வெளிநாடு போகிற நேரம் பார்த்து! ஒரே நேரத்தில் பற்றவைத்துவிட்டு போன அண்ணாமலை, ஸ்டாலின்! கவனிச்சீங்களா?
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு அமெரிக்கா சென்றார். அதேபோல் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவு லண்டன் சென்றார். இருவரும் வெளிநாடு சென்றுள்ள நிலையில், போவதற்கு முன் இரண்டு பேருமே முக்கியமான சில தகவல்களை தெரிவித்துவிட்டு சென்றனர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக நேற்றில் இருந்து உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வர தொடங்கி உள்ளன. பல்வேறு அரசியல் நிபுணர்கள் இது தொடர்பாக இணையத்தில் தகவல்களை வெளியிட தொடங்கி உள்ளன.

இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு சென்று உள்ளார். லண்டனில் அவர் சில நாட்கள் தங்கி இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச அரசியல் என்ற படிப்பை படிக்க அண்ணாமலை செல்கிறார். அது சான்றிதழ் படிப்பு. சில மாதங்கள் அங்கு தங்கி படிக்க வேண்டும்.
இந்தியாவில் இருந்து 12 அரசியல் தலைவர்களை ஆக்ஸ்போர்ட் அழைப்பது வழக்கம். அப்படி அண்ணாமலை இந்த முறை தேர்வாகி உள்ளார். இதற்காக அங்கே செல்லவும் அண்ணாமலை 4-5 மாதங்கள் அங்கேயே இருக்க உள்ளார்.
தலைவர் பதவி: இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படலாம்.. அவர் வெளிநாட்டில் இருக்கும் வரை தற்காலிக தலைவர் கொண்டு வரப்படலாம் என்று செய்திகள் வருகின்றன. அண்ணாமலை நேற்று வெளிநாடு செல்லும் முன்பும் கூட அதிமுகவை கடுமையாக தாக்கிவிட்டே சென்றார்.
எடப்பாடி குறித்து நான் விமர்சனம் வைத்ததில் தவறு இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். நான் என்னுடைய ஸ்டைலில் பேசினேன். நான் என்னுடைய ஸ்டைலில் விமர்சனம் வைத்தேன். இதில் எந்த தவறும் இல்லை. பழனிசாமி மீது நான் வைத்த விமர்சனம் 100 சதவீதம் சரி. நான் அவரை தற்குறி என்று கூறியதில் தவறு இல்லை.
முன்னாள் அமைச்சர்கள் என்னை தற்குறி என்று கூறலாம். நான் மட்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டுமா? என்று போகிற போக்கில் அண்ணாமலை கேட்டுவிட்டு சென்றுள்ளார்.
ஸ்டாலின் பயணம்: இது போக நேற்று இரவு அமெரிக்காவுக்கு புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின். செல்வதற்கு முன்பு இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சரியாக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன் இந்த மாற்றங்களை செய்துள்ளார்.
தமிழக அரசின் விஜிலென்ஸ் கமிஷ்னர் மற்றும் வருவாய் நிர்வாக கமிஷ்னர் ஆகிய 2 பொறுப்புகள் வகித்த கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரை, தமிழக அரசின் பணியாளர்கள் தேர்வாணையத்தின் தலைவராக சமீபத்தில் நியமித்தார் ஸ்டாலின்.
பிரபாகர் மாற்றப்பட்ட நிலையில், அவர் பகித்த 2 பதவிகளுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்படாமல் இருந்தனர். இந்த நிலையில், விஜிலென்ஸ் கமிஷ்னர் பதவியை குடிநீர் வடிகால் வாரியத்தின் கூடுதல் தலைமைச் செயலாளரான மணிவாசன் ஐ.ஏ.எஸ்.சுக்கு கூடுதல் பொறுப்பாகவும், வருவாய் நிர்வாக கமிஷ்னர் பதவியை வருவாய்த்துறை செக்ரட்டரியாக இருக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்.சிடம் கூடுதல் பொறுப்பாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் முருகானந்தம் பிறப்பித்திருக்கிறார்.
அதோடு இல்லாமல்.. அமைச்சரவை மாற்றம் பற்றிய கேள்விக்கு.. மாற்றம் ஒன்றே மாறாதது.. வெயிட் அண்ட் சி என்று அமைச்சரவை மாற்றம் உறுதி என்பதை சூசகமாக சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications