ரத்தன் டாடாவின் கடைசி நிமிடங்கள்.. ஐசியூவில் தீவிர சிகிச்சை.. மரணத்திற்கு முன் நடந்தது என்ன?
சென்னை: ரத்தன் டாடாவின் கடைசி நிமிடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரின் மரணத்திற்கு முன் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைகள் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
ரத்தன் டாடா இரண்டு நாட்களுக்கு முன் லேசான உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டார். வயோதிகம் காரணமாக லேசான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மும்பையில் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவரின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டுக்கொண்டே வந்தது. அவரின் உடல்நிலை நேற்று மிகவும் மோசம் அடைந்தது. அதாவது 9ம் தேதி அவரின் உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது. அவரின் உடல்நிலை நேற்று காலையில் இருந்து நிமிடத்திற்கு நிமிடம் நலிவடைந்தது.
நேற்று மாலை 7 மணிக்கு அவர் ஐசியூ வார்டுக்கு மாற்றப்பட்டார். அவர் ஐசியூவில் வார்டில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அங்கே அவருக்கு பல்வேறு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அவருக்கு சுவாச குறைபாடு ஏற்பட்டு உள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
அவரின் பல்ஸ் குறைந்து உள்ளது. அதேபோல் பிரஷர் வெகுவாக குறைந்து உள்ளது. இயற்கையாக ஏற்படும் மரணத்தின் போது உடலில் ஏற்படும் மாற்றங்களே அவருக்கும் ஏற்பட்டு உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக உடல் செயல் இழக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து 11.30 அவரை அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். 11.40 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார்.
அறிக்கை: இது தொடர்பாக டாடா குழும தலைவர் என் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது அளவிட முடியாத பங்களிப்புகள், பணிகள் மூலம் டாடா குழுமத்தை மட்டுமல்ல, நமது தேசத்தின் கட்டமைப்பையும் வடிவமைத்த சிறந்த அசாதாரணமான தலைவரான ரதன் நேவல் டாடா நம்மை விட்டு பிரிந்தார். அவரின் இழப்பின் காரணமாக ஏற்பட்ட கனத்த உணர்வோடு அவரிடம் இருந்து விடைபெறுகிறோம்.
டாடா குழுமத்திற்கு, டாடா ஒரு தலைவராக இருந்தார். எனக்கு, அவர் ஒரு வழிகாட்டி, ஆலோசகர்.. அது மட்டுமல்ல அவர் என் நண்பர். அவர் எனக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தார். அவரின் சிறப்பான செயல்பாடு, ஒருமைப்பாடு மற்றும் புதுமைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு காரணமாக டாடா நிறுவனம் புதிய உச்சத்தை அடைந்தது.
டாடா குழுமம் அவரது அசாத்திய பணிகளின் கீழ் அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்தியது. உலக அளவில் டாடா குழுமம் பறந்து விரிந்த அதே நேரத்தில் அந்த நிறுவனம் திசை மாறாமல்.. அதன் நோக்கத்திற்கு எப்போதும் உண்மையாக இருந்தது.
சமூகத்தின் வளர்ச்சிக்காக டாடாவின் அர்ப்பணிப்பு, அவர் மேற்கொண்ட தொண்டுகள் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையைத் மாற்றி உள்ளது. கல்வி முதல் சுகாதாரம் வரை, அவரது முன்முயற்சிகள், அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பலரின் வாழ்க்கையை மாற்றி உள்ளது. பலரின் வாழ்க்கையில் டாடாவின் அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளன. அவை வரவிருக்கும் தலைமுறைகளுக்கு பயனளிக்கும்.
அவர் தான் செய்த ஒவ்வொரு செயலிலும், பேச்சிலும், தன்னுடைய பணிவான பணப்பை வெளிப்படுத்தினார். முழு டாடா குடும்பத்தின் சார்பாக, அவருடைய அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மிகவும் ஆர்வத்துடன் ஊக்குவித்த கொள்கைகளை நிலைநிறுத்த நாங்கள் பாடுபடுவோம். அவரது மரபு தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்கும் என்று நம்புகிறோம், என்று டாடா குழும தலைவர் என் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications