சென்னை மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்! சட்டுனு காரை விட்டு இறங்கி மேயர் பிரியா சொன்ன சூப்பர் பதில்
சென்னை: மீஞ்சூர் அருகே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சென்னை மேயர் பிரியா, சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே நாப்பாளையம் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள மேயர் பிரியா வந்திருந்தார். அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேயர் பிரியா அங்கிருந்து புறப்படத் தயாரானார்.

அவரது கார் கிளம்பிவிட்ட நிலையில், அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளைக் கேட்க.. உடனடியாக காரில் இருந்து இறங்கிய மேயர் பிரியா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
மேயர் பிரியா: மீஞ்சூர் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சென்னை மேயர் பிரியா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மேயர் பிரியா காரில் இருந்து கிளம்பத் தயாரானார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் மழை குறித்தும் வெள்ளத்தைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேள்விகளை முன்வைத்தனர். அப்போது உடனடியாக காரில் இருந்து இறங்கிய சென்னை மேயர் பிரியா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் ஏற்கனவே நிறைய முறை இந்தப் பகுதியில் ஆய்வுக்கு வந்துள்ளேன். இந்தப் பகுதியில் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டன. மீதமுள்ள பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம். இந்தப் பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
ஹேப்பி நியூஸ்: இது மட்டுமின்றி சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் வெள்ள தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. வெள்ள தடுப்பு பணிகளைக் கண்காணிக்க ஒவ்வொரு பகுதியிலும் கூடுதலாக 10 பேரை நியமித்துள்ளோம். வெள்ள தடுப்பு பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். தண்ணீர் தேங்கினால் அதை உடனடியாக வெளியேற்றக் கூடுதலாக மோட்டர்களை தயார் நிலையில் வைக்கச் சொல்லியுள்ளோம்.
மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை ஒரு அளவுக்கு மட்டுமே நம்மால் கட்டுப்படுத்த முடியும். ஒரு மணி நேரத்தில் 10 செமீ மீழை பெய்தால் மழை சில இடங்களில் தேங்கலாம். அப்படித் தேங்கினாலும் மழை நின்று ஒரு மணி நேரத்தில் மழை நீரை அப்புறப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை: விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. வழக்கமாக அக். முதல் டிசம்பர் மாதம் வரை இந்த வடகிழக்கு பருவமழை இருக்கும். தலைநகர் சென்னையில் பொதுவாக இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை பெய்யும். கடந்த காலங்களில் பல முறை வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னையில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மழை சீசன் என்றாலே அச்சப்படும் அளவுக்கே நிலைமை இருந்தது.
இப்போது சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பல இடங்களில் இந்த மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துவிட்டதாகவும் சில இடங்களில் மட்டும் பணிகள் பாக்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் தான் மழை நீர் வடிகால் பணிகள் குறித்து மேயர் பிரியா ராஜன் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
-
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications