வேட்பு மனுக்களை என்னென்ன காரணங்களுக்கு நிராகரிக்க கூடாது? தேர்தல் ஆணையம் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் விருப்ப மனு தாக்கல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், ஒரு வேட்பாளருடைய வேட்பு மனுக்களை என்னென்ன காரணங்களால் நிராகரிக்கப்பட கூடாது என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் விதிகள் என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. நேற்று (ஏப்.30) வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வரும் 6 ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளே முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற வரும் வரும் 9 ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்கள் உரிய முறையில் நிரப்பப்படாமல் இருந்தால் நிராகரிக்கப்படும். ஒரு வேட்பாளருடைய வேட்பு மனுக்களை என்னெ காரணங்களால் நிராகரிக்க கூடாது என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் விதிகள் என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.
எதெற்கெல்லாம் நிராகரிக்கக்கூடாது:
* குறிப்பிடத்தக்க காரணம் இல்லாமல் யாதொரு பிழையின் அடிப்படையிலும் எந்தவொரு வேட்புமனுவையும் நிராகரிக்கக் கூடாது.
* தொழில்நுட்ப அல்லது எழுத்துப்பிழை காரணமாக ஏற்படும் யாதொரு தவறு அல்லது பிழையை தேர்தல் நடத்தும் அலுவலர் புறக்கணிக்க வேண்டும்.
* வேட்புமனுவில் சின்னங்கள் தொடர்பான அறிவிப்பைக் குறிப்பிடத் தவறியது நிராகரிப்புக்கான காரணமாக இருக்கக்கூடாது.
* 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவர் சட்டத்தின் பிரிவு 36(1) குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் யாரும் ஆய்வுக்கு வரவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் நிராகரிக்கக் கூடாது.
* தேர்தல் நடைபெறும் ஆண்டு, சட்டமன்றத்தின் பெயர் அல்லது தொகுதியின் பெயரில் உள்ள ஏதேனும் சிறிய பிழை. வாக்காளர் பட்டியல் எண் குறித்த விளக்கம். வயது, பெயர் அல்லது வேட்புமனுவிலும் வாக்காளர் பட்டியலிலும் வேட்பாளர் அல்லது அவரது முன்மொழிய கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் உள்ள அற்ப காரணங்களுக்காக வேட்பு மனுவை நிராகரிக்கக் கூடாது.
கூர்ந்தாய்வினை ஒத்திவைத்தல்
ஒரு வேட்பளரின் வேட்புமனுவுக்கு மறுப்பு தெரிவிக்கப்படும் நேர்வில், அதை மறுத்துரைப்பதற்கான நியாயமான வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட வேண்டும். மேலும் தேவைப்படும் தேர்வில் வேட்புமனு தொடர்புடைய கூர்ந்தாய்வு நடைமுறைகள் ஒத்திவைக்கப்படலாம். ஏனைய வேட்பாளர்கள் தொடர்பான கூர்ந்தாய்வு நடைமுறைகள் தொடர வேண்டும்.
வேட்பாளர்கள் தொடர்பான வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாக வழக்கமாக நிர்ணயிக்கப்படும் 3-வது நாளுக்கு பின்னர் அமையாத ஒரு நாளன்று காலை 11.00 மணி வரையிலும் கூர்ந்தாய்வு ஒத்திவைக்கலாம்.
தேர்தல் நடத்தும் அலுவலர் எடுக்கும் முடிவே இறுதியானது
வேட்பாளரின் வேட்புமனுவை தள்ளுபடி செய்வதா அல்லது ஏற்றுக்கொள்வதா என்பது சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரின் முடிவாகும். வழக்கமான நேர்வுகளில் தேர்தல் நடைமுறை முடியும் வரை நீதிமன்றங்கள் மற்றும் தேர்தல் ஆணையம் உட்பட யாதொரு அதிகார மன்றத்தின் யாதொரு மறுஆய்வு அல்லது திருத்தத்திற்கு உட்பட்டது அல்ல. தேர்தல் புகார் மனு வாயிலாக மட்டுமே அம்முடிவினை எதிர்த்து கோரிக்கை எழுப்ப இயலும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications