மிகப்பெரிய மர்மம்.. ஜெயலலிதா மயங்கிய பின் என்ன நடந்தது? ஆறுமுகசாமி சொன்ன அதிர்ச்சி தரும் தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா அவர் தனது வீட்டில் மயக்கம் அடைந்த போது என்ன நடந்தது? அதற்கு பின் என்ன நடந்தது? என்று ஆறுமுகசாமி ஆணையம் ரிப்போர்ட்டில் தெரிவித்து உள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. இந்த ஆணையம் தற்போது அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதில், ஜெயலலிதாவிற்கு இதில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை. இந்த விசாரணையில் சசிகலாவைக் குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது;

சிகிச்சை

சிகிச்சை

இந்த சிகிச்சையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது வெளியான மருத்துவ அறிக்கைகளில் பல்வேறு முரண்பாடுகள் இருந்துள்ளன. ஜெயலலிதா டிச. 5ம் தேதி இறந்தார் என மருத்துவமனை கூறியிருந்த நிலையில் டிச. 4ம் தேதியே இறந்தார் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளன. இந்த அறிக்கையில் இன்னொரு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முரண்பாடு

முரண்பாடு

அதன்படி ஜெயலலிதா மயக்கம் அடைந்த பின் அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அவர் மயக்கம் அடைந்த பின் என்ன நடந்தது என்பதிலேயே பல மர்மங்கள் இருக்கின்றன. அவர் மயக்கம் அடைந்த பின் நடந்தது எல்லாமே மிகப்பெரிய மர்மமாக இருக்கிறது என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதா மயக்கம் அடைந்த பின்தான் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அறிக்கை மர்மம்

அறிக்கை மர்மம்

இதற்கு பின் நடந்த எல்லாமே மர்மமாக இருப்பதாக தற்போது ஆறுமுகசாமி ஆணையம் பரபரப்பு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அப்போலோ மருத்துவமனை முறையாக அறிக்கைகளை வெளியிடவில்லை. ஜெயலலிதாவிற்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்று முறையாக தெரிவிக்கவில்லை. ஜெயலலிதா மருத்துவமனைக்கு செல்லும் முன்பே சில விஷயங்கள் நடந்துள்ளன.

குழப்பம்

குழப்பம்

அவர் மருத்துவமனைக்கு செல்லும் முன்பே சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் தனி மருத்துவர், அவருக்கு உணவு சமைத்து கொடுத்தவர்களின் வாக்குமூலங்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து ஜெயலலிதா வெளியேறிய பின் எல்லாமே மர்மமாக நடந்தேறி உள்ளது என்று இந்த ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக மெதுவாக நடந்து வந்த விசாரணையின் ரிப்போர்ட் தற்போது வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+