என்ன நடக்குது? காலையில் எழுந்து பார்த்தால்.. பெரிய ஷாக்? சென்னையில் மழைக்கு இடையே குழம்பிய மக்கள்
சென்னை: சென்னையில் அதிகாலையில் இருந்து பெய்து வரும் மழைக்கு இடையே மக்கள் பலரும் கடுமையாக குழப்பமும் அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்துக்கொண்டு இருந்த நிலையில், மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. முக்கியமாக வட தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது.

நேற்று தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படவில்லை. இது மக்களுக்கு ஆறுதலைக் கொடுத்தது. முக்கியமாக சென்னையில் நேற்று பெரிதாக வெயில் அடிக்கவில்லை.
பகல் நேரத்தில் நேற்று 33 டிகிரி செல்ஸியஸ் வரை மட்டுமே வெயில் இருந்தது. இந்த நிலையில்தான் இன்று சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகாலையில் இருந்து பெரும்பாலான இடங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது
அதிகாலையில் வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது விடாமல் பெய்யும் மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இது போக நேற்று நள்ளிரவிற்கு பின் அதிகாலை வரை திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இங்கு இரவில் தொடங்கிய மழை தற்போது வரை விடாமல் பெய்து கொண்டு இருக்கிறது.
இது போக செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டு இருக்கிறது. கடந்த 2 மணி நேரமாக இங்கு மழை பெய்து கொண்டு இருக்கிறது.
அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையமும் கூறியுள்ளது. அதேபோல் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் போன்ற வடமாவட்டங்களில் அடுத்தடுத்து மழை பெய்து வருகிறது.
அதிகாலை: சென்னையில் அதிகாலையில் இருந்து பெய்து வரும் மழைக்கு இடையே மக்கள் பலரும் கடுமையாக குழப்பமும் அடைந்துள்ளனர். நேற்று இரவு புழுக்கமான வானிலையுடன் தூங்க சென்றவர்களுக்கு அதிகாலையில் கும்மிருட்டான வானிலையை பார்த்ததும் இது சென்னையா? ஊட்டியா? என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
முக்கியமாக அதிகாலையில் 26 - 30 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை நிலவி உள்ளது. அதோடு மிக கடுமையாக பனி மூட்டமும் நிலவி இருக்கிறது. இந்த கடுமையான பனி மூட்டம் காரணமாக மக்கள் வெளியே வர முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது.
இது போக.. இன்னொரு பக்கம் பலருக்கும் பொழுது விடிந்ததே தெரியாத அளவிற்கு இருளான வானிலை நிலவி உள்ளது. இதனால் அதிகாலையில் பலரும் டைம் கூட தெரியாமல் குழம்பி உள்ளனர். கடந்த மாதம் 24ம் தேதியோடு வெப்ப அலை முடிவிற்கு வந்ததாக வானிலை மையம் கூறியுள்ளது. இனி வெப்பம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. அதோடு 25ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவில் தென் மேற்கு பருவமழை இன்னும் 2 நாட்களில் தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்பின் ஜூன் 4ம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்தது. ஆனால் நேற்று வரை சென்னையில் வெப்ப அலையும் முடியவில்லை. தென்மேற்கு பருவமழையும் தொடங்கவில்லை. வெயிலும் குறையவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னையில் தற்போது மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications