இந்திராவுக்கு நீதிமன்றம் வைத்த செக்! 352வது சட்டப் பிரிவு சொல்வது என்ன? எமர்ஜென்சி பற்றி தெரியுமா?
சென்னை: இந்திரா காந்தி எமெர்ஜென்சியை கொண்டுவந்ததற்கான காரணம் என்ன? அதன் பின்னால் இருந்த அரசியல் அழுத்தம் என்ன? அந்தக் காலத்தில் இந்தக் கறுப்புச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட தலைவர்கள் யார்? அதன் பின்னணி பற்றிய விவாதத்தைப் பிரதமர் மோடி முதன்முதலாகத் தொடங்கி வைத்தது ஏன்?
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எமர்ஜென்சியை கொண்டு வந்து 49 ஆண்டுகள் முடிந்து 50ஆவது ஆண்டு தொடங்கியுள்ளது. அதை நினைவுகூரும் விதமாகப் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் அவசரநிலையை அமல்படுத்தியவர்கள் ஜனநாயகத்தின் மீது அன்பை வெளிப்படுத்த எந்த உரிமையையும் இல்லை என்றும் 50 ஆண்டுகள் முன் எமெர்ஜென்சி காலகட்டத்தில் செயல்பட்டதைப் போலவே இன்னும் எதிர்க்கட்சிகள் அதே நினைப்புடன் அரசியல் செய்து வருகின்றன என்றும் மறைமுகமாகக் காங்கிரஸ் கட்சியைச் சாடி இருந்தார்.

அவரது பேச்சு காங்கிரஸ் கட்சிக்குச் சரியான பதிலடியாக அமைந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டுவிடும் என்றும் நாட்டில் சர்வாதிகார ஆட்சி வந்து விடும் என்று தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மோடி அரசுக்கு எதிராகப் பேசி வந்தார். அதை மனதில் வைத்துத்தான் இன்னும் எமர்ஜென்சி மனநிலையிலேயே எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன. நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வலுவான எதிர்க்கட்சி அவசியம் என்றும் மோடி பேசி இருந்தார்.
பிரதமரின் பேச்சால் நாடு முழுவதும் இப்போது எமர்ஜென்சி பற்றிய விவாதம் பலமாகக் கேட்கத் தொடங்கியுள்ளது. உண்மையில் எதனால் அவசரக்கால கறுப்புச் சட்டத்தை இந்திரா காந்தி கொண்டுவந்தார். அதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது. அப்போது என்ன நடந்தது? இப்படிப் பல விசயங்களைப் பற்றி தெரிந்து கொள்வது இன்றைய தேவை.
எமெர்ஜென்சி வருவதற்கான காரணங்கள் என்ன?
#இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 352வது பிரிவு என்ன சொல்கிறது என்றால், போர்க் காலங்களிலோ அல்லது அந்நிய நாட்டுப் படை இந்தியாவை ஆக்கிரமிக்க முயற்சி செய்யும்போதோ, அப்படி இல்லை என்றால் உள்நாட்டுக்குள் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சி செய்தாலோ, நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் தீங்கு ஏற்பட்டால், அவசர நிலையைப் பிரகடனம் செய்யும் அதிகாரத்தைக் குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது.
#இந்திரா காந்தி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் கூட தடையை வழங்கியது. நாடாளுமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகி இருக்குமாறும் உச்சநீதிமன்றம் இந்திராவைக் கேட்டுக் கொண்டிருந்தது. நீதிமன்றம் இந்த ஆணையை வழங்கிய அடுத்த நிமிடமே அகில இந்திய வானொலியில் ஜூன் 25 ஆம் தேதி 1975 ஆம் ஆண்டு நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டார்.
அதில், "குடியரசுத் தலைவர் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். இதைப் பற்றி மக்கள் யாரும் பீதி அடையவேண்டாம்"என்று இந்திரா காந்தி நள்ளிரவு நேரத்தில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் குறிப்பிட்டார். அவர் பீதி அடைய வேண்டாம் என்று சொன்னாலும், நாடு முழுவதும் பீதி நிலையை காணப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்களின் தொடர் கைதுகள் மக்களை நிலைகுலையச் செய்தன. அதுவரை என்ன நடக்கப் போகிறது என்பது அறியாமல் தவித்த எதிர்க்கட்சித் தலைவர்கள் கதிகலங்கிப் போய் நின்றனர். வாய்ப்பூட்டுச் சட்டம் அவர்களை மவுனமாக்கியது.
#"இந்தியாவில் சாமானிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் நன்மை தரும் சில முற்போக்கான நடவடிக்கைகளை நான் அறிமுகப்படுத்தினோம். அதைத் தொடங்கியதிலிருந்து அதற்கு எதிராகப் பரவலான நடந்து வரும் சதித்திட்டத்தை நாட்டு மக்களாகிய நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்" என்றும் தனது வானொலி உரையில் இந்திரா கூறினார். இவரது தலைமையிலான காங்கிரஸ் 1971 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், அந்தக் காலத்தில் மொத்தம் 521 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் 352 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றியைப் பெற்றது. அவர், 1971 டிசம்பர் மாதம் பங்களாதேஷ் தனிநாடாகப் பாகிஸ்தானிலிருந்து பிரிய ஆதரவு அளித்தார். இந்திய நாட்டு ராணுவத்தை அனுப்பி உதவிகளைச் செய்தார். அதன் மூலம் அவரது செல்வாக்கு உலகநாடுகள் மத்தியில் உயர்ந்தது. நம்ம ஊர் பாஷையில் சொன்னால் கொடிகட்டிப் பறந்தார்.

#உலகநாடுகள் மத்தியில் இந்திரா காந்தியின் செல்வாக்கு உயர்ந்தாலும், உள்நாட்டில் அவருக்கு எதிர்ப்புகள் வலுவாகக் கிளம்பின. குஜராத்தில் மாணவர்கள் நடத்திய நவநிர்மாண் போராட்டம், பீகாரில் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் (ஜேபி) இயக்கம், 1974இல் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில் நடந்த ரயில்வே வேலைநிறுத்த போராட்டம், கூடவே ஜூன் 12, 1975 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்திரா காந்தி ரேபரேலியில் இருந்து மக்களவைக்கு வெற்றிபெற்றுச் செல்லாது என்று அறிவித்தது என நாடே ஒரு உறுதியற்ற நிலையில் சிக்கித்தவித்தது. ஆகவே, அதை உணர்ந்த இந்திரா காந்தி மறைமுகமாக தனது எதிரான சக்திகளை ஒடுக்க எமர்ஜென்சியை ஜனாதிபதி மூலமாக அறிவித்தார்.
#1975 ஜூன் 26 அன்று நடந்த குஜராத் தேர்தலில் ஐந்து கட்சிகளோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. அதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த எதிர்க்கட்சிகளின் பேரணி நடத்தி தங்களின் எதிர்ப்பைக் காட்டின. இதனால் இந்திராவுக்கு மிகுந்த நெருக்கடி உண்டானது. இந்தச் சம்பவங்கள் அவசரநிலையை அமல்படுத்துவதற்கான தூண்டுதலாக அமைந்தது.
#ஜெயப்பிரகாஷ் நாராயணன் இந்திரா காந்தியைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தன்னோடு சேர்ந்து போராட வருமாறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதற்காக நாடு தழுவிய இயக்கத்தை அவர் கட்டமைத்தார். இவருடன் அன்று சேர்ந்து இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடி சிறை சென்றவர்தான் இன்றைய பீகார் முதல்வர் நிதிஷ்குமார். நாட்டில் உள்ள பழுத்த அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர்.
#இந்திரா காந்தி தனக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் ஒன்றிணையாமல் தடுப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன், எல்.கே. அத்வானி, அடல் பிஹாரி வாஜ்பாய், மொரார்ஜி தேசாய் என ஏராளமான தலைவர்கள் எமர்ஜென்சி காலத்தில் உடனடியாக சிறையிலடைக்கப்பட்டனர்.
#மொத்தம் 21 மாதங்கள் நெருக்கடி நிலை நாட்டில் நடைமுறையிலிருந்தது. அப்படி என்றால் 2 ஆண்டுக்கு சில மாதங்கள்தான் குறைவு. , கட்டாய கருத்தடை, பத்திரிகை தணிக்கை, அரசியலமைப்பு உரிமைகளைப் பறிப்பு, அதிகாரத்தைத் தேசிய மையப்படுத்துதல் ஆகியவை நடைமுறைக்கு வந்தன. இதனால் நாடு முழுவதும் பதற்ற நிலை நிலவியது.
#இறுதியாக 1977ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி நாட்டு மக்கள் தேர்தலுக்குத் தயாராகும்படி அறிவிப்பு வெளியிட்டார் இந்திரா காந்தி. நாடு முழுவதும் மார்ச் 16 முதல் மார்ச் 20 வரை பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து மார்ச் 21, 1977 இல் அவசரநிலை முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இறுதியாக எமெர்ஜென்சியை கொண்டு வந்ததற்காக இந்திரா காந்தி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications