சென்னையில் கட்டிய தாலியின் ஈரம் கூட காயல.. புதுமாப்பிள்ளையை எந்த மணப்பெண்ணும் பார்க்ககூடாத கோலம்
சென்னை: திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை சி.டி.எச் ரோடு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும், ஜெயஸ்ரீ என்பவருக்கும் கடந்த 20 நாட்கள் முன்பு தான் திருமணம் நடந்தது. தாலியின் ஈரம் கூட காய்ந்திருக்குமா என்பது தெரியவில்லை..ஆனால் அதற்குள் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு அடிக்கடி ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மனைவியை ஒரு அறையில் வைத்து பூட்டிய கார்த்திகேயன், இன்னொரு அறையில் இருந்த கோலம் உறவினர்களையும், புதுப்பெண்ணையும் ஆடிப்போக வைத்துள்ளது.
இன்றைய சூழலில் பெண் கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது. 10 வருடம் அல்லது 12 வருடம் அளவிற்கு கூட சில சமூகத்தில் வித்தியாசம் இருக்கிறது. இன்னொருபக்கம் திருமணம் ஆன புதிதில் கருத்து வேறுபாடு என்பது சகஜமாக இருக்கிறது. அப்போது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் நேரமாக இருக்கும். அப்போது ஏற்படும் சண்டைகள், உறவுகளுக்குள் ஏற்படும் மனஸ்தாபங்களை சரியாக கையாண்டு சரி செய்ய வேண்டியதில் கணவன் மற்றும் மனைவி இருவருக்குமே பொறுப்புகள் உள்ளது.

கணவன் மனைவி பிரச்சனை
அதேபோல் அம்மாவின் பேச்சை கேட்டு மனைவியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர கணவன் முயற்சிப்பதோ அல்லது அம்மாவின் பேச்சை கேட்டு கணவனை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர மனைவி முயற்சிப்போதே திருமணம் ஆன புதிதில் இருந்தே நடக்கிறது. விதிவிலக்காகவே சிலர் இருக்கிறார்கள். அதேநேரம் தம்பதியினர் யார் பேச்சையும் கேட்காமல் ஒருவரை புரிந்து செயல்பட்டால் சிக்கல் வராது. மாறாக மாற்றி நடந்து கொண்டால் குடும்பத்தில் சிக்கல் வந்துவிடுகிறது. அப்படியான சூழலில் சிலர் தவறான முடிவெடுக்கிறார்கள். திருவள்ளூர் அருகே நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
திருவள்ளூர் கார்த்திகேயன்
திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை சி.டி.எச் ரோடு பகுதியை சேர்ந்த 27 வயதாகும் கார்த்திகேயன் என்பவர் அங்குள்ள தனியார் பள்ளியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் உறவுக்கார பெண்ணான ஜெயஸ்ரீ (25) என்பவருக்கும் கடந்த 4.9.2025 அன்று திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
வேறு ஒரு அறையில் இருந்த மனைவி
இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மனைவி ஜெயஸ்ரீயை ஒரு அறையில் அடைத்து பூட்டிவிட்டு கார்த்திகேயன் வேறொரு அறையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனைவி தனி அறையில் அடைத்து விட்டதால் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயஸ்ரீயை அடைத்து வைத்திருந்த அறையை திறந்துவிட்டனர்.
கணவன் இருந்த கோலம்
அதனைத் தொடர்ந்து மற்றொரு அறையில் உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டிருந்ததால் கதவை தட்டிப் பார்த்தும் திறக்காததால் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 20 நாட்களே ஆனநிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன் வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications