"சரிடா கண்ணு.. கடைசியாக இந்த வண்டியில் போறே" அற்புதம்மாள் சொல்லவும், திரும்பி பார்த்த பேரறிவாளன்
பரோலை ரத்து செய்ய பேரறிவாளன் புழல் சிறைக்கு சென்றுள்ளார்
சென்னை: பரோலை ரத்து செய்வதற்காக, பலத்த பாதுகாப்பில் புழல் சிறைக்கு பேரறிவாளனை போலீசார் அழைத்து சென்றனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருந்தார்..
அவருடைய தாயார் அற்புதம்மாள் முதலமைச்சருக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தபடியே இருந்தார். எனவே, கடந்த மே மாதம் 28முதல் தற்போது வரை பேரறிவாளன் சுமார் 9 மாத காலமாக பரோல் வழங்கப்பட்டு வீட்டிலேயே தங்கியிருந்தார்..

அற்புதம்மாள்
ஆனால், பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று பேரறிவாளன் கேட்டுக் கொண்டிருந்ததையடுத்து, தமிழக முதல்வருக்கு பேரறிவாளனின் தாயார் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்... பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு கிளம்பியது என்றாலும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

வரவேற்பு
இந்த உத்தரவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வரவேற்பு தெரிவித்தனர். அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் இதை பற்றி பேசும்போது, "சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது... என் மகனின் உடல்நிலை சீராக உள்ளதற்கு முக்கிய காரணம் 9 மாத காலமாக பரோலை நீட்டித்ததுதான்.. இப்போது சுதந்திரமாக இருப்பதால் திருமணம் செய்து கொள்வதாக பேரறிவாளன் சொல்லி இருக்கிறார்..

திருமணம்
அதனால் முதல் ஏற்பாடாக பேரறிவாளனுக்கு திருமணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது... அதுமட்டுமல்லாமல் எனது மகன் விவசாயத்தில் முழு ஈடுபாடு கொண்டவர். இப்போதைக்கு அதற்கான பொருளாதார வசதி இல்லை. வருங்காலத்தில் கண்டிப்பாக விவசாயத்தில் பேரறிவாளன் ஈடுபடுவார். 30 வருடங்கள் போராட்டத்திற்கு பிறகு என் மகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது அளவில்லாத மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசு மற்றும் முதலமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

பாதுகாப்பு
இந்நிலையில், பரோலில் வெளியே வந்த பேரறிவாளன், பரோலை ரத்து செய்ய புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.. வேலூர் டிஎஸ்பி மணிமாறன் தலைமையில், வாணியம்பாடி டிராபிக் ஆர்ஐ செல்லபாண்டியன், ஆர்எஸ்ஐ முரளிதரன் ஆகியோருடன் 2 வாகனங்களில் சுமார் 14க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பில் புழல் சிறைக்கு பேரறிவாளனை அழைத்து சென்றனர்.

ஜீப்
ஜீப்பில் ஏறும்போது, அவருடைய தாயார் சரிடா கண்ணு இந்த வண்டியில் கடைசியாக போகிறாய்... பத்திரமாக வா கண்ணு என்று சொல்லி உற்சாகமாக வழியனுப்பி வைத்தார்... பேரறிவாளனும் அம்மாவை பார்த்து நெகிழ்வுடன் தலையசைத்தார்.. புழல் சிறைக்கு சென்று பரோலை ரத்து செய்த பிறகு, பேரறிவாளன் ஜாமீனில் வெளியே வருவார் என்று காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications