சென்னை பிரபல ஓட்டலில்.. நள்ளிரவில் காதலனுடன் செல்போனில் வாக்குவாதம்.. ஆடிப்போக வைத்த பெண் முடிவு
சென்னை: சேலம் மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான மாணவி ஒருவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். அந்த மாணவி, நேற்று முன்தினம் இரவு விடுதியில் இருந்து வெளியேறி திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். இரவு 2.30 மணியளவில் ஓட்டலின் 4-வது மாடியில் காதலனுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் மாணவி எடுத்த முடிவு ஆடிப்போக வைத்துள்ளது.
காதலன் காதலிக்கு இடையே ஏற்படும் சண்டை, கணவன் மனைவி இடையே ஏற்படும் சண்டை ஆகிய இந்த இரண்டிற்குமே விட்டுக்கொடுத்து செல்ல முடியாத நிலை தான் காரணமாக இருக்கிறது. ஒருவருக்காக இன்னொருவர் எந்த காரணத்திற்காகவும் விட்டுக்கொடுத்து செல்ல மறுக்கும் போது சிக்கல் ஏற்படுகிறது. ஈகோ அதற்கு இடம் கொடுக்க மறுக்கிறது. இறுதியில் உறவில் விரிசல் ஏற்படுகிறது. அதேநேரம் சில நேரங்களில் அவசரப்பட்டு எடுக்கும் முடிவு, இருவருக்குமே வாழ்நாள் முழுக்க தூக்கத்தை தொலைய வைக்கிறது. சென்னையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது மாணவி எம்.பி.ஏ. படித்து வருகிறார். அதே கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதியில் அவர் தங்கியிருந்தார். அந்த மாணவி, கடந்த 7ம் தேதி அன்று இரவு விடுதியில் இருந்து வெளியேறி திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருக்கிறார். இரவு 2.30 மணியளவில் ஓட்டலின் 4-வது மாடிக்கு சென்றுள்ளார். அங்கிருந்து திடீரென கீழே குதித்து விட்டார்.
இதில் கல்லூரி மாணவிக்கு அவரது தலை மற்றும் இடுப்பு எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இருப்பினும், மாடியில் இருந்து குதித்தபோது கேபிள் வயர்களில் சிக்கிக்கொண்டதால் உயிர் சேதம் ஏற்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருவல்லிக்கேணி போலீசார், படுகாயம் அடைந்த மாணவியை மீட்டு அருகில் இருந்த ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
போலீசாரிடம் மாணவி கூறுகையில், "என்னுடைய கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர் ஒருவரை காதலித்து வந்தேன். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அவர், தற்போது பெங்களூருவில் வேலை செய்கிறார். இரவு 2.30 மணியளவில் செல்போனில் இருவரும் பேசி கொண்டிருந்தோம். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. நான் 4-வது மாடியில் இருந்து குதித்துவிட்டேன்" என்றார்.
இதற்கிடையே மருத்துவமனையில் அந்த மாணவி சுயநினைவை இழந்தார். இதனால் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக அவர், ஆன்லைனில் கத்தி ஒன்றை ஆர்டர் செய்து, அவர் தங்கி இருந்த ஓட்டலுக்கு வரவழைத்துள்ளார். கத்தியை வாங்கியது ஏன் என்றும் விசாரித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications