பாதாளம் வரை போன பணம்! போலீசில் உளறிய ஆருத்ரா ஹாரிஸ்! அண்ணாமலை சப்போர்ட் செய்தது ஏன்? தகித்த புள்ளி
சென்னை: ஆருத்ரா ஹாரிஸ்தான் சமீபத்தில் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கிய தகவல்களை குறிப்பிட்டு இருக்கிறாராம்.
ஆருத்ரா நிறுவன மோசடி தேசிய அளவில் கவனம் பெற தொடங்கி உள்ளது. வேலூரை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இவர்களுக்கு கிளை இருந்தது.

ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் தருவோம். 10 மாதம் இந்த பணத்தை தருவோம். உங்களுக்கு 3.6 லட்சம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்துள்ளனர்.
இதை நம்பி முதலீடு செய்த மக்களை அந்த நிறுவனம் கடைசியில் ஏமாற்றி உள்ளது. இந்த நிலையில்தான் ஆருத்ரா நிறுவன இயக்குனர் ஹாரிஸுக்கு கட்சியில் பதவி கொடுத்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆருத்ரா ஹாரிஸ்தான் சமீபத்தில் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்.. நான் பாஜகவில் இணைந்தால் எனக்கு சிக்கல் இருக்காது என்று கூறப்பட்டது. விசாரணையில் இருந்து தப்பிக்க முடியும் என்று கூறினார்கள். அதை நம்பி சேர்ந்தேன்.
முன்னதாக முதலீட்டாளர்களிடம் ரூபாய் 84 கோடி வரை மோசடி செய்தேன். பாஜகவில் இணைந்த போது பதவி கிடைக்க வேண்டும் என்று லஞ்சம் கொடுத்தேன். கட்சி நிர்வாகிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துவிட்டு பாஜகவில் சேர்ந்தேன், என்று ஹாரிஸ் கூறி உள்ளாராம்.
இவர் தனது வாக்குமூலத்தில் முக்கியமான சில விஷயங்களை குறிப்பிட்டு உள்ளாராம். ராணிப்பேட்டை மாவட்ட பாஜக பொறுப்பாளர் சுதாகர் உள்ளிட்ட சிலரின் பெயரையும் கூறி உள்ளாராம்.
முன்னதாக, இந்த புகார்கள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவர் தனது பேட்டியில், ஆருத்ரா என்பது ஒரு கோல்டு பைனான்ஸ். அவர்கள் 1 லட்சம் ரூபாய்க்கு 10 ஆயிரம் ரூபாய் வட்டி கொடுப்பதாக கூறுகிறார்கள். வேலூரில் இவர்கள் இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இதையடுத்து அப்பகுதி விவசாயிகள், மக்கள் பலர் தங்களிடம் இருக்கும் சேமிப்புகளை 1 லட்சம், 2 லட்சம் என்று போடுகிறார்கள்.
இவர்கள் 3000 - 4000 கோடி ரூபாய் வசூல் செய்கிறார்கள். இதை நிதித்துறை அமைச்சகம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. பொருளாதார பிரிவு பார்த்துக்கொண்டு இருக்கிறது. வேலூர் ஆட்சி, வேலூர் எஸ்பி பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அவர்கள் இதை பார்த்துக்கொண்டே இருந்தும் கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கு வெளிப்படையாக விளம்பரம் கொடுக்கிறார்கள். பரபரப்பாக வெளிப்படையாக பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் அதை தடுக்கவில்லை. இதை எல்லாம் கண்காணிக்கவே மத்திய போலீஸ் பிரிவு இருக்கிறது.
அதற்கான விங் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்துள்ளது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் எடுக்காமல் அமைதி காத்து வந்து உள்ளனர். குதிரை வெளியே சென்ற பின் இப்போது குதிரை செட்டை பூட்டி உள்ளனர்.
அதிகாரிகள் பணம் வாங்காமல் இப்படி எல்லாம் மோசடி நடக்க விட மாட்டார்கள். எல்லோரும் தப்பித்து ஓடிய பின்புதான் இதில் நடவடிக்கை எடுத்தனர். இன்றுவரை ராஜேஷ், ஹாரிஸை கைது செய்யவில்லை.
1000 கணக்கான கோடி.. ஒரு கோடி.. ரெண்டு கோடி இல்லை. இதில் தற்போது அண்ணாமலை பெயர் அடிபடுகிறது. பாஜகவின் விளையாட்டு பிரிவு மாநில தலைவராக ஹாரிஸை போடுகிறார்.
அவர் தேடப்படும் குற்றவாளி. அவரை அந்த பிரிவின் தலைவராக போடுகிறார். அதோடு பிரதமரை அழைப்பதற்கு விமான நிலையத்திற்கு இவரை கூட்டி செல்கிறார்கள்.
ஹாரிஸுக்கு இப்படி அண்ணாமலை சப்போர்ட் செய்தது ஏன்? அவர் தேடப்படும் குற்றவாளி. பல ஆயிரம் கோடி மோசடி செய்துள்ளார். இந்தியாவின் பெரிய குற்றவாளியாக அவர் மாற வாய்ப்பு உள்ளது. ஆனால் அவரை பாஜகவில் சேர்த்து உள்ளனர். அவருக்கு பெரிய பொறுப்பு கொடுத்துள்ளனர். அதோடு அவரை பிரதமரை வரவேற்கவும் கூறி உள்ளனர், இந்த விவகாரத்தில் பணம் பாதாளம் வரை பாய்ந்து உள்ளது. அதனால்தான் இதில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர், என்று மூத்த பத்திரிக்கையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
-
“கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர்”.. கரூர் ரோபோக்கள் என விமர்சித்த அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் அண்ணாமலையா.. செல்லூர் ராஜு பேச்சால் கொந்தளித்த மாணிக்கம் தாகூர்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications