"ஹெல்ப்" போர்டு காட்டிய மாணவி! சட்டென திரும்பி பார்த்த ஸ்டாலின்.. என்ன இது? அன்பிலுக்கு பறந்த ஆர்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜாக்டோ ஜியோ மாநாட்டில் மாணவி ஒருவர் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்த சம்பவம் கவனம் பெற்றது.

சென்னை தீவுத்திடலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நேற்று நடைபெற்றது. மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். நீங்கள் அரசு ஊழியர்கள். நானும் அரசு ஊழியர்தான்.

உங்களால்தான் நான் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறேன். அரசு ஊழியர்கள் எப்போதும் திமுகவிற்கு ஆதரவாக இருந்துள்ளனர். அவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நாங்கள் எப்போதும் நிறைவேற்றுவோம், என்று முதல்வர் ஸ்டாலின் இந்த மீட்டிங்கில் குறிப்பிட்டார்.

மாணவி ஹெல்ப்

மாணவி ஹெல்ப்

இந்த மாநாடு நடந்த போது முதல்வர் ஸ்டாலினின் கண்களில் படும்படி மாணவி ஒருவர் ஹெல்ப் என்று போர்ட் வைத்து நின்று கொண்டு இருந்தார். இதை பார்த்த முதல்வர் ஸ்டாலின் சட்டென அதில் கவனத்தை திருப்பினார். அருகில் இருந்த அதிகாரிகளிடம் அது என்ன என்று பாருங்கள் என்று கேட்டார். பின்னர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அந்த இடத்திற்கு வந்தார். அவரிடமும் முதல்வர் ஸ்டாலின் இதை பற்றி கேட்டார்.

விசாரணை

விசாரணை

அந்த மாணவி ஹெல்ப் என்று போர்ட் வைத்து இருக்கிறார். என்ன நடந்தது என்று கேளுங்கள். அவருக்கு உதவி தேவை என்றால் உடனடியாக் செய்யுங்கள் என்று கூறினார். இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் அந்த மாணவியை தேடினார். பின்னர் அங்கிருந்த ஆட்களை வைத்து மாணவியை கண்டுபிடித்தார். மாணவி மனு ஒன்றுடன் வந்து அமைச்சர் அன்பில் மகேஷை சந்தித்தார்.

அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்

இந்த நிலையில்தான் அமைச்சர் அன்பில் மகேஷிடம் அந்த மாணவி அளித்த மனுவில், தனது தாய்க்கு இடம் மாறுதல் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அரசு பள்ளி ஆசிரியராக இருக்கும் அவர் திருக்கோவிலூரில் பணியாற்றி வருகிறார். இவருக்குத்தான் இடமாறுதல் வேண்டும் என்று அந்த மாணவி கோரிக்கை வைத்தார். அந்த மாணவி இது தொடர்பாக அளித்த பேட்டியில், என் பெயர் ஸ்வேதா. என் தாயார் பெயர் அருள்தேன்மொழி. அவர் திருக்கோவிலூரில் பணிவர் எழுத்தாளராக இருக்கிறார்.

 கோரிக்கை என்ன

கோரிக்கை என்ன

நாங்கள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருக்கிறோம். இங்கிருந்து அவர் தினமும் விழுப்புரம் சென்று கொண்டு இருக்கிறார். கிட்டத்தட்ட தினமும் 300 கிமீ பயணம் சென்று வருகிறார். அவருக்கு சுகர் பிரச்சனை, வலிப்பு பிரச்சனை உள்ளது. இதோடு அவர் பல கிமீ பயணம் செய்கிறார். அவரை இடமாற்ற கோரிக்கை வைத்தும் யாரும் ஏற்கவில்லை. இதனால் இன்று அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்து உள்ளேன். நல்லது நடக்கும் என்று நம்புகிறேன் என்று மாணவி குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+