"ஓ, அவரா.." நித்தியானந்தா குறித்து வந்து விழுந்த கேள்வி! சாட் ஜிபிடி சொன்னது என்ன தெரியுமா! அட பாவமே
சாட் ஜிபிடி நித்தியானந்தா குறித்தும் கைலாசா குறித்தும் பல தகவல்களை கொடுக்கிறது.
சென்னை: கைலாசா பிரதிநிதி என்று கூறிக் கொண்டு பெண் ஒருவர் ஐநா மாநாட்டில் கலந்து கொண்டார். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இப்படி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நித்தியானந்தா குறித்து சாட் ஜிபிடி என்ன சொன்னது தெரியுமா வாங்க பார்க்கலாம்.
கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் சாட் ஜிபிடி குறித்தே பேச்சாக உள்ளது. நாம் இதுவரை கண்டதில் மிகவும் சக்திவாய்ந்த ஒரு ஏஐ கருவியாக இந்த சாட் ஜிபிடி இருக்கிறது. நாம் கேட்கும் கேள்விக்கள் அனைத்திற்கும் துல்லியமான பதில்களை தருகிறது.
மேலும், பல பல்கலைக்கழக தேர்வுகளிலையும் கூட இந்த சாட் ஜிபிடி அசால்டாக க்ளியர் செய்து வருகிறது. இதன் காரணமாகவே சில மாதங்கங்களில் பல லட்சம் பேர் இந்த சாட் ஜிபிடியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

நித்தியானந்தா
இது ஒருபுறம் இருக்க இப்போது இணையத்தில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளவர் நித்தியானந்தா. கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த நித்தியானந்தா, பாலியல் வழக்குகளில் சிக்கினார். இந்த விவகாரம் தொடர்பாக சில காலம் அவர் சிறையிலும் இருந்த நிலையில், அதைத் தொடர்ந்து அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவ்வப்போது ஆன்மீக வீடியோக்கள் என்று சொல்லி தன்னை முன்னிறுத்தும் வீடியோக்களை மட்டுமே வெளியிட்டு நந்க அவர், திடீரென இந்துக்களாகத் தனியாக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்தார்.

கைலாசா
அத்துடன் கைலாசா நாட்டிற்குத் தனிக்கொடி, நாணயம் உள்ளிட்டவற்றையும் வெளியிட்டார். மேலும், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துடன் ஒப்பந்தமும் போட்டார். இதற்கிடையே அனைவருக்கும் ஷாக் தரும் வகையில் கைலாசா பிரதிநிதி என்று கூறிக் கொண்டு பெண் ஒருவர் ஐநா மாநாட்டில் கலந்து கொண்டார். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. நித்தியானந்தா குறித்து சர்ச்சைகள் மீண்டும் கிளம்பத் தொடங்கிய நிலையில், அமெரிக்க நகரம் கைலாசா உடன் போட்டிருந்த அதன் ஒப்பந்தத்தை ரத்து செய்ததது. இப்படி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நித்தியானந்தா குறித்து சாட் ஜிபிடி என்ன சொன்னது தெரியுமா வாங்கப் பார்க்கலாம்.

நித்தியானந்தா யார்
நித்தியானந்தா யார் என்று கேட்டபோது, அவர் சர்ச்சைக்குரிய இந்திய ஆன்மீக குரு என்றும் நித்தியானந்தா தியான பீடம் அமைப்பின் நிறுவனர் என்றும் சாட் ஜிபிடி தெரிவித்தது. மேலும், "அவர் 1977 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிறந்தார்.. அவர் ஒரு அறிவொளி பெற்ற நபர் என்றும், இந்து மதம், பௌத்தம் மற்றும் புதிய யுக ஆன்மிகம் ஆகியவற்றின் கலவையைப் போதிப்பதாக அவரே கூறிக் கொண்டிருக்கிறார்" என்றும் கூறியுள்ளது. இது மட்டுமின்றி 2010இல் நித்தியானந்தா மீது பதியப்பட்ட பலாத்கார வழக்கு மற்றும் அதைத் தொடர்ந்து அவர் எப்படி ஜாமீன் பெற்றார் என்பதையும் சாட் ஜிபிடி விளக்குகிறது.

கைலாசா குறித்த கேள்வி
அடுத்து கைலாசா குறித்த கேள்விக்கு, "கைலாசா என்ற புதிய நாட்டை நிறுவியதாக நித்தியானந்தா கூறுகிறார், அதை அவர் இந்து தேசம் என்று குறிப்பிடுகிறார். அவரைப் பொறுத்தவரை, காலப் போக்கில் அழிந்த சனாதன இந்து தர்மத்தின் பண்டைய இந்து நாகரிகத்தின் மறுமலர்ச்சியே கைலாசா ஆகும். கைலாசாவில் இந்துக் கொள்கைகள் அடிப்படையில், பாகுபாடுகள் இல்லாத வாழ்க்கையை வாழ முடியும் என்று நித்தியானந்தா கூறுகிறார்.. கைலாசவில் மக்கள் ஆன்மீக ஞானத்தைப் பெற முடியும்" என்று கூறியுள்ளது.

கைலாசா அரசியலமைப்பு எப்படி
அதேநேரம் கைலாசாவை வேறு எந்த நாடும் அல்லது சர்வதேச அமைப்பும் இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்கவில்லை என்றும் சாட் ஜிபிடி கூறுகிறது. மேலும், கைசாலாவுக்கு அரசியலமைப்பு உள்ளதா.. ஏதேனும் சட்டம் உள்ளதா என்ற கேள்விக்கும் அது பதிலளித்துள்ளது. அதாவது சாட் ஜிபிடி கூறுகையில், "கைலாசாவுக்கு எனத் தனியாக ஒரு அரசியலமைப்பு இருப்பதாக நித்தியானந்தா கூறுகிறார்.. அது காலப்போக்கில் அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கும் ஒரு ஆவணம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.. இருப்பினும், அந்த அரசியலமைப்பில் என்ன இருக்கிறது.. அதை உருவாக்கியவர் யார் என்பது குறித்த தகவல்கள் தெளிவாகத் தெரியவில்லை" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அங்கே எப்படி செல்லலாம்
இது மட்டுமின்றி, நித்தியானந்தாவைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை வைத்துப் பார்க்கும்போது, கைலாசாவின் அரசியலமைப்பின் சட்ட பூர்வ தன்மையும் அதைச் செயல்படுத்துவதும் சந்தேகத்திற்குரியதாக இருக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், கைலாசா நாட்டிற்குச் செல்ல முடியுமா என்றும் அதற்கான விசாவை எப்படிப் பெற வேண்டும் என்றும் சாட் ஜிபிடியிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கும் ஏன் நாம் அங்கே போகக் கூடாது என்பதை விளக்கும் வகையி ல்சாட் ஜிபிடி தெளிவான விளக்கத்தைக் கொடுத்துள்ளது.

சாட் ஜிபிடி தரும் அட்வைஸ்
அதாவது, "இல்லை, வேறு எந்த நாடும் சர்வதேச அமைப்பும் கைலாசாவை அங்கீகரிக்கவில்லை.. இறையாண்மை கொண்ட நாடாக இல்லாததால், நீங்கள் கைலாசாவிற்குச் செல்ல முடியாது. கைலாசாவுக்கு அதிகாரப்பூர்வ எல்லைகளோ.. விசா கொள்கைகளோ எதுவும் தனியாக இல்லை" என்று பதில் கொடுத்துள்ளது. மேலும் கைலாசாவுக்கு செல்வது நல்லதல்ல என்று நம்மை வார்ன் செய்யும் சாட் ஜிபிடி, "அது உங்களுக்குச் சட்ட ரீதியாக அல்லது தனிப்பட்ட முறையில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐநாவில் கைலாசா
மேலும் ஐநா அமைப்பில் கைலாசா இருக்கிறதா என்ற கேள்விக்கும் பட்டென அது பதிலளித்தது. அதாவது ஐ.நா.வில் பங்கேற்க கைலாசாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் கைலாசாவை ஒரு தேசமாக யாரும் அங்கீகரிக்கவில்லை என்பதால் ஐநாவில் உறுப்பினராக கைலாசாவால் இருக்க முடியாது என்றும் ஐ.நா. நடவடிக்கைகளில் கைலாசாவால் பங்கேற்க முடியாது என்றும் சாட் ஜிபிடி தெரிவித்துள்ளது. நித்தியானந்தா மீண்டும் இப்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், சாட் ஜிபிடி அவர் குறித்துச் சரியான தகவல்களையே கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications