக்கப்படுகிறது.அந்த வகையில் ஒருவேளைஅரசு ஆட்சேபனை உள்ளபுறம்போக்கு பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்ற நினைத்தால், அடுக்குமாடி வீடு ஒதுக்க வாய்ப்பு உள்ளது.
இதனிடையே / நத்தம் குடியிருப்பு பகுதியில் இருக்கும் புறம்போக்கு நிலத்தை பொறுத்த வரை பட்டா வழங்கும் திட்டத்தை, அரசே நேரடியாக செயல்படுத்தி வருவதால், எளிதாக பட்டா வாங்கிவிட முடியும். அதேநேரம் கோயில் நிலம், சாலை ஆக்கிரமிப்பு பகுதிகளில் குடியிருப்பவர்கள், ஓடைகளை ஆக்கிரமித்து குடியிருப்பவர்கள் எத்தனை வருடம் குடியிருந்தாலும், எந்த காலத்திலும் பட்டா வாங்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று தான் சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications