உலகை ஆட்டிப்படைக்கும் மஞ்சள் பிசாசு! தங்கம் விலை ஏறுவது ஏன்?
சென்னை: தங்கம் விலை ஏற்றத்திற்கு என்ன காரணம்? உலகில் போர் சூழல் வரப்போகிறதா? அல்லது வேறு என்ன காரணம்?
இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600க்கு விற்பனையாகி வருகிறது. ஆனால் கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை விர்ர்ர்ர்ர்ர் என்று விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதற்கு என்ன காரணம்? சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து விட்டதா என்றால் இல்லை. வழக்கமாக தேவை என்னவோ அதே அளவுதான் உள்ளது. வாங்குபவர்களின் எண்ணிக்கை கூடி விட்டதா என்றால் அதுவும் இல்லை.
பிறகு ஏன் தங்கம் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. இதுதான் மண்டையை உடைக்கும் மிகப் பெரிய சந்தேகம்.
அதற்கு சரியான விளக்கங்களை அளிக்கிறார் பங்குசந்தை ஆலோசகர் சோம வள்ளியப்பன். தங்கத்திற்குள் உள்ள சர்வதேச அரசியலை சர்வசாதாரணமாக பாமரனுக்கும் புரியும் படி அவர் பேசியுள்ளார்.
"தங்கம் என்பது மற்ற உலோகங்களைப் போன்றது அல்ல. அதாவது காப்பர், இரும்பு, அலுமினியம், ஸ்டீல் போன்றது அல்ல. தங்கம் அல்லாத மற்ற உலோகங்கள் தேவை அதிகரித்துவிட்டால், விலையானது ஏறிவிடும். தங்கம் என்பது அப்படி அல்ல.

இப்போது தங்கத்திற்கான தேவை அதிகரித்துவிட்டதா என்றால் இல்லை. வழக்கம் போல் தங்கத்திற்கு என்ன தேவை உள்ளதோ அதே நிலைதான் நீடிக்கிறது.
ஆனால், கடந்த 10 நாள்களில் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. தேவை அதிகரித்தால்தானே விலை ஏற வேண்டும்? அப்படி இல்லாத போது ஏன் விலை அதிகரித்தது என்றால், அங்குதான் வேறு காரணங்கள் இருக்கின்றன.
முதலீட்டுக்கு தங்கத்தைவிட சிறந்த உலோகம் வேறு கிடையாது. அதுதான் இருப்பதிலேயே பெஸ்ட். நீங்கள் பங்குசந்தையில் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தால், அந்த நிறுவனம் நொடிந்துவிட்டால் நம் முதலீடு போய்விடும். அல்லது பங்குசந்தையில் ஒரு ஊழல் வந்துவிட்டால், நம் முதலீடுக்கு உத்தரவாதம் இல்லாமல் போய்விடும்.
இதே நிலைதான் மியூச்சுவல் ஃபண்ட்டுக்கும். தங்கம் என்பது நம் கையிலேயே உள்ளது. அதற்கான சந்தை மதிப்பும் காலங்காலமாக ஒரு நிலைத்தன்மையில் உள்ளது. ஆகவே, அந்த முதலீட்டை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்ப நஷ்டமாகாமல் பெற முடியும்.

தங்கத்தின் மதிப்பானது பணத்தைப்போல நாட்டுக்கு நாடு வேறுபடுவதில்லை. எல்லா நாடுகளிலும் தங்கத்திற்கு மதிப்பு உள்ளது. ஆகவேதான் பலரும் தங்கத்தில் முதலீடு செய்வதை விரும்புகிறார்கள்.
நமது சென்ட்ரல் பேங்க் என்பது ரிசர்வ் வங்கி. அமெரிக்காவில் ஃபிடரல்ரிசர்வ். இப்படி உலகில் உள்ள சென்ட்ரல் வங்கிகள் 2023 ஆம் ஆண்டு மட்டும் வாங்கி உள்ள தங்கம் எவ்வளவு தெரியுமா? 1037 டன். இந்திய ரிசர்வ் வங்கி மட்டும் 2023இல் ஒரு டன் தங்கத்தை வாங்கியுள்ளது.
இதைப் போல பல அரசாங்கங்கள் தங்கத்தை பெரிய அளவில் வாங்கியுள்ளன. ஆகவே தங்க சந்தையில் வாடிக்கையாளர்கள் மட்டுமே இல்லை. இந்த அரசுகளும் இருக்கின்றன.
பொதுவாக பத்திரங்களில் முதலீடு என்பது நல்ல வருமானத்தைக் கொடுக்கும். ஆனால், பத்திரங்களை வாங்கி வைப்பதன் மூலம் நிலையான வருமான இல்லை என்ற நிலை சந்தையில் உண்டானால், அரசுகள் தங்கத்தில் கூடுதலாக முதலீட்டை போடுவார்கள். அப்படிப் போட்டால் அவர்களுக்கு வருமானம் அதிகம் கிடைக்காது.
பத்திர முதலீடு, ஸ்டாக் மார்கெட் இரண்டும் காலை வாரும்போது தங்கத்தின் பக்கம் அதிக அளவில் முதலீட்டை அரசுகள் செய்கின்றன. இப்படிப் பெரிய முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் அதிக முதலீட்டை செய்யும் போது, அதன் விலையானது சந்தையில் கிடுகிடுவென்று உயர்ந்துவிடும். அதுதான் இப்போது நடந்துள்ளது.
24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலையானது 2019இல் 3,522 ரூபாய் இருந்தது. அதே 2020 வருடம் ஒரு கிராம் 4,865 ரூபாய் இருந்தது. அப்படிப் பார்த்தால் ஒரே ஆண்டில் தங்கத்தின் விலை எவ்வளவு ஏறியுள்ளது எனப் பாருங்கள்.
வாடிக்கையாளர்களால் இந்த விலை ஏற்றம் நடக்கவில்லை. பல நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்வதால் இமயமலை அளவுக்கு விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு நடுவில் இடைத்தரகர்கள் என்று ஒரு வர்க்கம் உள்ளது. அவர்கள் இப்படித் தங்கத்தின் விலை ஏறப்போகிறது என்பதை முன்கூட்டியே கணித்துவிட்டால், தங்கப் பத்திரங்களை வாங்கி வைத்து விற்பார்கள்.
அதில் 100 ரூபாய் விலை உள்ள தங்கத்தை வாங்க, நீங்கள் 20 ரூபாய் முதலீடு செய்தாலே போதும். அதற்கான சான்றுகளை உங்களுக்குக் கொடுத்து விடுவார்கள். அதை விலை ஏறும் போது அப்படியே விற்று பணம் சம்பாதிக்க முடியும்.
இந்த மாதிரியான காரணத்தினால் கூட தங்கத்தின் விலை ஏறி வருகிறது. பொதுவாக போர் சூழல், நிலைத்தன்மையற்ற பொருளாதாரம் ஆகிய காலங்களில் இப்படித் தங்கமானது விலை ஏறும்.
ஏற்கெனவே உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் நடக்கின்ற போர் சூழலால் தங்கம் விலை ஏறி இருக்க வேண்டும். ஆனால், அதை ஓரளவுக்கு சமாளித்து விட்டது உலக வர்த்தக சந்தை.
பாலஸ்தீனம் மற்றும் ஈராக் போர் சூழலால் விலை ஏறி இருக்க வேண்டும். விலை ஏற்றம் சின்னதாக ஒரு குதி குதித்தது. அதையும் கூட கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டார்கள். அதற்காக தங்கம் விலை ஏறவில்லை.
இப்போது இந்தப் போர் களத்தில் ஈரான் இறங்கியுள்ளது. இந்த நாடு நியூக்ளியர் வைத்து உள்ளது. இஸ்ரேலிடமும் நியூக்ளியர் உள்ளது.
ஆகவே அச்சுறுத்தல் அதிகம். ஏற்கெனவே இந்த நாடுகளின் தாக்குதல் தொடங்கிவிட்டன. அடுத்து என்ன நடக்கும் என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. இதனாலும் தங்கத்தின் விலை கூடி உள்ளது" என்று விசயத்தை புட்டு புட்டு வைத்தார்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications