பொன்முடி வீட்டிற்கு போனால்.. ஷாக்.. அப்படியே ஸ்டன் ஆகி நின்ற அதிகாரிகள்.. எதிர்பார்க்கவே இல்லையே
சென்னை: அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். இன்று அவரின் விழுப்புரம் இல்லத்திற்கு சென்ற அதிகாரிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
சமீபத்தில்தான் இரண்டு முக்கிய வழக்குகளில் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார். நில அபகரிப்பு வழக்கில் சமீபத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 1996 - 2001 காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். இந்த காலகட்டத்தில் அவர் முறைகேடாக நிலம் வாங்கியதாக கூறப்பட்டது. இதில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
அதேபோல் கடந்த 13-5-1996 முதல் 31-3-2002 வரையிலான கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006ஆம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்தனர். இதிலும் போதிய ஆதாரம் இல்லாமல் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில்தான் தற்போது பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. சைதாப்பேட்டை தி நகர் இல்லம், சென்னையில் உள்ள பொன்முடி மகன் இல்லம், விழுப்புரம் இல்லம் உள்ளிட்ட 9 இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
காலை 7 மணி முதல் 5 பேர் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது. விழுப்புரத்தில் உள்ள அமைச்சரின் வீட்டிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்படும் சோதனைக்கு என்ன காரணம் என்று விவரம் வெளியிடப்படவில்லை. சோதனைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
அதிர்ச்சி சம்பவம்: இன்று அவரின் விழுப்புரம் இல்லத்திற்கு சென்ற அதிகாரிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அங்கே அதிகாரிகள் 20 பேர் குவிந்தனர். போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் முதல் கட்டமாக அவரின் வீட்டை துணை ராணுவப்படை சுற்றி வளைத்தனர்.
அவரின் வீட்டை சுற்றி துணை ராணுவப்படை துப்பாக்கியுடன் நிறுத்தப்பட்டனர். அதன்பின் அதிகாரிகள் கேட்டை திறந்து உள்ளே சென்றனர். ஆனால் உள்ளே யாரும் இல்லை. ஒரே ஒரு தோட்டக்காரர் மற்றும் பொன்முடி உதவியாளர் செல்வம் மட்டுமே இருந்தார் என்று கூறப்படுகிறது. மற்றபடி விழுப்புரம் வீடு பூட்டப்பட்டு இருந்தது.
அதை திறக்க ஆள் இல்லை. செல்வம் தன்னிடம் சாவி இல்லை என்றும் கூறி உள்ளார். இதனால் அதிகாரிகள் உள்ளே செல்வதா இல்லையா என்று தெரியாமல் குழப்பத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். என்ன செய்வது என்று தெரியாமல் வெளியே அதிகாரிகள் நிற்கின்றனர். வீட்டிற்கு உள்ளே எப்படி செல்வது என்று தெரியாமல் அதிகாரிகள் வெளியே குவிந்து உள்ளனர்.
சென்னையில் பொன்முடி இல்லத்தில் மட்டும் மொத்தம் 50 அதிகாரிகள் குவிந்து உள்ளனர். அவரின் அலுவலகத்திலும் பல அதிகாரிகள் குவிந்து உள்ளனர்.
அமைச்சர் பொன்முடி இல்லத்தில் நடத்தப்படும் இந்த சோதனையில் துணை ராணுவப்படை குவிக்கப்பட்டு உள்ளது. துணை ராணுவப்படை உதவியுடன் போலீஸ் இல்லாமல் ரெய்டு நடக்கிறது. அமைச்சர் பொன்முடி இப்போது எந்த இல்லத்தில் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை. முதல்வர் ஸ்டாலின் இன்று பெங்களூர் பயணம் மேற்கொள்கிறார். காலை பெங்களூர் செல்லும் அவர் அங்கே நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார்.
24 எதிர்க்கட்சிகளுக்கு கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. நாளை வரை இந்த கூட்டம் நடக்க உள்ளது. தேசிய அளவில் மாநில கட்சிகள், எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக கைகோர்க்க தொடங்கி உள்ளன. திமுக, காங்கிரஸ் , ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்தனர்.
இந்த நிலையில்தான் தற்போது தமிழ்நாட்டில் அமலாக்கத்துறைக்கு ரெய்டு முடுக்கி விடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications