10 நிமிடம்.. தனி அறையில் தீவிரமாக பேசிய திருமாவளவன்.. ஸ்டாலின் சொன்ன விஷயம்.. எல்லாம் மாறிடுச்சே
சென்னை: முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்தார் திருமாவளவன், சந்திப்பு இனிமையாக அமைந்ததாக கோட்டை தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், விசிக தலைவர் திருமாவளவனும் சுமார் 10 நிமிடங்கள் தனியாக சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 30 நிமிடங்கள் சந்திப்பு நடந்த நிலையில், அதில் 10 நிமிடங்கள் இருவரும் தனி அறையில் சந்தித்துப் பேசி உள்ளனர்
அதாவது, திருமா நடத்தவிருக்கும் மது ஒழிப்பு மாநாடு மூலம் திமுக கட்சிக்கும், ஆட்சிக்கும் நெருக்கடி உருவாகியிருக்கிறது. ஆட்சிக்கு அட்சயப் பாத்திரமாக இருக்கும் டாஸ்மாக்கை இழுத்து மூடும் வகையில், மது விலக்கை அமல்படுத்துவதை வலியுறுத்தி மது ஒழிப்பு மாநாடு நடத்துவது திமுக விரும்பவில்லை. நிறைவேற்ற முடியாத ஒரு விசயத்தை திருமாவளவனுக்கு தெரிந்திருந்தும் அதை வலியுறுத்தி மாநாடு நடத்துவதை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் சீனியர் அமைச்சர்கள் யாருமே ரசிக்கவில்லை.

அதிமுக அஜெண்டா: அதிமுக அஜெண்டாவை வைத்துக்கொண்டுதான் திருமா இப்படி அரசியல் செய்யத் துவங்குகிறார் என்றே முதல்வருக்கு சொல்லப்பட்டுள்ளது. திமுக கூட்டணியை விட்டு வெளியேறமாட்டோம் ; கூட்டணிக்கும் மது ஒழிப்பு மாநாட்டுக்கும் தொடர்பில்லை'' என்றெல்லாம் திருமா விளக்கமளித்திருந்தாலும் திமுக தலைமை அதனை ஏற்க மறுப்பதாகவும், திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் சீக்ரெட் பாலிடெக்ஸை நடத்துகிறார் என்பதில் அழுத்தமாக இருப்பதாகவும் அறிவாலய வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.
இந்த நிலையில்தான், முதல்வரை சந்தித்துள்ளார் திருமாவளவன். இந்த சந்திப்பு ஆரோக்கியமாக இருந்தால் எந்த காண்ட்வெர்சியும் இருக்கப் போவதில்லை. கூட்டணி தொடரும் என்று அழுத்தமாக சொல்லிவிட்டு போவார். முதல்வருடனான சந்திப்பு ஆரோக்கியமற்றதாக இருந்தால் , திருமாவின் பேட்டி வேறு மாதிரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அப்படி கூட்டணியை விட்டு வெளியேறுகிற மாதிரி பொருளுடன் திருமா பேட்டியளித்தால் அந்த செய்தியை மடைமாற்ற அதிகாரிகள் மட்டத்தில் திமுக தலைமை ஒரு ஆலோசனையை நடத்தியிருக்கிறது.
அந்த வகையில், திருமாவின் பேட்டி காண்ட்ராவெர்சியாக இருக்கும் பட்சத்தில், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து வழிகளையும் தமிழக அரசு ஆராய்ந்து வந்துள்ளது.

இனிமையான சந்திப்பு: ஆனால் கடைசியில் இந்த சந்திப்பு சுமுகமாக முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. திருமாவும் சர்ச்சைக்குரிய வகையில் எதுவும் பேசவில்லை.
முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்தார் திருமாவளவன், சந்திப்பு இனிமையாக அமைந்ததாக கோட்டை தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், விசிக தலைவர் திருமாவளவனும் சுமார் 10 நிமிடங்கள் தனியாக சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 30 நிமிடங்கள் சந்திப்பு நடந்த நிலையில், அதில் 10 நிமிடங்கள் இருவரும் தனி அறையில் சந்தித்துப் பேசி உள்ளனர்.

கூட்டணியில் ஏற்பட்ட சில விரிசல்கள், கசப்புகளை பேசி தீர்த்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏற்பட்ட மோதல்கள் பற்றி இருவரும் இயல்பாக பேசி தீர்த்துள்ளனர். முக்கியமாக கூட்டணி மோதல் எல்லாம் இப்போது இல்லை.. வெறும் தோழமை சுட்டுதான் இது என்று ஸ்டாலின் - திருமா இடையே பேசப்பட்டு உள்ளதாம். இதன் காரணமாகவே வெளியே வந்த திருமா ஸ்டாலினுடன் சிரித்தபடி போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.
அதேபோல் வெளியேவும் சிரித்தபடியே திருமா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டணியில் பிரச்சனை இல்லை என்பதாலையே இரண்டு தரப்பும் சிரித்தபடி வந்ததாக கூறப்படுகிறது.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம்












Click it and Unblock the Notifications