நிர்மலா சீதாராமன் இதுல எப்படி? விரலை நீட்டிய அமித் ஷா.. தமிழிசையை ஏன் "டோஸ்" விட்டார் தெரியுமா? ஓஹோ
சென்னை: அமித்ஷா ஏன் தமிழிசையை கடிந்து கொண்டார் தெரியுமா? அதுகுறித்த பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது.
தெலுங்கு தேச கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில், தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை, அமித்ஷா கடிந்து கொண்ட எச்சரிக்கை சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொது மேடையில் அமித்ஷாவின் அந்த கண்டிப்பு வெவ்வேறு கோணங்களில் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. எதற்காக தமிழிசையை அவர் கண்டித்தார் என்பதற்கு நிறைய சம்பவங்களை மீடியாக்கள் சுட்டிக்காட்டியிருந்தன.
அண்ணாமலை: "அண்ணாமலையை பகைத்துக் கொண்டதற்கு, தமிழிசையைக் கண்டித்துவிட்டார் அமித் ஷா" என்று சோஷியல் மீடியாவில் அண்ணாமலையின் ஆதரவாளர்களே கொளுத்தி போட்டதாக சொன்னார்கள்.. அதற்கேற்றவாறு, அன்றையதினம் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய தமிழிசை, செய்தியாளர்களை சந்திக்காமலேயே வீடு திரும்பவும், மீண்டும் சந்தேகம் வலுவானது.
ஒருவேளை அமித்ஷா கண்டித்திருப்பாரோ என்று கட்சி வட்டாரங்களிலேயே பரபரப்பு அனல் மூண்டது. பிறகு கிட்டத்தட்ட 24 மணிநேரம் கழித்து, அமித் ஷாவுடன் நடந்த உரையாடல் குறித்து விளக்கம் ஒன்றை தந்திருந்தார் தமிழிசை..
"சமூக ஊடகங்களில் பரவிவரும் தேவையற்ற யூகங்களை இந்த விளக்கம் தெளிவுபடுத்தும்" என்று தமிழிசை குறிப்பிட்டிருந்தாலும், அது எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை..
பரபரப்பு: தமிழிசையை அமித்ஷா கண்டித்தது ஏன் என்றே சோஷியல் மீடியாவில் யூகங்கள் வலம்வந்தன. பின்னர், 2 நாட்களுக்கு முன்பு திடீரென தமிழிசையை நேரில் சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. இதையடுத்து, இந்த பரபரப்பு ஓரளவு அடங்கிவிட்டது என்றே சொல்லலாம். ஆனாலும், கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு அமித்ஷா, தமிழிசையை ஏன் கடிந்து கொண்டார் என்ற சலசலப்பு இன்னும் ஓயவில்லை.
இப்படிப்பட்ட சூழலில், உண்மையான காரணம் குறித்த முக்கியத் தகவல் ஒன்று நமக்கு பிரத்யேகமாக கிடைத்திருக்கிறது.. "தென்சென்னையில் போட்டியிட விரும்பினாராம் தமிழக பாஜக மாநில செயலாளர்களில் ஒருவர். ஆனால், வாய்ப்பை தமிழிசை தட்டிக்கொண்டுப் போய்விட்டதால் விரக்தியாகிவிட்டாராம் அந்த மாநில செயலாளர்.
தமிழிசை: ஏற்கனவே அவருக்கும் தமிழிசைக்கும் ஆகாது. இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்து மீண்டும் மத்தியில் ஆட்சியைத் தக்கவைத்தார் மோடி. அவரது அமைச்சரவையில் தமிழிசை சேர்க்கப்படுவதாக ஒரு தகவல் தமிழக பாஜகவில் பரவியது. அதற்கான முயற்சியை தமிழிசை ரகசியமாக எடுத்து வருவதாகவும் பரவியது.
இதையறிந்த அந்த மாநில செயலாளர், நிர்மலா சீதாராமனை தொடர்புகொண்டு, "உங்களை மோசமாக விமர்சிக்கிறார் தமிழிசை. உழைக்காமல் நிர்மலா சீதாராமன் அமைச்சராகிவிட்டார், உழைத்தாலும், பிற்படுத்தப்பட்ட ஜாதி என்பதால் தமிழிசை கவர்னர் பதவியையும் இழந்து, எம்.பி.யும் ஆக முடியாமல் தவிக்கிறார் என்ற பாணியில் உலவும் மீம்கள் பின்னணியில் தமிழிசைதான் உள்ளார். அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவிருந்ததாகவும் அதனை நீங்கள் தான் தடுக்கிறீர்கள் என்றும் எல்லோரிடமும் தமிழிசை சொல்லி வருகிறார். உங்களை கொச்சையாக விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்திருகிறார்" என்று தெரிவித்திருக்கிறார்.
அமித்ஷா: இதைக்கேட்டு டென்ஷன் ஆகிவிட்ட நிர்மலா சீதாராமன், உடனே இந்த விஷயத்தை அமித்ஷாவிடம் தெரிவித்துள்ளார்.. உடனே அமித்ஷாவும் தமிழிசை மீது கோபப்பட்டுள்ளார்.
இந்த சூழலில்தான் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவுக்கு வந்த அமித் ஷா, தனக்கு வணக்கம் வைக்க வந்த தமிழிசையிடம் கோபத்தை கொட்டி விட்டார். தமிழிசை மேடைக்கு வராமல் இருந்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது என்கிறார்கள்.
பதட்டம்: ஆனால் விஷயம் என்னவென்றால், உண்மையிலேயே நிர்மலா சீதாராமன் பற்றி, தமிழிசை எதுவுமே தவறாக சொல்லவில்லையாம். இந்த உண்மையெல்லாம் உளவுத்துறை ரகசியமாக விசாரித்தபோதுதான் தெரியவந்துள்ளது.. இதையடுத்து, தனக்கு தவறான தகவல் தந்த, அந்த மாநில செயலாளருக்கு செம டோஸ் கொடுத்தாராம் நிர்மலா சீதாராமன்.
அதுமட்டுமல்ல, தமிழிசையை நேரில் சந்திக்க அண்ணாமலையை அனுப்பி வைத்து சமாதானம் மேற்கொண்டதாம் மேலிட பாஜக.. அதற்கு பிறகே விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.. இதனிடையே, தனது பதவிக்கு ஆபத்து வருமோ என்கிற பதட்டத்தில் இருந்து வருகிறாராம் அந்த தென்சென்னை மாநில செயலாளர்..!
-
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications