சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரொம்ப மாறிட்டாங்க.. டெல்லியில் நடந்தது என்ன? எடப்பாடிக்கு போன் போட்ட விஜயபாஸ்கர்.. ஆஹா போச்சா?

Google Oneindia Tamil News

சென்னை: சமீபத்தில் டெல்லிக்கு சென்று இருந்த மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர், டெல்லியில் நடந்தது என்ன என்பது தொடர்பாக எடப்பாடியிடம் விளக்கம் அளித்து இருக்கிறாராம்.

அதிமுகவின் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் சமீபத்தில் டெல்லி சென்று பாஜகவின் தேசிய தலைவர் நட்டாவையும், மத்திய அமைச்சர் முருகனையும் சந்தித்து பேசினார்.

இது குறித்து எடப்படியிடம் விவரித்திருக்கிறார் விஜயபாஸ்கர். விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா வழக்கு சூடி பிடித்திருக்கிறது.

குட்கா ஊழல்: அதிமுக மாஜி அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா உட்பட 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் குட்கா ஊழல்: அதிமுக மாஜி அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா உட்பட 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

குட்கா வழக்கு

குட்கா வழக்கு

குட்கா வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., கூடுதல் குற்றப்பத்திரிகையை அண்மையில் தாக்கல் செய்திருக்கிறது. இதில் மாஜி அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா உள்பட குற்றத்தில் தொடர்புடைய அதிகாரிகள் என அனைத்து பெயர்களையும் இணைத்துள்ளது சி.பி.ஐ. வழக்கு விசாரணையில், மாஜிகளுக்கும் அதிகாரிகளுக்கும் ஏகப்பட்ட சிக்கல்களை இது ஏற்படுத்தும் என்றே சி.பி.ஐ. தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இந்த வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், அதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் கேட்பதற்காகத்தான் நட்டாவையும் முருகனையும் சந்தித்துள்ளார் விஜயபாஸ்கர்.

பதில் என்ன?

பதில் என்ன?

ஆனால், ''விசாரணை அமைப்புகளின் வழக்குகளில்
மத்திய அரசு தலையிடாது ; தலையிடவும் விரும்பாது. இது குறித்து பேசுவதாக இருந்தால் எங்களை சந்திக்க வராதீர்கள்'' என்று நட்டாவும் முருகனும் அழுத்தமாகவே தெரிவித்து விட்டனராம். இதில் விஜயபாஸ்கர் மிகவும் நொந்து போயிருக்கிறார். நட்டா அப்படி சொன்னதில் அப்-செட்டான விஜயபாஸ்கர், அரசியல் மற்றும் தேர்தல் தொடர்பாக சிலபல விசயங்களை சொல்லியிருக்கிறார். ஆனால், அதற்கு தோதான பதிலும் உறுதியும் நட்டாவிடமிருந்து கிடைக்கவில்லை. இதனால் மேலும்
அப்-செட்டானாராம் விஜயபாஸ்கர்.

எடப்பாடி என்ன சொன்னார்?

எடப்பாடி என்ன சொன்னார்?

குட்கா வழக்கில் அப்போதே சிபிஐ தீவிரமாக இவர் மீது கவனம் செலுத்தி வந்தது. அப்போது இவர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு, ரெய்டின் போது வீட்டில் இருந்து சீட்டு ஒன்று அவரின் உதவியாளர் மூலம் வெளியே தூக்கி வீசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அந்த ரெய்டு காட்சிகள் தமிழ்நாடு முழுக்க மட்டுமின்றி தேசிய அளவில் கவனம் பெற்றன. முன்னதாக குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணாவிற்கு எதிராக சிபிஐ கடிதம் எழுதியது.

வழக்கு

வழக்கு

12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசிடம் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசும் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில்தான் நேற்று குட்கா வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் விஜயபாஸ்கர் பெயரும் இடம்பெற்று உள்ளது. ஏற்கனவே 2019க்கு முன் இதில் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நேற்று முதல்நாள்தான் டெல்லி சென்ற விஜயபாஸ்கர் பாஜக தலைவர்களை சந்தித்தார்.

எடப்பாடி விளக்கம்

எடப்பாடி விளக்கம்

இந்த நிலையில், நேற்று முன்தினம், விஜய்பாஸ்கரை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது, டெல்லி சந்திப்பு குறித்து எடப்பாடி கேட்க, ''நாம் நினைப்பது மாதிரி பாஜக தலைவர்கள் இப்போது இல்லை. ஆட்சியில் நாம் இருந்தபோது நம்முடைய சொல்லுக்கும் வைக்கப்படும் கோரிக்கைக்கும் மரியாதை இருந்தது. இப்போது சுத்தமாக இல்லை. நாம் எதைச் சொன்னாலும், மிக நேர்மையானவர்கள் போல பேசுகிறார்கள்.
தேர்தல் நெருங்க நெருங்க பல நெருக்கடிகளை நாம் சந்திக்கப் போகிறோம். அதிமுகவால் தேர்தல் ஆதாயம் பாஜகவுக்கு என்ன கிடைக்கும் ? எப்படி கிடைக்கும்? என்பதுதான் டெல்லியில் ஆராயப்படுகிறது.

இதுதான் எனக்கு தெரிந்தது?

இதுதான் எனக்கு தெரிந்தது?

அதனால், நம்முடைய அரசியல்
நடவடிக்கைகளை வைத்துதான் சில முடிவுகளை எடுப்பதாக இருக்கிறார்கள். தனிப்பட்ட கோரிக்கைகளை கூட , அரசியலை வைத்தே தீர்மானிக்கிறார்கள். இது தான் தற்போதைய டெல்லி பயணத்தில் எனக்கு தெரிந்த விசயம்''என்று எடப்பாடியிடம் விவரித்திருக்கிறார் விஜயபாஸ்கர். அதைக் கேட்டு, ''இது தனக்கு கொடுக்கப்பட்ட மெசேஜ் போல இருக்கிறதே''என கமெண்ட் பண்ணியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

English summary
What did Vijayabaskar talk to Edappadi Palanisamy after his Delhi trip?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X